Wednesday, July 26, 2017

புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள்

"ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள், நியாயம் வென்றது, நீதி வென்றது, வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி


சரி, யுத்ததின் போது தடையினை அவர்கள்தான் போட்டிருந்தார்கள் ஏன்?


அது அப்பொழுது, இப்பொழுது புலிகளை உலகம் மதிக்கின்றது, இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி




சரி, அடுத்து என்ன செய்வீர்கள்?


அதெல்லாம் தெரியாது, இது மாபெரும் வெற்றி


ஐரோப்பாவில் இருந்து படைதிரட்டி வந்து யுத்தம் தொடங்குவீர்களா?


யுத்தமா? அதெல்லாம் எதற்கு? இது உனக்கு புரியாது, பெரும் வெற்றி


அதவது 2006ல் தீவிரவாதிகள் என புலிகளை சொன்ன ஐரோப்பிய ஒன்றியம், புலிகள் அழிந்தபின் அவர்களுக்கு தடையில்லை என்றால் அவர்கள் நல்லவர்கள்?


ஆம், அவர்கள் உத்தமர்கள், எங்கள் நியாயம் புரிந்திருக்கின்றது


கலைஞரும் தான் 2009l உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார், தமிழ்செல்வன் கொலைக்கெல்லாம் கண்டனம் தெரிவித்தார், யுத்தம் நிறுத்தபடவேண்டும் என்றார், அவரை ஏன் திட்டுகின்றீர்கள்?


இல்லை அவர் துரோகி, அவரை மன்னிக்கவே முடியாது


2009ல் சிங்களனோடு சேர்ந்து புலிகளை கொன்ற ஐரோப்பிய யூனியன் இப்பொழுது மட்டும் உங்களுக்கு தியாகியாக தெரிவது எப்படி?


அது..இ'து.. இல்லை இல்லை ஐரோப்பா வாழ்க, கலைஞர் ஒழிக‌..


அழிந்துவிட்ட இயக்கத்திற்கு அந்த தடை இருந்தால் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன?ஈழப்போர் தொடங்குமா?


போய்யா , போர் யாருக்கு வேண்டும்? இனி வசூல் செய்ய தடை இருக்காது அது போதாதா, யுத்தம் தொடங்கும் என‌ நாலு பொய்களை அள்ளிவிட்டால் அள்ளிவிடலாம், வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி



No comments:

Post a Comment