Showing posts with label பிக் பாஸ். Show all posts
Showing posts with label பிக் பாஸ். Show all posts

Tuesday, August 29, 2017

பிக்பாஸ் : எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?




Image may contain: 1 person, standingஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் அவமானபடுவோம் என முன்பே கணித்துத்தான் அதனை திருப்ப கமலஹாசன் தமிழக அரசை அடிக்கடி சீண்டுகின்றாரோ என நினைக்க தோன்றுகின்றது.


காரணம் அவருக்கு அந்நிகழ்ச்சி பெரும் அவமானம், சந்தேகமே இன்றி சொல்லலாம்


ஒரு போட்டி என்றால், ஒருவர் வெளியே சென்றால் சென்றதாகத்தான் இருக்கவேண்டும், அதுதான் ஆட்டம். அல்லது புதிது புதிதாக இறக்காமலாவது இருக்கவேண்டும்




இங்கு இரண்டுமே இல்லை


புதிதாக வந்துகொண்டே இருக்கின்றார்கள், சென்றவர்களும் திரும்பிகொண்டே இருக்கின்றார்கள்


இந்த ஆர்த்தி, ஜூலி எல்லாம் ரசிகர்களால் வாக்களிக்கபட்டு வெளியேற்றபட்டவர்கள், இன்று மறுபடியும் அவர்களுக்கு கதவினை பிக்பாஸ் திறந்திருக்கின்றார்


ரசிகர்கள் வாக்களித்து வெளியேற்றியவர்களை , ரசிகர்களை கேட்காமலே உள் இழுத்துபோடுவது பார்வையாளர் முகத்த்தில் காரி துப்புவது போன்றது.


அங்கிள் சைமன் பாணியில் கேட்பதாக இருந்தால் " ஏண்டா, அவ்வளவு கேணபயலுகளா நாங்க, வோட்டு போடுண்ணு சொல்லுவ, நாங்க போடனும் அப்புறம் உன் இஷ்டத்து அனுப்பி வைப்ப‌


அப்ப நங்க என்ன ... க்கு பார்க்கணும்,


எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?, கேட்க நாதி இல்லையே, இந்த அநீதியினை கேட்க நாதி இல்லையே, அந்த கமலஹாசனுக்கும் கொஞ்சமும் சிந்தனை இல்லையே"


தன்னால் வெளிஅனுப்பி வைத்தவர்களை மறுபடியும் அழைத்து பல்லை காட்டிகொண்டிருப்பதால் கமலஹாசன் என்பவருக்கு சுத்தமாக மானமில்லை


இனியும் பிக்பாஸ் பார்த்துகொண்டிருந்தால் பார்பவனுக்கு மானமில்லை,


இந்த பகிரங்க மோசடியினை கூட கண்டிக்க தயங்கும் கமலஹாசன், தமிழக அமைச்சர்களை கண்டிக்கும் உரிமையினை இழந்துவிட்டார்.


தமிழக அமைச்சர்களுக்கு மானமில்லை வெட்கமில்லை என்பது உலகிற்கு தெரிந்தது, அதே வரிசையில் தான் கமலஹாசனும் இருக்கின்றார்.


அவர்கள் செய்வது அரசியல் மோசடி என்றால் இவர் செய்வது இன்னொரு வகை மோசடி.


அவர்கள் அவர்களின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார்கள், இவர் இவரின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார், ஆக இருவருமே வாக்களித்தவர்களை ஏமாற்றிகொண்டிருக்கின்றார்கள்


இந்த பிக்பாஸின் அடிமை, அந்த பிக்பாஸின் அடிமைகளை கேள்வி கேட்க என்ன இருக்கின்றது?


இனி அவர் அமைச்சர்களை என்றாவது சீண்டட்டும், அன்று இருக்கின்றது அவருக்கு.


அவர்களை சீண்ட / கண்டிக்க‌ இவருக்கு எந்த தகுதியும் இனி இல்லை..


ஒரு அடிமை இன்னொரு அடிமையினை எப்படி கேள்வி கேட்க முடியும்? அல்லது ஒரு சந்தர்ப்பவாதி இன்னொரு சந்தர்ப பிழைப்புவாதியினை எப்படி கண்டிக்க முடியும்?















 




 


Monday, August 21, 2017

காயத்திரியினை வெளியே அனுப்பினார்

எல்லோரையும் கேள்விகேட்டு திணறடிக்கும் கமலஹாசன், சத்தமே இல்லாமல் காயத்திரியினை வெளியே அனுப்பினார். மிக கடினமாக ஒரு வார்த்தையுமில்லை


எவ்வளவு சர்ச்சைகளை கிளப்பினார் காயத்திரி, அதனை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காத கமலஹாசன் என்ன "ஹேருக்கு" அங்கு ஏதோ கிழித்தவர் போல நிகழ்ச்சி நடத்த வேண்டும்?


அம்மணியின் பின்புலம் அவ்வளவு வலுவானது போல,




கடைசிவரை தான் காயத்திரி தாசன் என்பதை கமல் நிருபித்துவிட்டார்.


ஆனாலும் காயத்திரி வெளியேறுவதை மிக ரசித்து ரசித்து பார்க்க முடிந்தது. இப்படியே இந்த சிநேகனைனையும் அனுப்புவதை கண்ணார கண்டுவிட்டால் பிக்பாசை மொத்தமாக தலை முழுகிவிடலாம்..









 



Friday, August 18, 2017

ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்...


https://youtu.be/AisoEzRAb4Y

இந்த ஓவியா பிக்பாஸில் இருக்கும்வரை நல்ல சுதந்திரம் இருந்தது, என்ன செய்தாலும் பாகம்பிரியாள் கண்டுகொள்வதே இல்லை.


