Thursday, August 24, 2017

வல்லவன் சுற்றும் பம்பரம் மணலிலும் சுற்றும்

மருத்துவம் என்றல்ல அது போன்ற மகா முக்கியமான துறைகளில் தரம் மிக அவசியம்.


உதாரணம் ராணுவத்திற்கு தகுதியானவரை எடுக்கின்றோம் என சொல்லி, இட ஒதுக்கீடு என 150 கிலோவில் தொப்பையும் வயிறுமாக இருப்பவரையோ, அல்லது சதா இருமிகொண்டிருப்பவரையோ எடுப்பதில்லை. அது சாத்தியமுமில்லை.


அந்த அந்த துறைக்கு என சில கட்டுப்பாடுகளும் தரமும் வேண்டும், அந்த துறைக்குரிய தகுதி இருப்பவர்களை மட்டுமே எடுக்கவேண்டும்.




அப்படி நல்ல திறமையானவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட வேண்டும், துறையின் தரம் அப்பொழுதுதான் உயரும்.


திறமை இருப்பவர்களுக்கு அவர்களுக்கான அங்கீர்காரம் கிடைத்தே தீரும்


பெருகிவரும் மக்கள் தொகைக்கு அதிகபடியான மருத்துவர்கள் தேவைதான், அதற்காக உரிய தரம் இல்லாதவர்களுக்கு எப்படி இடம் கொடுக்க முடியும்?


ஏற்கனவே பொறியியல் துறைக்கு இப்படி இருந்த கட்டுபாடுகளை எல்லாம் நீக்கியதால்தான் பல பொறியாளர்கள் கோழி வெட்டுதல், பரோட்டோ போடுதல் என வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.


சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள், மரம் வெட்டுவோர், கட்டடம் கட்டுவோர் எல்லாம் பொறியியல் கல்லூரிக்குள் சென்று கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் காலம் வந்துகொண்டிருக்கின்றது.


தரப்படுத்துவது ஒன்றும் பெரும் சிக்கல் இல்லை, சில விஷயங்களை தரப்படுத்தித்தான் தீரவேண்டும்.


இட ஒதுக்கீடு என கொடிபிடிக்கும் இந்த திராவிட, சீமானிய கும்பல்களுக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்


இலங்கையில் யாழ்பாணர்தான் படிப்பிற்கு பிரசித்தம், எல்லா தேர்விலும் அவர்கள்தான் முதலிடம், வேலையில் முதலிடம் என இருந்தனர்


சிங்களம் இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்துதான் அவர்களை பாடாய்படுத்தியது, அதிலிருந்து அது தனிநாடு ஆயுதம் என வளர்ந்து பின் பல்லாயிரம் பேரை பலிகொண்டது.


சிங்கள இனவாதம் என இதனைத்தான் சொல்கின்றீர்கள் , சிங்களம் தன் குடிமக்களை சமமாக நடத்தி, திறமைக்கு முன்னுரிமை கொடுத்தால் இப்பிரச்சினை வெடித்திருக்காது என்கின்றீர்கள்


அது உண்மையும் கூட‌


ஆக இலங்கையில் ஒரு நியாயம், இந்தியாவில் ஒரு நியாயம் பேசுகின்றீர்கள்.


யாழ்பாண தமிழனுக்கு ஒரு நீதி, இந்திய பிராமணனுக்கு ஒரு நீதியா?


அதுவும் , நல்ல திறமையான மாணவனுக்கு இத்தேசம் அவனின் உரிமைகளை சாதி, மதம், இனம் என சொல்லி அடக்கியதே இல்லை


கலாம் முதல் மயில்சாமி அண்ணாதுரை , டெய்சி தாமஸ் என ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும்


திறமையினை வளர்த்தால் கிடைக்க வேண்டியவை கிடைக்கும்.


சமீபத்தில் வந்த அந்த கொடூர காமெடி படமானாலும், நெப்போலியன் சொல்வது போலத்தான் விஷயம்


"வல்லவன் சுற்றும் பம்பரம் மணலிலும் சுற்றும்"


(மகா முக்கியமானது அரசியல், அதில் சேர ஒரு வரையறையுமில்லை, யார் வேண்டுமானாலும் கட்சி நடத்தலாம், எந்த ரவுடி வேண்டுமானாலும் ஆள வரலாம் எனும் பெரும் அபாயமுள்ள நாடு இது.


அதனை கட்டுபடுத்த ஒரு சட்டம் மகா அவசியமான தேசத்தில், நீட் அது இது என பொங்கி கொண்டிருக்கின்றார்கள்.


அரசியல்வாதிகளுக்கு ஒரு தேர்வு அவசியம் என சொல்லுங்கள், இந்த அழிச்சாட்டிய தமிழக அரசியல்வாதி எவனாவது நீட் பற்றி பேசுவான்? )



No comments:

Post a Comment