Friday, July 21, 2017

பிக் பாஸ் : ஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவா?

 



Image may contain: 1 person, smiling, standingஓவியாவிற்கு இவ்வளவு ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கவில்லை,


மதுரைக்காரரும், மலேசியாவின் கல்லூரி பேராசிரியரும், பொருளாதார மேதையுமான நண்பர் Omm Prakash ஓவியாவிற்கு ஆதரவு என தெரிவிக்கும் பொழுதுதான் நிலமையின் வீரியம் புரிகின்றது





பெரும் முனிவர்களை கூட தன் ஆதரவு பக்கம் இழுக்கின்றார் ஓவியா என்றால் இது நோக்கவேண்டிய விஷயம்

நண்பர் இன்னும் திருமணம் ஆகாதவர், "தவ வாழ்வு" வாழ்பவர், நைஷ்டிக பிரம்மச்சாரி. ஆண்டவன் கட்டளை சிவாஜி போல பேராசிரியராக கடமையே வெற்றிக்கு வழி என வாழ்பவர்

உலகின் எல்லா நாட்டு பெண்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தும் அவரை எந்த பெண்ணாலும் அடித்து வீழ்த்த முடியவில்லை, அவரின் கட்டுப்பாடான வாழ்வு அப்படி.

ஆசிய, ஆப்ரிக்க, அரேபிய அழகிகளை எல்லாம் சிரித்துகொண்டே கடந்து சென்ற கட்டுறுதி மிக்க நண்பர் அவர்.

அவர் எந்த பெண்ணாவது நின்றால் கூட சிசிடிவி கண்ட சசிகலா போல ஓடிவிடுவார், அல்லது அடித்து விரட்டிவிடுவார்

வாய்ப்பே இல்லாமல் ராமனாக இருப்பது சாதனை அல்ல, அனுதினமும் ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் அப்படி இருப்பதுதான் சாதனை.

நண்பர் அப்படிபட்ட‌ அப்படி சாதனையாளர்.

எத்தனையொ சினிமா பார்த்தாலும் மனிதர் எந்த நடிகையினையும் அழகு என்று சொன்னதே இல்லை, சின்னதம்பி படம் போட்டு காட்டியபின்னும் மனிதர் அசரவில்லை என்றால் இது மானிட ஜென்மமே அல்ல, இவர் மனம் மண்ணால் செய்யபட்டது என என்றோ முடிவு செய்தாயிற்று

அப்படிபட்ட மாமனிதர், இரும்பு மனத்தோன், "தவ வாழ்வு" வாழ்பவர் ஓவியாவிற்கு ஆதரவாக கொடிபிடிக்க கிளம்புகின்றார் என்றால் இனி ஓவியாவிற்கு பிக்பாஸ், பிக்லேடி பட்டம் கொடுத்து இப்பொழுதே அனுப்பலாம்

அந்த மேனகை இன்னும் எத்தனை விசுவாமித்திரர்களை வீழ்த்தபோகின்றதோ தெரியவில்லை, அதற்குள் அந்த பிக்பாஸ் எனும் நெற்றிகண்ணன் தன் ஆட்டத்தை முடித்துகொள்வது நல்லது.

( நண்பர் Sadhu Sadhath இதெற்கெல்லாம் அச்சபடலாமா? இதோ கலஹாசனை கண்டு அதிமுக அஞ்சுகின்றது, திமுக அஞ்சுமா? நடக்காது

தன் பலம் அறிந்த யாரும் இன்னொருவரை பார்த்து அஞ்சமாட்டார்கள்

அதுவும் குஷ்பூ கோயில் கோபுரம், ஓவியா காற்றில் உயர பறக்கும் பட்டம், அது எப்படி கோபுரத்திற்கு ஈடாகும்?, ஆகவே ஆகாது.)








பிக்பாஸில் ஏதோ வைரத்தை காணவில்லையாம், அவர்கள் தேட தேட மொத்த தமிழகமும் அவர்களோடு சேர்ந்து தெடுகின்றது


அங்கே சிறைக்குள் சசிகலா இல்லை என ரூபா என்றொரு அதிகாரி தனியாக தேடிகொண்டிருந்தார், இங்கு ஒரு சத்தமும் இல்லை







 




அசரீரியாக பேசும் பிக்பாஸ், என்னவெல்லாமோ பூதம் போல மறைமுகமாக வீட்டில் கொண்டு வைக்கும் பிக்பாஸ், ஜூலிக்கு வயிற்றுவலி என்றால் மட்டும் கண்ணை மூடி கொள்வாராம்



நர்ஸ் என சொல்லிகொள்ளும் ஜூலிக்கும் என்ன செய்ய என தெரியாதாம், (சவத்து மூதி போலி நர்சாக இருக்குமோ?)


சிநேகன் உடனே சென்று அவர் வாந்தியினை தாங்க கைநீட்டுவாராம், நாம் இதனை நம்ப வேண்டுமாம்.





டேய் சுடுகாட்டு மூஞ்சி, இந்த நடிப்பை எல்லாம் பாக்யராஜ் டார்லிங் டார்லிங் படத்திலே நடித்துவிட்டார், புதிதாக எதாவது முயற்சி செய்

ஏம்பா பிக்பாஸ், ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பி அந்த ஜூலியினை அவர் பணியாற்றிய பழைய மருத்துவ மனைக்கே அனுப்பிவைக்க கூடாதா?

முதலில் உன் முகத்தை காட்டு மிஸ்டர் பிக்பாஸ், அதில் ஏகபட்ட குத்துக்கள் குத்த வேண்டியிருக்கின்றது.







 

 


 



 

No comments:

Post a Comment