Tuesday, August 29, 2017

பிக்பாஸ் : எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?




Image may contain: 1 person, standingஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் அவமானபடுவோம் என முன்பே கணித்துத்தான் அதனை திருப்ப கமலஹாசன் தமிழக அரசை அடிக்கடி சீண்டுகின்றாரோ என நினைக்க தோன்றுகின்றது.


காரணம் அவருக்கு அந்நிகழ்ச்சி பெரும் அவமானம், சந்தேகமே இன்றி சொல்லலாம்


ஒரு போட்டி என்றால், ஒருவர் வெளியே சென்றால் சென்றதாகத்தான் இருக்கவேண்டும், அதுதான் ஆட்டம். அல்லது புதிது புதிதாக இறக்காமலாவது இருக்கவேண்டும்




இங்கு இரண்டுமே இல்லை


புதிதாக வந்துகொண்டே இருக்கின்றார்கள், சென்றவர்களும் திரும்பிகொண்டே இருக்கின்றார்கள்


இந்த ஆர்த்தி, ஜூலி எல்லாம் ரசிகர்களால் வாக்களிக்கபட்டு வெளியேற்றபட்டவர்கள், இன்று மறுபடியும் அவர்களுக்கு கதவினை பிக்பாஸ் திறந்திருக்கின்றார்


ரசிகர்கள் வாக்களித்து வெளியேற்றியவர்களை , ரசிகர்களை கேட்காமலே உள் இழுத்துபோடுவது பார்வையாளர் முகத்த்தில் காரி துப்புவது போன்றது.


அங்கிள் சைமன் பாணியில் கேட்பதாக இருந்தால் " ஏண்டா, அவ்வளவு கேணபயலுகளா நாங்க, வோட்டு போடுண்ணு சொல்லுவ, நாங்க போடனும் அப்புறம் உன் இஷ்டத்து அனுப்பி வைப்ப‌


அப்ப நங்க என்ன ... க்கு பார்க்கணும்,


எங்க வோட்டுக்கு என்னடா மரியாதை?, கேட்க நாதி இல்லையே, இந்த அநீதியினை கேட்க நாதி இல்லையே, அந்த கமலஹாசனுக்கும் கொஞ்சமும் சிந்தனை இல்லையே"


தன்னால் வெளிஅனுப்பி வைத்தவர்களை மறுபடியும் அழைத்து பல்லை காட்டிகொண்டிருப்பதால் கமலஹாசன் என்பவருக்கு சுத்தமாக மானமில்லை


இனியும் பிக்பாஸ் பார்த்துகொண்டிருந்தால் பார்பவனுக்கு மானமில்லை,


இந்த பகிரங்க மோசடியினை கூட கண்டிக்க தயங்கும் கமலஹாசன், தமிழக அமைச்சர்களை கண்டிக்கும் உரிமையினை இழந்துவிட்டார்.


தமிழக அமைச்சர்களுக்கு மானமில்லை வெட்கமில்லை என்பது உலகிற்கு தெரிந்தது, அதே வரிசையில் தான் கமலஹாசனும் இருக்கின்றார்.


அவர்கள் செய்வது அரசியல் மோசடி என்றால் இவர் செய்வது இன்னொரு வகை மோசடி.


அவர்கள் அவர்களின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார்கள், இவர் இவரின் பிக்பாஸ் சொன்னதை செய்கின்றார், ஆக இருவருமே வாக்களித்தவர்களை ஏமாற்றிகொண்டிருக்கின்றார்கள்


இந்த பிக்பாஸின் அடிமை, அந்த பிக்பாஸின் அடிமைகளை கேள்வி கேட்க என்ன இருக்கின்றது?


இனி அவர் அமைச்சர்களை என்றாவது சீண்டட்டும், அன்று இருக்கின்றது அவருக்கு.


அவர்களை சீண்ட / கண்டிக்க‌ இவருக்கு எந்த தகுதியும் இனி இல்லை..


ஒரு அடிமை இன்னொரு அடிமையினை எப்படி கேள்வி கேட்க முடியும்? அல்லது ஒரு சந்தர்ப்பவாதி இன்னொரு சந்தர்ப பிழைப்புவாதியினை எப்படி கண்டிக்க முடியும்?















 




 


No comments:

Post a Comment