Tuesday, August 23, 2016

திருத்தொண்டர்கள்

முன்பெல்லாம் திருத்தொண்டர்கள் இருந்தார்கள், ஆழ்வார்களும் நாயன்மார்களும் அப்படியே அழைக்கபட்டார்கள்

சில மன்னர்கள் கூட தங்களை திருதொண்டர்கள் என அழைத்து ஆலயபணிகள் செய்தனர்.

உழவாரபணிகளில் கூட ஈடுபடும் சில் திருதொண்டர்களை கூட தெரியும்.

இப்பொழுதெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கும் திருதொண்டர்கள் இருக்கின்றார்களாம்,

தொண்டருக்கு விபூதி தயாரிப்பு, பஞ்சாமிர்தம் தயாரிப்பு,பூ கட்டுதல் என பலவேலைகள் இருந்தால் நியாயம், அட புளியோதரை, வெண் பொங்கல் செய்தாலும் அர்த்தமுண்டு

ஆனால் வெடிகுண்டு செய்வது எந்த சாமியினை அர்ச்சிக்க? அல்லது எந்த பக்தருக்கு பிரசாதமாக கொடுக்க?

மற்ற மதத்துகாரன் செய்தால் தீவிரவாதி, தொழில் முறையில் செய்தால் அனுமதியற்ற வெடிபொருள் குற்றம். ஆனால் அவர்கள் செய்தால் தொண்டர்கள்.

பாபர் மசூதியினை இடிக்க கிளம்பியனை எல்லாம் "கர சேவகர்கள்" என அழைத்த நாட்டில், வெடிகுண்டு செய்பவனை தொண்டர் என அழைப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கின்றது?

நவீன "திருத்தொண்டர் புராணம்" வெடிகுண்டு செய்பவர்களையும், சில அபாயமானவர்களையும் பற்றி எழுதபட்டு கொண்டிருக்கின்றது

No comments:

Post a Comment