எதிர்த்த வீட்டு சீனப்பெண்ணுடன் பேசினாலும் கண்டுகொள்ளாத அளவு பெரும் சுதந்திரம் இருந்தது.


வீட்டை எப்படி அலங்கோலமாக்கி வைத்திருந்தாலும் கண்டு கொள்ளவே இல்லை.




இப்பொழுது ஓவியா களத்தில் இல்லை என்பதால் மறுபடியும் நம் மீதான கண்காணிப்பு அதிகரித்துவிட்டது, "அங்கே என்ன பார்வை? , இப்பொழுது ஏன் வாட்சப்?, அந்த புத்தகத்தை எவ்வளவு நாளாக படிப்பீர்கள்? " என பழைய பார்மிற்கு வந்துவிட்டார் பாகம்பிரியாள்


"ஏய் ஆரவ் , என் சாபம் உன்னை சும்மாவே விடாது, நீ சீக்கிரம் இந்தியாவிட்டே ஓடிவிட சபிக்கின்றேன்.."


யாராவது அந்த ஓவியாவினை மறுபடியும் உள்ளே பிடித்து போட்டால் மிக நன்றாகத்தான் இருக்கும்,


என்ன செலவானாலும் சரி, ஓவியாவினை மறுபடி கொண்டுவர நிதி திரட்டினால் முதல் பங்கு என்னுடையது.




 

Thursday, August 17, 2017

பிக் பாஸ் .. புதிய வரவுகள் ....




Image may contain: 2 people, people sittingசுஜா என்றொரு நடிகையினை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிவிட்டாயிற்று.


உடனே அவர் "அயிட்டம் டான்சர்" என முகம் சுழிப்பது யாரென்றால் காயூ ஆண்டி& கோ


பிரபுதேவா மீது காயூ ஆண்டி கால் போட்டு ஆடியதெல்லாம் என்ன யோகா நிகழ்ச்சியா?





பிந்துமாதவி ஆடாத ஆட்டமா? ஓடாத ஓட்டமா?

Image may contain: one or more people and outdoorசரி நமீதா என்றொருவர் முன்பு காயூ ஆண்டியிடம் கொஞ்சி கொண்டிருந்தாரே? அவர் என்ன ஸிரிவித்யா போல தளைய தளைய பட்டுபுடவையில் மட்டும் வந்தவரா?

நமீதா போன்றதொரு "டவுசர்" ஆட்டகாரியினை எங்காவது உலகில் காண முடியுமா?

இதில் இந்த சுஜா மட்டும்தான் ஐட்டம் டான்சராம்

அட பதர்களா? " நீங்கள்எ ல்லாம் ஒரே இனம்" என்பது யாருக்கு தெரியாது???

அட அவ்வளவு ஏன்? அந்த கமலஹாசனே கோவணமும் சில நேரங்களில் அதுவும் இல்லாமல் கேமரா முன் நின்ற "ஐயிட்டம் பாய்" அல்லவா?

அது கூட மறந்துவிட்டதா?














 


 

Saturday, August 12, 2017

கமலஹாசா.. காயத்திரி தாசா





Image may contain: 1 person, smiling, close-upImage may contain: 1 person, smiling, close-upபிந்துமாதவி சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய உறவினர் போலவே இருப்பது ஆச்சரியம்.


ஆனால் சில்க் ஸ்மிதாவின் காந்த‌ கண்கள் மட்டும் மிஸ்ஸிங்.


அடேய் இருட்டு மூஞ்சி திருட்டு முழி சிநேகா.. தமிழ்தாய் வாழ்த்து எழுதியவரை தெரியாத நீயெல்லாம் தமிழ் கவிஞனா?




அந்த பின்மண்டை முடியினை இழுத்து வைத்து கேட்கின்றோம்..


டேய் தருமி, எவனோ மண்டபத்தில் எழுதிய பாடலை இசையமைப்பாளரிடம் சொல்லி நீ எல்லாம் கவிஞனாகிவிட்டாய் அப்படித்தானே? உண்மையினை சொல்.





 








ஏம்பா பிக்பாஸ்?, அந்த காயத்திரி எங்கள் செல்லபிள்ளை அதனால் வெளியே விடமாட்டோம் என நேரடியாக சொன்னால்தான் என்ன?


ஏன் இப்படியெல்லாம் நாடகம் ஆடி உள்ளே வைக்கவேண்டும்?


எலிமினேட் ஆகபோவரை எல்லாம் ஒருவாரம் விட்டுபிடித்துத்தான் வெளியேற்றுவார்கள்.




ஆனால் காயத்திரியினை மட்டும் அவசரமாக காப்பாற்றும் மர்மம் என்ன? வோட்டு போட்டவன் எல்லாம் ஓவியா போல மனநிலை பாதிக்கபட்டவனா?


அங்கிள் சைமன் பாணியில் கேட்பதாக இருந்தால் 
" ஏண்டா..வோட்டு போட்ட நாங்க என்ன பைத்தியகார பய மக்களா?


நாதியில்லையே.. இத கேட்க நாதியற்ற இனமாக போய்விட்டோமே என் உறவே".


இதனை எல்லாம் விட்டுவிட்டு விந்திய மலை, திராவிடம், தன்மானம் என என்னவெல்லாம் ஏனய்யா பேசிகொண்டிருக்கின்றீர் கமல்??? எரிச்சலாக வருகின்றது.


