Tuesday, August 22, 2017

காலம் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது



Image may contain: 2 people, people smiling, sunglassesகிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன், அந்த ராமசந்திரன் காலமான பின், இதே போன்ற பெரும் குழப்பம் அதிமுகவில் இருந்தது, ஜாணகி ஜெயா அணிகள் மோதிகொண்டிருந்தன‌


இதில் ஜெயா பக்கம் நடராஜனும், ஜாணகி பக்கம் ஆர்.எம் வீரப்பனுமாக நின்று மோதிகொண்டிருந்தார்கள். மத்தியில் பலமான ராஜிவின் ஆதரவு ஜெயாவிற்கே இருந்தது.


இந்த அதிமுக சண்டை காரணமாக இரட்டை இலை முடக்கபட்டது, அது இல்லா தேர்தலில் கலைஞர் ஆட்சிக்கும் வந்தார்.


அதன் பின் அதிமுக அணிகள் இணைந்தன, இரட்டை இலை மீட்கபட்டதும், இணைந்த அணியில் ஜாணகி அணி காணாமல் போனது, நடராஜனின் தந்திரத்தில் எல்லோரும் ஓரம்கட்டபட்டு ஜெயா ஒரே தலைவரும் ஆனார்


பின் ராஜிவிற்கு விருந்து வைத்து, கலைஞர் ஆட்சியும் கவிழ்க்கபட்டது. அதற்கு பெரும் காரணம் நடராஜன், தமிழகத்தில் பத்மநாபா கொல்லபட்டு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கலைஞர் அரசு கலைக்கபட்டது


கலைஞர் புலிகளை வளர்க்க்கின்றார், அவரை டிஸ்மிஸ் செய்யுங்கள் என டெல்லியில் மல்லுகட்டியவர் இதே நடராஜன், இன்று முள்ளிவாய்க்காலில் கலைஞர் ஈழதமிழருக்கு துரோகம் செய்தார் என சொல்லும் இதே நடராஜன்


அமைதிபடை இலங்கையில் மோதலில் இருக்கும் பொழுது, ராஜிவ் பக்கம் நின்றது இதே நடராஜனும் , ஜெயாவும்தான்.


பின் கலைஞர் ஆட்சி ஆளுநர் ஒப்புதலின்றி ராஜிவ்காந்தி நிர்பந்தத்தால் கலைக்கபட்டு பின் வந்த தேர்தலில் ராஜிவும் செத்து ஜெயா முதல்வரானார்


ஜெயா மூலமாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கொண்டுவரும் திட்டம் ராஜிவிற்கு இருந்தது, ஆனால் ராஜிவினை பயன்படுத்திவிட்டு தந்திரமாக அவர் ரத்தத்தில் ஆட்சிக்கும் வந்துவிட்டு காங்கிரசுக்கு பெப்பே காட்டினார்கள், நடராஜனும் ஜெயாவும்.


ராஜிவ் கொலைக்கு மூன்றுமாதம் முன்னால் வெளிநாடு சென்றார், நடராசன் ஏன் சென்றார்? எதற்கு சென்றார்? என்பதனையெல்லாம் யாரும் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டார்கள்,


அதன் பின் ஜாணகியினை மறந்தது போலவே , ராஜிவினையும் ஜெயா மறந்தார்.


(1989ல் ராஜிவினை மடக்கி கலைஞர் ஆட்சியினை கலைக்க வைத்த ஜெயல்லைதாவால் பின்பு வாஜ்பாயினை மடக்கி கலைஞர் ஆட்சியினை கலைக்க வைக்க முடியவில்லை, அதற்கு தேர்தலே மேல் என தைரியமாக நின்றவர் வாஜ்பாய்.


பின்னாளில் வாஜ்பாயோடு கலைஞர் கூட்டணி அமைக்க அதுதான் காரணம்)


இப்பொழுது அதே சூழல், கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கு பின் அதே காட்சிகள்.


ஆனால் டெல்லி இம்முறை நடராசன் கும்பலை ஒதுக்கியே தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றது. அன்று ஜாணகி அணியினை ஒதுக்க நடராசன் இருந்த தீவிரத்தில் இன்று மன்னார்குடியினை ஒதுக்க சிலர் தீவிரம்


அன்று ஜெயா மூலம் காங்கிரஸ் அதிகாரம் பெறும் என கணக்கிட்ட ராஜிவின் இடத்தில் இன்று மோடி இருக்கின்றார்.


இதில் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு.


இவர்களுக்கு தேவை இரட்டை இலை, அது கிடைத்தபின்புதான் உள்ளாட்சி தேர்தல் முதல் எல்லா தேர்தலும் எதிர்கொள்ள இவர்கள் வருவார்கள்.


இன்று பாஜக கை ஓங்கியிருப்பதால் சசிகலா கும்பலின் கைகள் கட்டபட்டிருக்க்கலாம், காங்கிரஸ் கதவை தட்டலாம் என்றாலும் அதுவும் பலமிழந்திருக்கின்றது போதா குறைக்கு அதிமுகவிடம் அது பாடம் படித்த கட்சி, அந்த‌ மாறாத வடு நடராசன் போட்டுவிட்டது.


இனி அதிகமில்லை இராண்டுக்குள் பாராளுமன்ற தேர்தல் வரும், அதன் முடிவுகளை பொறுத்தே இனி சசிகலாவின் நகர்வுகள் இருக்கும்


இந்த பழனி, பன்னீர் எல்லாம் நம்பகூடிய ரகம் அல்ல. நாளையே பாஜகவிற்கு சிக்கல் என்றால் சசிகலா பக்கம் அட்டகாசமாக பல்டி அடிப்பார்கள்.


நடராஜன் கும்பலும் நாடக தந்திரத்தில் கைதேர்ந்தது, அவ்வளவு எளிதாக எல்லாம் அது கட்சியினை விட்டு நகராது, மீறி நகர்தால் அது ஏற்படுதும் பாதிப்பு மிக பெரிதாக இருக்கும், அதனை பன்னீரும் பழனிச்சாமியும் எதிர் கொள்வது மகா சிரமம்.


அவர்களும் ஏதோ திட்டத்தோடு நகர்ந்துகொண்டிருக்கலாம், ஆனால் முன்பெல்லாம் இருந்த ஜெயா எனும் பரமசிவன் இப்பொழுது இல்லை


பரமசிவன் கழுத்தில் இல்லாத பாம்பிற்கு அவ்வளவு பாதுகாவலும் இல்லை


இரட்டை இலை மீட்கும் நடவடிக்கையில் முன்னேறியிருக்கின்றார்களே தவிர, அடுத்து என்னாகும் என்பது காலத்தின் கையில்தான் இருக்கின்றது.


ஆனால் காலம் எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது.













 


 

No comments:

Post a Comment