Thursday, August 11, 2016

மாத்யூ ஹேடன்..




ஒரு காட்டு எருமை கடாவினை இரண்டு காலில் நடக்க வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹைடன். மனிதர் கையில் கிரிக்கெட் மட்டை இருந்தாலே குச்சி இருப்பது போலத்தான் இருக்கும், அதிரடியான வீரர் லாராவிற்கே சவால் விட்டவர்


வெள்ளையர்களுக்கு இருக்கும் சில பரந்த மனப்பான்மை அவருக்கும் இருக்கின்றது, அதில் தமிழ்நாடு பிரிமியர் லீக் வியாபார தந்திரமும் இருக்கலாம்.


மனிதர் தென் தமிழகத்தை சுற்றி வருகிறார், அல்வா கிண்டுகிறார், வேட்டி சட்டையில் நெற்றி நிறைய குங்குமத்தோடு அட்டகாசமாக போஸ் கொடுக்கின்றார்,


Image may contain: 1 person , people smiling


மாத்யூ ஹேடென்


hyden


மதுரை அம்மனை அவ்வளவு பக்தியாக கைகூப்பி வணங்குகின்றார்,





(இப்பொழுது பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு வயிறு எரியும், கர்த்தாவே இனி ஆஸ்திரேலியா அணி ஜிம்பாப்வே அளவிற்கு சீரழிய கட்டளை இடும் அய்யா........என கதறுவார்கள்)

சும்மா சொல்ல கூடாது, ஆசாமி கம்பீரமாகத்தான் வேட்டி சட்டையில் ஜொலிக்கின்றார்

ஆனால் நம்மவர்கள் எப்படி பட்டவர்கள்? லண்டன் எமிஜாக்சனே சினிமாவில் நடிக்கும் பொழுது நீங்கள் நடிக்க கூடாதா? அருமையான வெளிநாட்டு தீவிரவாதி அல்லது கிரிக்கெட் படம் இருக்கின்றது, நீங்கள் தமிழ்பேசினால் போதும் கிரிக்கெட் இங்கே நாடி நரம்பெல்லாம் ஊறி இருக்கின்றது, கிரிகெட்டும் தமிழும் கலந்தால் போதும்.

சூப்பராக அள்ளலாம் என அழைப்பார்கள்

போத்தீஸ் போன்ற நிறுவணங்கள், ஹைடனை கம்பீரத்திற்கு எமது வேட்டியே காரணம் என சொல்லி விளம்பரத்திற்கு அழைக்கலாம்

ஆனால் சாத்தியமா என்றால் குறைவு

அவர் கேட்கும் சம்பளத்தில் 10 படம் எடுக்கலாம், அல்லது போத்தீஸ் 5 கடை திறக்கலாம். ஏற்கனவே சிங்கம் லாராவிடம் அணுகிய அனுபவம் பலருக்கு உண்டு.

சொல்லமுடியாது ஒருவேளை ஹர்பஜன் சிங்கினை வில்லனாக போட்டால் சினிமாவிற்கு ஹைடன் ஒப்புகொள்ள வாய்ப்பு வரலாம் :)







No comments:

Post a Comment