கமலஹாசா.. காயத்திரி தாசா இன்னுமா நடிக்க போகின்றீர்







 

Tuesday, August 8, 2017

முத்த பிரச்சினை ....

https://youtu.be/Uxo1P5lWsoQ



தமிழகம் கண்ட முத்தபிரச்சினையில் இந்த பிரச்சினைதான் பெரும் பிரச்சினையாக வரலாறு சொல்கின்றது.


ஆனால் ஓவியாவின் முத்த பிரச்சினை பரவிய அளவுக்கு இந்த முத்த பிரச்சினை பரவவில்லை என்பதுதான் விஷயம்..



 






Image may contain: 2 people, text












பிக்பாஸ் ஆரவ்...




Image may contain: 1 person, beardஅரவம் என்றால் பாம்பு என்று பொருள், அரவான் என்றால் எல்லோருக்கும் தெரியும் கூத்தாண்டவர் கோவில் சாமி அவர்.


அரவத்தை சுருக்கினாலும், அரவானை சுருக்கினாலும் அது "அரவ்" அல்லது "ஆரவ்" என வந்துவிடும்


பெயருக்கேற்றபடி அவன் பாம்பாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஓவியா மீதும் காதல் வரவில்லை எனில் அவன் கூத்தாண்டவர் கோவில் சாமியாக இருக்கவேண்டும்





ஆக இரண்டாவது வகை உண்மையாக இருக்கலாம் என்ற அளவு ஓவியாவின் நினைவால் பாதிக்கபட்ட விழுதுகள் ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டன‌

ஓவியா மீதும் காதல் வரவில்லை என்றால் நிச்சயம் அதுதான் என அவர்களே முடிவிற்கு வந்துவிட்டார்கள்..

"அரவாணி" ஆரவ் என்ற கோஷம் ஆங்காங்கு தொடங்கிவிட்டது..

விரைவில் கூத்தாண்டவர் கோவிலில் ஆரவ் படத்துடன் பிளக்ஸ், பேனர் எல்லாம் வைக்கபடும் போல் தெரிகின்றது.

அடுத்த மனநல பாதிப்பு நிச்சயம் அந்த "ஆரவ்" என்பவருக்குத்தான்













 


 

Monday, August 7, 2017

பிக் பாஸ் : எப்படி நாமெல்லாம் வாக்களிப்பது?

20347702_1537531859637727_3399443950241579008_n.jpg

இந்த சினேகனுக்கும், காயத்திரிக்கும் மனநலம் கடுமையாக பாதிக்கபட்டிருப்பது அந்த மொகரைகளிலே நன்றாக தெரிகின்றது

அவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்க சொல்லபோவது யார்? பைத்தியங்கள் தன்னை ஒரு பைத்தியம் என ஒப்புகொண்டதே இல்லை, மாறாக சுற்றி இருப்பவர்கள்தான் பிடித்து சிகிச்சைக்கு அனுப்புவார்கள்.


இவர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் என எப்படி நாமெல்லாம் வாக்களிப்பது?

ஆரவ் உள்ளேயே இருப்பது நல்லது.

download.jpgஅந்த ஆரவ் இனி விஜய் டிவி வழங்கும் "நூறு நாள் வேலைதிட்டம்" முடிந்த பின்னும் உள்ளேயே இருப்பது நல்லது.


Omm Prakash போன்றவர்கள் சந்திரமுகி ஜோதிகாவாக கொதித்துகொண்டிருகின்றார்கள், கையில் ஆரவ் கிடைத்தால் கதற கதற இழுத்து சென்று, ஓவியா காலில் போட்டு "போடு மெட்டியினை" என பின் மண்டையிலே அடிப்பார்கள் போல, அவ்வளவு ஆக்ரோஷம்.


வெளிவந்தால் ஆரவ் நேரே சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி

Sunday, August 6, 2017

ஓவியா வெளியேறிவிட்டாரா?





images.jpgஒவியா வெளியேறிவிட்டது உறுதி என செய்திகள் வருகின்றன, அந்த பைத்தியக்கார வீட்டிலிருந்து சோம்பிகள் கூட்டத்திலிருந்து அவர் வெளிவந்திருப்பது நல்லது.


நண்பர் Omm Prakash "கண்ணே.. கலைமானே.. " என ஓவியா படத்த்தினை மடியில் வைத்துகொண்டு அந்த "மூன்றாம் பிறை" பாடலை இதுவரை பாடிகொண்டிருந்தார்


ஆனால் திடீரென கடலோர கவிதைகள் சத்யராஜாக "போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே" என்ற பாடலை பாடுவதால் விஷயம் உறுதி.





இனி ஓவியா ஆர்மி என்ன செய்யும்? குஷ்பூ சங்கம் உங்களுக்காக கதவுகளை திறந்துவைத்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கின்றோம்









 காதல் என்பது அற்பமானது, அது தொடங்கவும் முறியவும் ஒரு அற்ப காரணம் போதும் : ஜெயகாந்தன்

வயதிற்கேற்ப மனிதனின் குணமும் ரசனையும் மாறுவது போல, அவன் காதலும் மாறியே தீருவதுதான் மானிட இயல்பு : கி.பெ ராஜநாராயணன்

ஏம்பா ஓவியா ஆர்மிகளா, இதனை எல்லாம் அவரிடம் சொல்லி உங்கள் சேனையினை பாதுகாக்க கூடாதா?





 

ஓவியாவை திருமணம் செய்ய நான் தயார் : சிம்பு அதிரடி அறிவிப்பு


ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்றும், திடீர் மன உளைச்சலால் பாதிக்கபட்டார் என்றும் செய்திகள் எப்படி வந்தன என்பதன் காரணம் இப்பொழுது புரிகின்றது.


