Thursday, July 27, 2017

நாட்டிற்கு உழைத்த பெருமகனிற்கு ஒரு மணி மண்டபம் ...

modi-kalam-memmorial00-27-1501147929.jpg


நாட்டிற்கு உழைத்த ஒரு பெருமகனிற்கு மணிமண்டபம் திறக்கபடுகின்றது, மோடி கடலடிக்கு சென்றாலும் பின்னாலே செல்லும் எடப்பாடி கடற்கரைக்கு செல்வதில் ஆச்சரியமில்லை


ஆனால் அன்று கலாம் மறைந்தபொழுது இந்த அதிமுக தலமை அவரை அவமானபடுத்த்தியது, பழனிச்சாமி என்றொருவர் இருப்பது அப்பொழுது அவர் தொகுதி மக்களுக்கே சரியாக தெரியாது


இன்று ஒருவரிடமிருந்து தப்பித்து இன்னொருவருக்கு அடிமையான பழனிச்சாமி முதல்வர் என்றவகையில் கலாமின் மணிமண்டபத்திற்கு சென்றிருக்கின்றார் வாழ்த்துக்கள்.




இந்த பொறுப்பான எதிர்கட்சி தலைவர், அடுத்த தமிழக முதல்வர் என சொல்லபடுபவர் என்ன செய்திருக்கின்றார்?


அட வாழ்த்து தெரிவிக்காவிட்டாலோ, கலாமிற்கு அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பராவாயில்லை, திடீரென கோயம்புத்தூர் சென்று சர்ர்சை செய்திருக்கின்றார்


ஏன் அப்பக்கம் செல்ல வேறு நாளே கிடையாதா? மிக சரியாக இந்தநாளில்தான் செல்லவேண்டுமா?


அப்படி எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென்றால் கதிராமங்கலம், நெடுவாசல் என செல்லல்லாம், அதனையும் தாண்டி அப்பிரச்சினை சார்பாக மோடியினை பார்த்து ஏதாவது செய்திருக்கலாம்


மாறாக ஏதோ செய்வதாக செய்து மிகபெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் ஸ்டாலின்


ஒரு பக்குவபட்ட அரசியல்வாதி இதனை செய்யமாட்டான், இது அப்பட்டமான அரசியல் என தெரிகின்றது, ஓரளவு அரசியலை நோக்குபவர்கள் ஹா..ஹா..ஹா என சிரிக்கின்றார்கள், சிலர் முகம் சுளிக்கின்றார்கள்


என்ன ஆச்சு ஸ்டாலிலுக்கு? இப்படியா சடாரென்று சறுக்குவார்? மிக மிக பரிதாபமான அரசியல் இது.


நிச்சயமாக ஸ்டாலினின் மரியாதை சரிந்துவிழும் நேரம், தனக்கான கறையினை தேடி சென்று அப்பிகொள்கின்றார்


இது இந்தியாவின் ஒரு மாநிலம், மற்றபடி நாமெல்லாம் இந்தியர்கள். மக்கள் விரும்பினால் யாரும் ஆளலாம், முதல்வராகலாம்


மாறாக இது என்னமோ தனிநாடு போலவும், மோடி ஏதோ அழையா விருந்தாளி போலவும், அப்துல் கலாம் வீணாய் போனவர் போலவும், திமுக நடந்துகொள்வது அதன் எதிர்கால அரசியலுக்கு சுத்தமாக ஏற்றது அல்ல, பொறுப்பான எதிர்கட்சி தலைவருக்கு சரியே அல்ல..


மாறிவிட்ட காலங்களில் பழங்கால அரசியல் எல்லாம் சரிவராது, ஸ்டாலின் இன்னும் 1960களின் பாணியிலே இருக்கின்றார்.


நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்தால் ஸ்டாலின் என்ன செய்வார்? திருநெல்வேலி பக்கம் ஏரிபார்க்க சென்றுவிடுவாரோ???



No comments:

Post a Comment