Monday, August 21, 2017

அணிகள் இணைந்ததாக பன்னீர் செல்வம் டிவிட்டரில் அறிவிப்பு





Image may contain: 2 people, people standing and suitஅப்பொழுதே அந்த மக்களுக்கு கிணறு இல்லை, முடிந்தால் பலகோடி கொடுத்து வாங்குங்கள் என சொன்னவர் பன்னீர் செல்வம்


இப்பொழுது துணை முதலமைச்சர் வேறு, இனி அந்த மக்களுக்கு ஏதும் நியாயம் கிடைக்கும்? கிடைக்கவே கிடைக்காது.


சதா பன்னீரின் தோளை தட்டி பேசும் மோடியும், ஆளுநரும் கூட அந்த கிணற்றை கொடுத்துவிடு என சொல்லவும் மாட்டார்கள்.





நிச்சயமாக அந்த மக்கள் பாவம், அவர்கள் என்ன? மொத்த தமிழக மக்களுமே பரிதாபம் தான்.



 

















 






Image may contain: 2 people, close-up"போடா எல்லாம் விட்டுதள்ளு பழசை எல்லாம் சுட்டுதள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுண்ணு எண்ணிகொள்ளடா டேய்

பயணம் நூறு போனால் என்ன? பாதை நூறு ஆனால் என்ன? 
டெல்லிக்காரன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டேய்"











 


 








Image may contain: 3 people, people smiling, people standingஅட பன்னீர் செல்வம், சசிகலா முன்பு உங்களுக்கு முதல்வர் பதவியே கொடுத்திருந்தாரே, இப்படி துணை முதல்வர் பதவிக்கு போராடியதா தர்மயுத்தம்?

இந்த துணை முதல்வர் பதவிக்கா இவ்வளவுநாளும் யுத்தம் புரிந்தீர்???

தர்மயுத்தம் என்றால் என்னவென்றாவது தெரியுமா?


இனியாவது இதிகாசங்களை படித்து தர்மயுத்தம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள கூடாதா?

சுக்ரீவனும், விபிஷ்ணனும் செய்ததன் பெயர் தர்ம யுத்தம் அல்ல மிஸ்டர் பன்னீர் செல்வம், அதன் பெயர் பதவி ஆசை வஞ்சகம்.

அது ராமர் கட்சிதான், இனி டெல்லிக்கு சென்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரையும் விட அவர்களுக்கு ராமாயணம் அத்துபடி.
















 

அணிகள் இணைந்ததாக பன்னீர் செல்வம் டிவிட்டரில் அறிவிப்பு


சசிகலாவினை நீக்கினார்களா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை, ஒருவேளை சசிகலாவினை நீக்கினால் என்னாகும்?


தமிழக அரசியலில் எதுவும் சாத்தியம் அல்லவா?





"புறக்கணிக்கபட்ட திராவிடர்கள் கட்சி" என ஒன்றை சசிகலா தொடங்கி, அதில் திமுகவில் புறக்கணிக்கபட்ட மாறன் பிரதர்ஸ் முதல் அழகிரி,முக முத்து எல்லாம் இணைந்து புதிக என்றொரு திராவிட கட்சி உதித்தால் என்னாகும்?

இருக்கவே இருக்கின்றது பெரியார், அண்ணா படங்கள் போதாதா? ஆரிய ஆக்கிரமிப்பு, திராவிட பாதுகாப்பு என சொல்லி எல்லோரும் இணைய நெடுநேரமாகாது.

எல்லா கட்சியிலும் விரட்டபட்ட திராவிடர்கள் எல்லோரும் கூடிவிட்டால் கட்சி மிக பெரிதாகிவிடும்.

அப்படி ஒரு விபரீதம் நடக்காமல் இருக்கும் என சொல்லமுடியாது, அரசியலில் எல்லாமே சாத்தியம்

ஆக புறக்கணிக்கபட்ட திராவிடர்களின் கட்சி ஒன்று திடீரென முளைத்தாலும் முளைக்கலாம்.

சந்தடி சாக்கில் வைகோவும் இணைய வாய்ப்பு உண்டு, அதன் பின் அந்த கட்சி உருப்படாது என்பது அடுத்த விஷயம்.




 






No comments:

Post a Comment