இதனை கேள்விபட்டபின் ஓவியா இவ்வளவு தூரம் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்




என்ன நடந்திருக்கும்? காயூ ஆண்டியின் அம்மாவிற்கு யாரோ நல்ல ஆலோசனை கொடுத்திருக்கலாம், அவர் மிக தந்திரமாக சிம்புவின் ஆதரவினை கோரியிருக்கலாம்


அடுத்து சிம்பு ஜூலி, ரைசா ஆகியோரை திருமணம் செய்ய ஆசைபடலாம்.













 

Friday, August 4, 2017

மசாஜ் செய்வதில் பெரும் நிபுணராகிவிட்டாராம் ஜூலி

download-1.jpgமசாஜ் செய்வதில் பெரும் நிபுணராகிவிட்டாராம் ஜூலி, தமிழகம் முழுக்க பேசி கொள்கின்றார்கள்.


ஒருவேளை சசிகலாவிற்கு பரோல் கிடைத்து, மசாஜ் செய்ய ஜூலிக்கு அழைப்பு விடுத்தால் என்னாகும்?


இப்போதைய நிலையில் ஆரவினை விட சசிகலா ஒன்றும் மோசமில்லை என தமிழகம் நிச்சயம் தீர்ப்பிடும் என்பது கூடுதல் விஷயம்..




அதனால் "சின்னம்ம்மா சின்னம்மா.. ஆயாம்மா ஆயாம்மா" என சத்தம்போட்ட ஜூலி, சின்னம்மாவிற்கு மசாஜ் செய்யும் காலம் நிச்சயம் வரலாம்.


பிக்பாஸ் சொன்னால் கேட்டுகொள்ளும் ஜூலி, பிக் லேடிபாஸ் சொன்னால் மட்டும் மறுக்கமுடியுமா?











இந்த பிக்பாஸ் ஓடிகொண்டிருக்கின்றது, பிந்து மாதவி பொன்மொழிகளை உதிர்த்துகொண்டிருக்கின்றார், கிழே சப் டைட்டிலில் தமிழில் மொழிபெயர்ப்பு ஓடிகொண்டிருக்கின்றது


இதனை விட தமிழகத்தில் தமிழுக்கு பெரும் தோல்வி என்ன இருக்கின்றது.


மொழிப்போர் என நடத்தி பலரை கொன்று ஆட்சிக்கு வந்த கட்சிகள்தான் இந்த 50 வருடமாக தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன, 67 பேர் மொழிக்காக இறந்து கிடைத்த வெற்றி அது.




அந்த 67 பேரின் ஆன்மா இக்காட்சியினை எல்லாம் நிச்சயம் மன்னிக்காது


தமிழ் தமிழ் என முழங்கிய திராவிட கட்சிகள் காக்காத தமிழை இனி தேசிய கட்சிகள்தான் காக்குமோ என்னமோ?















Thursday, August 3, 2017

இந்த பிக்பாஸ் எனும் பைத்தியகாரர்களின் வீடு








சந்தேகமே இல்லை, இது பிக்பாஸ் வீடு இல்லை மாறாக பாண்டிமடம் என்பதில் அவர்களே உறுதியாகிவிட்டார்கள். இல்லாவிட்டால் எல்லாம் மிக சரியாக சேது படத்து பச்சை ஆடை உடுத்தி காட்சியளிக்கின்றன, விலங்கு மட்டும் இல்லை.


சிநேகனுக்கும், காயத்திருக்கும் பச்சை ஆடை அட்டகாசமான பொருத்தம்ச


மசாஜ் பார்லரில் வேலை செய்த அனுபவம் ஜூலியின் மசாஜில் அழகாக தெரிகின்றது, சும்மா சொல்ல கூடாது தாய்லாந்து அழகிகளின் கைகூட அப்படி விளையாடாது




ஆக ஒரு மசாஜ் கேர்ளை போராளி என சமூகம் நம்பியிருக்கின்றது, நர்ஸ்கள் எல்லாம் மசாஜ் செய்யமாட்டார்கள்


ஒரே ஒரு நல்ல விஷயம் நடக்கின்றது, அதாகபட்டது இந்த ஓவியா ஒருமாதிரி முகம் சுழிக்கும் விஷயங்களில் இறங்கிவிட்டது, அதுவும் என்ன செய்யும்?


வெளியிருந்து எல்லோரும் கொடுப்பது வோட்டுத்தா, மற்றபடி சாப்பாடும், சம்பளமும் நீங்களா கொடுக்கின்றீர்கள்? பிக்பாஸ்தான் கொடுப்பார், அதனால் அதனை செய்கின்றார் ஓவியா


இதனால் ஓவியா மன்றம் வேகமாக சரிகின்றது, ரசிகர்கள் எழுந்துவிட்ட்டார்கள், ஓவியா ஆர்மி கத்தியினை தூக்கிபோடுவிட்டு கிளம்பிற்று


"டேய் காளான்ஸ் உங்களை பார்க்க பாவமாக இருக்கின்றது, ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்கின்றோம், ஒழுங்காக குஷ்பூ மன்றத்தில் இணைந்துவிடுங்கள் ஸ்கூல் பாய்ஸ்.."


இந்த பிக்பாஸ் பாண்டிமடத்தை விட கொடுமையான விஷயம் சீமானின் தும்பிகளின் விமர்சனம், இதனை பிக்பாஸ் என சொல்ல கூடாதாம், தமிழில் பெருந்தலைவர் வீடு என சொல்லவேண்டுமாம்


டேய் அது என்ன காமராஜ் நினைவகமா?, உங்கள் தமிழ் மொழிபெயர்பிற்கும் ஒரு அளவே இல்லையா?


