Friday, August 12, 2016

புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்காகத்தான் போராடியிருக்கின்றார்கள்...

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டும் பேச்சே இல்லை, இலங்கை அதிபர் அறிவிப்பு


கொஞ்ச நாளைக்கு முன்புதான் டெல்லி பாராளுமன்றத்தில் நிதின் கட்காரி பாலம் கட்டுவோம் என அறிவித்திருந்தார், அதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழும்பிற்று


விடகூடாது, இது இந்தியாவின் 30ம் மாநிலமாக இந்தியாவினை இணைக்கும் திட்டம், பாலத்தை குண்டு வைத்து தர்ப்போம், பாலம் கட்டினால் தமிழக தமிழர்கள் வந்து நம்மை தாக்கி அபகரிப்பர் (சீமான் எப்படி பயம்காட்டியிருக்கின்றார் :) ) எனவே பாலம் வேண்டாம் என பயங்கர ஆர்ப்பாட்டம்




இந்தியா பாலம் அமைப்போம் என சொன்னதும் அப்படித்தான், வட இலங்கை முழுக்க ஆதிக்கம் செலுத்த வாய்ப்புண்டு


இலங்கை அந்த காலத்திலிருந்தே இப்படித்தான், ஒரு நேரம் பணிவார்கள், ஒரு நேரம் சீறுவார்கள். அவர்களை அடக்க அந்த இந்திரா காந்தி பாணிதான் சரி


சரி இந்தியா என்ன செய்யலாம்?, ஓகே பாலம் வேண்டாம், அந்த சேது சமுத்திர திட்டத்தை தொடங்கட்டுமா என கேட்டாலே போதும், இலங்கைக்கு சப்தநாடியும் அடங்கும், அது தொடங்கிவிட்டால் கொழும்பு துறைமுகத்தில் தூண்டில் போடத்தான் முடியும்


ஆனால் பாஜ அரசு கேட்க முடியாது, காரணாம் ராமர் பாலம் என சிக்கலை தொடங்கியதே இவர்கள்தான், இனி தொட்டால் அவ்வளவுதான் வாரனாசி தொகுதியிலே மோடியினை ஓட ஓட சாமியார்கள் விரட்டுவார்கள்.


சில இஸ்லாமிய அமைப்புகளிடம் ஈரான், புத்த அமைப்புகள் கையில் இலங்கை போல சில மத கூட்டத்தின் கையில் இந்திய அரசும் சிக்கி இருப்பது ஒரு வகை கொடுமை.


சரி இப்படி அப்பட்டமாக கரி பூசியதற்கு இந்திய பதிலடி எப்படி இருக்க போகின்றது என தெரியாது, ஆனால் சரணடைந்த புலிகளுக்கு விஷ மருந்து கொடுத்தது இலங்கை, 10 ஆயிரம் புலிகளை காணவில்லை, எல்லோரையும் கொன்றிருக்கலாம் என ஒரு புது சர்ச்சை இலங்கை தூக்கத்தை கெடுக்கின்றது


காரணம் யுத்த குற்றங்களை தாண்டலாம், ஆனால் சரணடைந்தவர்களை கொன்றால் அது பெரும் சர்வதேச தலைவலியினை கொடுக்கும்


அது..வந்து..புலிகள் குண்டு புகையில் சிக்கி, உணவில்லாமல் போரிட்டு..மன சஞ்சலமாகி..உடல் நலம் குன்றி...ஆங் ஆனால் எம்மிடம் சிக்கிவிட்டு பின் வெளிநாடு சென்ற புலிகள் எல்லாம் நலமாகத்தானே இருக்கின்றனர், என என்னவெல்லாமோ சொல்லி சமாளிக்கின்றது இலங்கை.


இந்திய உதட்டு ஓரம் ஒரு மர்மபுன்னகை


ஒரு குட்டிநாடு தன்னை மிரட்டுவதா என்றுதான் களமிறங்கினார் இந்திரா, இந்திய தளம் அங்கில்லாமல் இதற்கு தீர்வில்லை என்றுதான் மிக தைரியமாக ராணுவத்தை அனுப்பினார் ராஜிவ்


இன்று தமிழருக்கும் தீர்வில்லை, இந்தியாவிற்கும் மிரட்டல் நீடிக்கின்றது


இது எதனால், யாரால் என்றால்?, முடிவு உங்களுக்கே தெரியும்


அவர்கள் ஒருவரையும் வாழவைக்கவும் இல்லை, அவர்களால் யாருக்கும் நன்மை விளைந்ததுமில்லை. புலிகளால்சகல நன்மையும் விளைந்ததென்றால் அது சிங்களனுக்கே


அவ்வகையில் மனதிற்குள் ஒவ்வொரு சிங்களனும் பிரபாகரனை வணங்கிகொண்டே இருப்பான்.


தமிழருக்காக போராடுகிறேன் என சொல்லி, தன்னையும் அறியாமல் சிங்களனுக்கு பிரபாகரன் செய்திருக்கும் உதவிகள் கோடி கோடியானவை.


உண்மையில் சொல்லபோனால் புலிகள் ஒன்றுபட்ட இலங்கைக்காகத்தான் போராடியிருக்கின்றார்கள், வரலாறு அப்படித்தான் பதிந்துகொண்டிருக்கின்றது



No comments:

Post a Comment