Wednesday, August 16, 2017

உயிரிழந்த வீரர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று வைகோ ஆறுதல்




Image may contain: 1 person, close-upகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வீரர் இளையராஜாவின் வீட்டிற்கு சென்று வைகோ ஆறுதல்


மிஸ்டர் வைகோ, உங்கள் நிலைப்பாடுதான் என்ன?


இந்திய ராணுவத்தை அந்நிய நாட்டு தீவிரவாத கும்பல் ஈழத்தில் சுட்டுகொன்றபொழுது , அந்த கும்பலை ஆதரித்துத்தான் நீங்கள் கடல் கடந்து விசா இல்லாமல் கள்ளதோணியில் எல்லாம் சென்றீர்கள்.





அதனை வீரசாகசமாக இன்றுவரை மேடையில் மட்டுமல்ல‌ கழிவறையில் கூட உங்களுக்கு நீங்களே சொல்கின்றீர்கள்.

சொந்த நாட்டு ராணுவத்தை எப்படி எல்லாம் அவமானமாக பேசினீர்கள். இந்நாட்டில் பேசினீர்கள் அந்நிய தீவிரவாதிகள் கைதட்ட அவர்கள் நடுவில் பேசினீர்கள்.

அதெல்லாம் மறக்க கூடியதா?

ஆனால் இன்று காஷ்மீர் தீவிரவாதியுடன் இந்திய வீரன் கொல்லபட்டால் ஆளுக்கு முன்பாக போய் அழுகின்றீர்கள்.

வெட்ககமாக இல்லை,

காஷ்மீரில் ஒரு நீதி, ஈழத்தில் ஒரு நீதியா மிஸ்டர் வைகோ?

இதுவா நாட்டுபற்று? நாட்டிற்காக உயிர்நீத்த இந்திய வீரனுக்கு அஞ்சலி செலுத்த ஒரு தகுதிவேண்டாமா மிஸ்டர் வைகோ?

அந்த புனிதமான வீரனின் மரணத்திற்கு இந்த பச்சோத்திதனமான அஞ்சலி எல்லாம் அவனின் நாட்டுபற்றை களங்கபடுத்தும் விஷயம் அய்யா.

பாகிஸ்தான் பிரதமர் இந்த சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தினால் அது எவ்வளவு கொடூரமோ, அதே கொடுரம் தான் உங்களின் அஞ்சலியும்.

உங்களின் இந்த கேவலமான அஞ்சலியினை திரும்ப பெற்றுகொள்ளுங்கள், அந்த மாவீரனின் புகழ் களங்கபட வேண்டாம்.













 




 


No comments:

Post a Comment