நாளை குறைவாக மழைபெய்து கொஞ்சம் வெள்ளம் வந்தால், ஆற்றில் சிறுநீர் ஓடுகின்றது என இவர்கள் நிச்சயம் சொல்வார்கள், அங்கிள் சைமனின் பயிற்சி அப்படி.













ஏதும் காத்து கருப்பு பிடித்திருந்தால் கூட அந்தோணியார் கோவிலின் புனித நீர் தெளித்து விரட்டிவிடலாம்


ஆனால் பாகம்பிரியாள் உள்ளே இறங்கியிருப்பது ஓவியா அம்மன், இதனை எந்த தெய்வத்தாலும் இன்னும் 60 நாளைக்கு விரட்டவே முடியாது..


மேளம் அடித்து , சூடமேற்றி வணங்கி நிற்பதை தவிர 
வேறு வழியே இல்லை..






இந்த பிக்பாஸ் எனும் பைத்தியகாரர்களின் வீடு இப்பொழுதுதான் கலாச்சாரத்தை கெடுப்பது போல தெரிகின்றது


ஆனால் இப்பொழுது கிளப்பவேண்டிய சர்ச்சையினை முன் கூட்டியே கிளப்பிவிட்டதால் திகைத்து நிற்கின்றனர் கலாச்சார காவலர்கள்.


இந்த பிந்து மாதவியும், ஓவியாவும் தமிழரின் முன்னால் பிக்பாஸில் நடிக்கின்றார்கள், இருவர் தமிழையும் கேட்டால் அகத்தியனே இமயமலைக்கு ஓடிவிடுவார், அவ்வளவு கொடூரம்





கலாச்சாரங்களை விடுங்கள், அது சினிமா கலாச்ச்சாரம். ஆனால் தமிழையாவது காப்பாற்றாலம் அல்லவா?

இந்த சிறுக்கிகளை அடித்துவிரட்டிவிட்டு நல்ல தமிழ் தெரிந்த சிலரை வைத்து நடத்த கூடாதா?




 

 


 

Wednesday, August 2, 2017

பிக்பாஸ் பைத்தியகார ஆஸ்பத்திரி

பாக்யராஜின் "ஆரிரோ ஆராரிரோ" படத்தில் வரும் பைத்தியகார ஆஸ்பத்திர்க்கும், பிக்பாஸ் வீட்டிற்கும் யாதொரு வித்தியாசமும் இருப்பதாக‌ தெரியவில்லை

அவர்கள் செய்யும் காரியங்களை கண்டால் அப்படித்தான் தெரிகின்றது

சேது படத்தின் சாயலும் சில இடங்களில் குறிப்பாக பரணி தப்பும்பொழுது தெரிந்தது


ஆக தமிழ் சினிமாவின் எல்லா பைத்தியக்கார படத்து காட்சிகளையும் வெட்டி எடுத்து போட்டு நடக்கும் ஒரு ஷோ தான் பிக்பாஸ்...

அதில் சில நிஜ பைத்தியங்களும் பங்கெடுத்திருக்கின்றது.






பிக்பாஸில் ஒருமாதிரி நித்தி மாதிரி சிரித்துகொண்டு சிநேகன் ஓவியாவிடம் கேட்கின்றார்

"எங்களை பார்த்தால் லூசு மாதிரி தெரியுதா?"

ஓஓ உனக்கும் உண்மை தெரிஞ்சிபோச்சா ஹிப்பித்தலையா?




 

Tuesday, August 1, 2017

மெல்ல தமிழ் இனி சாகும்

மறுபடியும் ஒவியாவினை ஆதரிக்க தொடங்கி விட்டார் Omm Prakash, ஆனானபட்ட விசுவாமித்திரரே கவிழ்ந்த உலகில் பாவம் இந்த பந்துமித்திரர் என்ன செய்வார்? அதே அழிச்சாட்டியம்


"நீ நடந்தால் நடை அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு" என ஓவியா படத்தின் முன்பு நின்று அவர் பாடுவதைகூட பொறுத்துகொள்ளலாம்,




அதற்கு அடுத்த வரியினைத்தான் பொறுக்க முடியவில்லை


"நீ பேசும் தமிழ் அழகு" என அவர் ஓவியாபார்த்து சொல்லும்பொழுது தாங்கவே முடியவில்லை, பாரதிதான் நினைவுக்கு வருகின்றார்


"மெல்ல தமிழ் இனி சாகும்" என அன்றே சொன்னது பாரதியார்தான்.


அங்கு ஏற்கனவே நமீதாவிடம் அது பாடாய் பட்டது, இப்பொழுது ரைசா என்பவர் போட்டு அரைக்கின்றார்,


இதில் ஓவியாவின் தமிழை பார்த்து இவர் வேறு "நீ பேசும் தமிழ் அழகு, அழகு" என பாடிகொண்டே இருக்கின்றார்



ஜூலியினை பிக்பாஸில் போட்டு அடியோ அடி என அடிக்கின்றார்களாம்









Image may contain: 2 people, people sitting and indoor









 ஒரு சம்பவம் உண்டென்பார்கள்


பாரதிராஜாவிற்கும், பெரியார் தாசனுக்கும் முன்பொருமுறை பிரச்சினை வெடித்தது. பாரதிராஜா நாயக்கர்களை விரட்டுவோம் எனும் தமிழ்தேசியவாதி, பெரியார்தாசன் இஸ்லாமை தமுவும் முன் தீவிர பெரியாரிஸ்ட், பெயரே அப்படி என்றால் பார்த்துகொள்ளுங்கள்


