Thursday, August 31, 2017

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறை

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறையாகிவிட்டது.


என்ன செய்ய முடியும்?


எல்லா உணவையும் மாயா பஜார் ரங்கராவ் போல "ஹாஹ.. ஹாஹ.. ஹா" என ஒரு ரவுண்ட் வரவேண்டியதுதான்.




அப்படியே டிவியில் குஷ்பூ படத்தை ஓடவிட்டால் விடுமுறை சட்டென்று முடிந்துவிடும்.


குஷ்பூ நடித்த "ஜாதி மல்லி" படத்தில் இருந்து தொடங்குகின்றது விடுமுறை...






ஆமாம்டா, அந்த விவேகம் படம் பாகுபலி வசூல் மட்டுமல்ல, டைட்டானிக் மற்றும் அவதார் படத்து வசூலை விட பல மடங்கு வசூலித்துவிட்டது என நம்பிக்கொள்கின்றோம்


விட்டுறங்கடா.. இதே செய்தியினை எங்கு திரும்பினாலும் சொல்வதை தாங்க‌ முடியவில்லை.






எல்லா நாட்டிலும் எல்லோரும் ஒரிஜினல் லைசென்ஸோடுதான் வாகனம் செலுத்துகின்றார்கள்.


அதனை கொண்டு சென்றால்தான் என்ன? கையடக்க பொருள்தானே அது?


ஏடிஎம் கார்டு, பணம் இன்னபிற பொருட்களை கையில் எப்போதும் வைத்திருப்பவர்களுக்கு ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க முடியாதா?




எதுவுமே முறைபடுத்த பட கூடாது என்பதில் இவ்வளவு அக்கறையா?






ஏராளமானோர் லைசென்ஸ் இல்லாமல்தான் இதுகாலம் வண்டி ஒட்டி கொண்டிருந்திருக்கின்றான்
என்பது இப்பொழுதுதான் புரிகின்றது






மன கோட்டை கட்டுகின்றார் கமல் : தமிழிசை


அதை மண்கோட்டை கூட கட்ட வழியின்றி இருக்கும் தமிழிசை சொல்வதுதான் காமெடி









No comments:

Post a Comment