Saturday, August 6, 2016

காமெடி வில்லனாகிவிட்டார் டொனால்டு டிரம்ப்.




அமெரிக்காவின் பெரும் காமெடி வில்லனாகிவிட்டார் டொனால்டு டிரம்ப்.





Image may contain: 1 person , suit and close-up


அதாவது ஒபாமா அரசாங்கத்தை, ஹிலாரியினை சாடுகிறேன் என்ற வகையில் நாட்டின் ரகசியங்களை எல்லாம் எடுத்து விளாசுகிறார். "மிஸ்டர் டிரம்ப் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் தெரியுமா? இது நாட்டின் சென்ஸ்டிவான விவகாரம்" என தமிழ்பேசும் ஆங்கில படங்கள் போல பலர் சொன்னாலும் டிரம்ப் விடுவதாக இல்லை





அப்படித்தான் ஐ.எஸ் இயக்கம் அமெரிக்காவால் உருவாக்கபட்டது என சொல்லி பரபரப்பினை ஏற்படுத்தினார், அது ஒன்றும் பரமரகசியம் இல்லை எனினும் ஒரு அதிபர் வேட்பாளர் சொல்லி இருப்பது ஆச்சரியமானது


அதோடு விட்டாரா? இன்று ஹிரோஷிமா நினைவு தினம். இரு அணுகுண்டுகளை வாங்கிய ஜப்பான், இப்போது வடகொரிய வெள்ளை தக்காளியின் அணுகுண்டு மிரட்டலில் சிக்கி இருக்கின்றது

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்கா இரணாம் உலகப்போரில் பின்னி பெடலெடுத்த நாடுகளுடன் அவர்களுக்கொரு ரகசிய ஒப்பந்தம் உண்டு, அதாவது இந்நாடுகள் இனி ராணுவம் வைக்க கூடாது, அவர்களின் பாதுகாப்பினை அமெரிக்கா ஏற்கும்,

ஒரு வகையில் அது அச்சம் கூட, ஜெர்மனோ, அணுகுண்டு வாங்கிய ஜப்பானோ தன்னை தாக்கலாம், அதனால் கூடவே வைத்து கண்காணிக்கும் ராஜதந்திரம், இல்லாவிட்டால் நாயகன் பட கிளைமேக்ஸ் போல எவனாவது நீ தானே எங்க ஹிட்லரை அல்லது ஹிட்சாக்கை கொன்றாய் என அமெரிக்கா மீது பாயலாம் அல்லவா?

அப்படி ஜெர்மன், ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பு பொறுப்பு இன்று அமெரிக்காவுடையது, கூடவே தென்கொரியா, தைவான் , சவுதி, குவைத் என அது பராமரிக்கும் ராணுவ செலவு அதிகம். அதற்கு வசமாக வசூலும் செய்வார்கள் என்பது வேறு விஷயம்.

இங்கே தான் இன்று குதித்திருக்கின்றார் டிரம்ப். அதாவது ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் , சவுதிக்கும் நாம் ஏன் பாதுகாப்பளிக்கவேண்டும், அவர்களிடமிருந்து பெரும் தொகை கறக்கவேண்டும், இல்லாவிட்டால் அவர்களை கழற்றிவிடுங்கள் எனும் ரீதியில் பேசியிருக்கின்றார்

விவரமறிந்த அமெரிக்கர்கள் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டனர், சர்வதேச ரீதியில் அது சிக்கலாகிறது,

ஜெர்மன் நாங்கள் கேட்டோமா என்கிறது, ஜப்பான் "எங்கள் பழைய குணம் தெரியுமல்லவா, முன்பு நடமாடிகொண்டிருந்த டிராகன் இப்போது உள்ளே உறங்கி கொண்டிருக்கின்றது, அதை தட்டி எழுப்பாதீர்கள், தாங்கமாட்டீர்கள்.." என்கிறது

காரணம் ஜெர்மனும், ஜப்பானும் அடக்கி வைக்கபட்டிருக்கும் பூதங்கள். கொஞ்சம் அவிழ்த்துவிட்டால் அவை விஸ்வரூபமெடுக்கும்

இப்படி டிரம்ப் சொல்ல சொல்ல, இவர் ரஷ்யாவின் உளவாளி என அமெரிக்கர்களே சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்

இன்னும் என்னவெல்லாம் சொல்லபோகின்றாரோ

மனிதருக்கு இன்னும் 2 மாதம் டைம் இருக்கின்றது, அதற்குள் பாகிஸ்தானுக்கு எப்படி எல்லாம் இந்தியாவினை எதிர்க்க அமெரிக்கா கொம்பு சீவிற்று, எப்படி எல்லாம் அந்நாடு மூலம் இந்தியாவின் நிம்மதியினை கெடுத்தார்கள் என்றெல்லாம் அவர் சொல்வார் என நம்பலாம்

நிச்சயம் டிரம்ப் சொல்வார், அவரை நம்பலாம். அவர் சொல்லாமல் யார்ர் சொல்வார்

சும்மா சொல்லகூடாது மனிதர் பிய்த்து உதறுகின்றார்.















No comments:

Post a Comment