எங்கோ பாரதிராஜாவினை அவர் ஏதோ சொல்லபோக, பாரதிராஜாவின் அடிப்பொடிகள் வந்து சீறின, அப்பே உங்கள அவமானமா பேசிட்டாரு அப்பே, வந்து அவர நாலு அடி அடிங்க அப்பே" என்ற அளவு கண்ணை கசக்கினார்கள்





பாரதிராஜா சில நாட்களாக அமைதிகாத்தார், ஒரு நாள் நேராக கிளம்பி பெரியார்தாசன் வீட்டிற்கு சென்றார், இப்பொழுது கொலைவிழும், பச்சை தமிழனின் வீரம் என்ன? அதுவும் நம் ராஜா சும்மாவா என காத்திருந்தார்கள் அடிபொடிகள்

ஆனால் இருவரும் கைகுலுக்கி வெளியே வந்தனர், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார் பாரதிராஜா, அடிப்பொடிகள் அப்செட், எ"ன்னடா? அண்ணன் சும்மா வந்துட்டேன்னு பாக்குறீங்களா? வெயிட் அன்ட் சி" என சொல்லிவிட்டு மறுநாள் சூட்டிங் சென்றார்

அங்கே அடிப்பொடிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, கருத்தம்மா படத்திற்காக பெரியார்தாசனை கோவணத்தோடு நிறுத்தியிருந்தார் பாரதிராஜா

"எப்படி பழிவாங்கிட்டேன் பாத்தீங்களா?" என பாரதிராஜா சொல்ல அடிப்பொடிகள் கட்டைவிரலை உயர்த்தி கண்கலங்கினார்களாம்

இப்படி ஒரு கதை உண்டு, இப்பொழுது சொல்ல காரணம் என்னவென்றால், இந்த ஜூலி

அதாவது அவர் ஜல்லிகட்டில் ஓவராக பேசினாராம், பெரும் சத்தமும் சீனும் போட்டாராம், அவருக்கு ரசிகர்களும் வந்தார்களாம்

இதனை கவனித்த அந்த தரப்பு, இவள மொத்த தமிழ்நாடும் திட்டணும், அவள மண்ணு அள்ள்ளிபோட்டு திட்டணும், திட்டம் தயாராகட்டும் என சொன்னதாம்

உடனே அந்த ஜூலியினை பிக்பாஸில் போட்டு அடியோ அடி என அடிக்கின்றார்களாம், அதுதான் உண்மையான காரணமாம்

ஜல்லிகட்டில் கூட்டத்தோடு கத்திய அனுபவத்தில், கொஞ்சமும் யோசனையின்றி வந்து பிக்பாஸில் மாட்டியது ஜூலி, அவர்கள் அழைத்தார்கள் என்றால் அம்மணி கழண்டிருக்க வேண்டாமா?

அங்கு இருப்பது எல்லாம் நடிகர் கூட்டம் , அம்மணிக்கும் அந்த ஆசை வந்திருப்பதால் சென்றிருக்கின்றர், இப்பொழுது கோவை சரளாவிற்கு வாரிசாக வரும் அளவு அம்மணி தேறிவிட்டார்

நடிப்பு ஆசையில் ஈஈஈஈஈ என பல்லை காட்டி ஓடிய ஒருவருக்கு, பழிவாங்கபடுகின்றார் ஜூலி இது ஜல்லிகட்டை நிறுத்த நினைத்த இலுமினாட்டி சதி என சில கம்முனாட்டிகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌

ஒரு கம்முனாட்டியினை இன்னொரு கம்முனாட்டி மதிக்கிறதுதாங்க மரியாதை...




 

Monday, July 31, 2017

மலேசிய தமிழ் வானொலியில் பிக் பாஸ்





மலேசிய தமிழ் வானொலியில் காலை நிகழ்ச்சிகள் அசத்தும் அவர்கள் தமிழ் அவ்வளவு அழகு, விஷயங்களும் நல்ல பயனுள்ளதாக இருக்கும்


அதற்கும் மேல் பல்துறை நிபுணர்கள், சாதனையாளர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது மக்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்கள் குறித்து ஆலோசனை சொல்வார்கள்


குழந்தை நலம், சமூகம் நலம், மன‌ நலம், பண நலம் , உடல்நலம் என எல்லா விஷயங்களும் உண்டு





இன்று வாழ்வியல் பிரச்சினை என பேசினார்கள், நல்ல தகவலை எல்லாம் சொன்னார்கள். பிரச்சினை என்பது சூழ்நிலையே, அது எப்பொழுது வேண்டுமானாலும் மாறும் என்றேல்லாம் பேசிவிட்டு, கடைசியில் சொன்னார்கள்

"நேயர்களே நிகழ்ச்சியினை கேட்டீர்களா, ஆக பிரச்சினை என்றால் பரணி சுவர்தாண்டி ஓடியது போல ஓட கூடாது, மாறாக டார்லிங் ஓவியா போல நின்று சமாளிக்கவேண்டும்"

பிக்பாஸ் எங்கெல்லாம் பாதித்துவிட்டது..








நமீதா வெளியில் சென்றால் மும்தாஜை உள்ளே அனுப்புவதுதான் சரி, அப்பொழுதுதான் கணக்கு சரியாகும்


இந்த பிந்துமாதவி எப்படி உள்ளே வரலாம்?


நியாயமற்ற காரியங்களை செய்யும் பிக்பாஸினை வன்மையாக கண்டிக்கின்றது தமிழகம்.




அனுப்பு... அனுப்பு.. மும்தாஜை உள்ளே அனுப்பு








 பிந்து மாதவி வெந்து நொந்த மாதவியாக ஓடிவருவது விரைவில் நடக்கலாம்..

அங்கிருக்கும் தீ நாக்குகள் அப்படி, வார்த்தையிலே வெந்துவிடுவார் பிந்து, அதுவும் அந்த சினேகன் முகத்தை கொஞ்சநேரம் பார்த்தாலே சுவரில் அடித்த பந்தாக வந்துவிடுவார் பிந்து





 



 

Sunday, July 30, 2017

சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்





முத்து படத்தில் வரும் வயதான ரஜினிபோல ஆகிவிட்டார் நண்பர் Omm Prakash


"அண்ணே எல்லாம் நாடகம், எல்லாமே நாடகம், பிக்பாஸே நாடகம். ஏதோ பாவபட்ட புள்ளன்னு வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு சப்போர்ட் பண்ணினோம், அங்க எல்லாம் நாடகம்ணே, இனி பிந்து மாதவி எல்லாம் வருமாம், ச்சே... நாடகம் எல்லாம் நாடகம் ஹ்ஹா ஹா ஹா ஹா" என சிரிப்பவரை பார்த்தால் பயமாக இருக்கின்றது


தாடியும் அழுக்கு போர்வையும் இல்லை, மற்றபடி அதே விரக்தி சிரிப்பு





விஷய என்னவென்றால், பிக்பாஸ் சுத்த நாடகமாம், இந்த சூலி, காயத்திரி , ஓவியா எல்லோர் ஆக்ரோஷமும் நடிப்பாம். அவருக்கு இது திடீரென அவருக்கு புரிந்துவிட்டதாம். இந்த நாடகத்தை இனி பார்க்கமாட்டாராம். இந்த பெரும் ஏமாற்றம் அவருக்கு பெரும் விரக்தியாம்

இனி ஷோரூமில் கூட டிவி பார்க்கமாட்டேன் எனும் அளவிற்கு ஞானமழை கொட்டினார்.

திடீரென ஆளவந்தான் கமலஹாசனாக மாறிவிட்டார், "சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்" என உறுமினார். அண்ணே நான் மனிதவெடிகுண்டா மாறப்போறேன், நீங்க ஒரு உதவி செய்யணும் என்றார்

ஏன் குண்டு கட்டிவிடவேண்டுமா?

இல்லண்ணேன் , நான் பிக்பாஸ் வீட்டில் மனிதவெடிகுண்டாக வெடிக்க போகின்றேன், அதற்கு நீங்கள் 2 பேட்டரி பில் போட்டு வாங்க வேண்டும், ஜிஎஸ்டி எல்லாம் போட்டு கவனமா வாங்குங்க,

ஓஓ சரி ஏன்?

பில்லை என்னிடம் கொடுங்கள், பத்திரமாக என் வீட்டில் வைத்துவிட்டு வெடிக்க போகின்றேன்

அது ஏன் உங்கள் வீட்டில் ரசீதை வைப்பீர்கள்????

அப்போதாண்ணே விசாரணையில் சிக்கி ஆயுசுக்கும் உள்ளே இருப்பீங்க, சும்மா உங்கள விட்டுட்டு போக முடியுமாண்ணேன்"




 





 



கமல்ஹாசன் - காயத்ரி ரகுராமுக்கு ரூ.100 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ்: கிருஷ்ணசாமி அனுப்பினார்இவரால் தாமிரபரணியில் செத்த 17 பேருக்கும் என்ன நஷ்ட ஈடு இவர் வாங்கி கொடுத்துவிட்டார்? ஒன்றுமேயில்லை

இதில் கமலுக்கும், காயத்திர்க்கும் "சேரி பிஹேவியர்" எனும் வார்த்தைக்கு நோட்டீஸ் அனுப்புகின்றாராம்.


பிராமணயிசம் உயர்ந்தது என சிலர் சொல்லும் எனும் ஆபத்தைவிட மகா ஆபத்தானவர்கள் இந்த கிருஷ்சாமி போன்ற தலித் தலைவர்கள்.

மிஸ்டர் கிருஷ்ணசாமி, சேரி மக்களின் மானம் வெறும் 100 கோடியில்தான் இருக்கின்றதா? அதனை செலுத்திவிட்டு ஆளாளுக்கு சேரி பிஹேவியர் என சொல்லட்டுமா என கமலஹாசன் தரப்பு திருப்பி கேட்டால் என்ன செய்வார் கி.சாமி?




 


பிக்பாஸை மூடு...

உண்மையிலே போர்குணம் மிக்கவர்கள் திமுகவினர், பேச்சிலும் எழுத்திலும் , களத்திலும் அவர்களிடம் வீரம் தெறிக்கும். அது வரலாறு


மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு உண்டு, எனினும் கலைஞர் என்ற ஒற்றை மனிதனுக்காக கட்டுபட்டு நின்றார்கள், அவர் கண்ணசைத்திருந்தால் இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் என்றோ தூக்கி கொண்டுபோய் கதற, கதற கலைஞர் வாழ்க என சொல்ல வைத்திருப்பார்கள்


ஆனால் தலமைக்கும், தலைவருக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பில்தான் தமிழகம் அமைதியாக இருக்கின்றது




இப்பொழுது ஏன் இதனை சொல்கின்றோம் என்றால் காரணம் உண்டு


அதாகபட்டது இந்த ஓவியாவிற்கு சில பேரவைகள் தொடங்கபட்டிருக்கின்றதாம், அதில் சிலர் ஓவராக பேசுகின்றார்கள்


எப்படியென்றால் நாங்கள் குஷ்பூவிற்கு கோவில் கட்டியது போலவோ, நயனுக்கு சிலை வைத்தது போல மொக்கை ரசிகர்கள் அல்ல என்ற அளவு பேசியிருக்கினார்


டேய் ரேஸ்கல்... ஓவியா உன் தலைவி என்றால் இருக்கட்டும், அவரை நீர் வணங்கட்டும், அது உன் விருப்பம்


ஆனால் குஷ்பூ ரசிகர்களை பற்றி உங்களுககெல்லாம் என்ன தெரியும், அதுவும் அந்த ஒட்டடை குச்சி ஓவியாவினை ரசிக்க ஆரம்பித்த பின் உங்களை என்ன சொல்ல? உங்கள் ரசனை அப்படித்தான்.


நாங்கள் களமிறங்கினால் தமிழகம் தாங்காது. இந்தியா இயங்காது


ஒழுங்காக பிக்பாஸ் பார்தோமா, கை தட்டினோமா என இருந்தால் சிக்கல் இல்லை, மாறாக எங்களை சீண்டினால் நடப்பதே வேறு


ஒவியா அல்ல, அந்த பிக்பாஸையே நாமினேஷன் செய்தோ, செய்யாமலோ நாமினேட் செய்துவிடுவோம் ஜாக்கிரதை


4 படம் நடிக்கமுடியாத அவருக்கே நீங்கள் கிளம்பினால், 30 வருடம் வெற்றிகொடி நாட்டிய தங்க தாரகைக்கு எப்படி பட்ட படை இருக்கும்?


தலைவி அமைதியாக இருப்பதால் நாங்களும் அமைதியாக இருக்கின்றோம் , ஆனாலும் ஓரளவுக்குத்தான் அமைதி காக்க முடியும்.


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வீணாக ரசிகர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி, ரத்த களறியியினை தூண்டும் அளவுக்கு செல்வதால் தமிழக அரசு மிக அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டியது நல்லது


பிக்பாஸை மூடு...



Saturday, July 29, 2017

புத்தமதத்திற்கு மாறினார் கமலின் இளைய மகள் அக்சரா !





download.jpgபுத்தமதத்திற்கு மாறினார் கமலின் இளைய மகள் அக்சரா : கமல் வாழ்த்து


கடவுளே இல்லை என சொல்லிகொண்டிருந்த குடும்பத்திலிருந்து, ஒரு மதத்திற்கு மகள் மாறியிருப்பதை கமலஹாசன் வரவேற்கின்றார் என்றால் அவரிடம் ஏதும் மாற்றம் இருக்குமோ?


மிக ஆச்சாரமான மதத்தை பின்பற்றும் குடும்பத்திலிருந்து ஒருபெண் புத்தமதம் சென்றால் ஆச்சரியபடலாம், எந்த வரைமுறைக்கும் அடங்கா குடும்பத்து பெண் ஒன்று புத்தமதம் சென்றதில் என்ன வியப்பு?





உலகில் இருக்கும் மதங்களிலே மிக மிக சுதந்திரமான மதம் அதுதான், ஒரு கட்டுபாடோ ஒரு இறுக்கமோ கிடையாது

ஏதோ அக்சரா மொட்டை அடித்து மணிமேகலை ஸ்டைலில் புத்த மதத்திற்கு சென்றது போலவும், இனி இந்தியாவில் புத்தமதம் மறுபடியும் தழைத்தோங்கும் என்பது போலவும் பத்திரிகைகள் எழுதுகின்றன‌









மிக அமைதியாகிவிட்டார் Omm Prakash , அவரது சிவந்த கண்களும் இப்பொழுது வெள்ளையாகிவிட்டது, கேட்டால் " அண்ணே போர் வந்தால் களத்தில் சந்திப்போம்" என சொல்லிவிடுகின்றார்.

இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் வந்த விளைவு இது என அவர் சொல்லாமலே தெரிந்தது




 

 



 

Friday, July 28, 2017

பிக் பாஸ் : ரைசா எங்கோ கிளப்பில் ஆடிய ஆட்டம்

https://youtu.be/PlMPNQnB4Xk


Big Boss Raiza spotted at a Pub in Bangalore

 

 

மிஸ்டர் Omm Prakash , உங்கள் தலைவியின் வெற்றி பாதையின் ஒரு தடைகல் இனி இருக்காது


அந்த ரைசா எங்கோ கிளப்பில் ஆடிய ஆட்டம் வீடியோவாக வந்துவிட்டதான், ஆடியது சிக்கல் இல்லைஆனால் குடித்துவிட்டு ஆடியிருக்கின்றார் என்பதில்தான் சிக்கல், அது சர்ச்சையாகின்றது


நீர் இந்த மது, கிளப், ஆட்டம் என்பதெல்லாம் அறியாத பரிசுத்த வகையறா என்பதால், இது பற்றிய விவரங்களை யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்வது நல்லது








பத்து ரூபாய் கொடுத்தா லட்ச ரூபாய்க்கு நடிக்கிற பொண்ணு தான் ஜூலி: எஸ்வி சேகர்


அதாவது லட்ச ரூபாய்க்கு நடிக்கும், இவரோ ஆயிரம் ரூபாய்க்கு கூட நடிக்கமாட்டார், ஆனாலும் என்னவோ ஆஸ்கர் விருது வென்றவர் போல பேசுகின்றார்