Friday, August 25, 2017

மாநில கல்வி உரிமைகளை வைத்து நடந்த விஷயங்கள் என்ன?

மருத்துவ கல்வியில் மாநில உரிமை பறிக்கபட்டுவிட்டது, இது அநீதி , ஆரிய படையெடுப்பு என பல சத்தங்கள்


மாநில கல்வி உரிமைகளை வைத்து இங்கு நடந்த விஷயங்கள் என்ன?


சீனிவாச ராமானுஜம் பெயர் சூட்டபடவேண்டிய பல்கலைகழகம் விஞஞானம் தெரியாத அண்ணா பெயர் சூட்டபட்டு முதலில் மதிப்பிழந்தது.




ராமசந்திர உடையார் எனும் சாராய வியாபாரி கல்வி தந்தையானார்.


சாதாரண கான்ஸ்டபிளான பனிமயராஜ், ஜேபிஆர் எனும் கல்வி தந்தையானார், பச்சைமுத்து இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானார்.


அது சரி என சொல்ல தெரியாமல் எம்ஜிஆர் பின்னால் நின்று ஐசரி, ஐசரி என தலையாட்டிய பொம்மையின் வாரிசுகள் இன்று கல்வி தந்தை


இப்படி சமூக விரோதிகள், அறவே சமூக பொறுப்பு இல்லாதவர்கள், கொஞ்சமும் கல்லாதவர்களை எல்லாம் கல்விக்கே தந்தையாக்கியதை தவிர மாநில உரிமைகள் என்ன செய்தது?


ஊருக்கொரு கல்விதந்தையினை உருவாக்குவதுதான் மாநில உரிமையா?


கூழை கும்பிடு ஒன்றே தகுதியாய் கொள்ளபட்டு கல்வி நிலையங்கள் அவர்களிடம் ஒப்படைக்க படலாமா? அது எவ்வளவு பெரும் சிக்கலை உருவாக்கும் என மாநில உரிமைகளை காப்பவர்கள் யோசித்தார்களா?


கல்விக்கே உண்டான தரத்தை சீரழித்து கெடுத்தார்கள், கொஞ்சமும் தரமே இல்லா குப்பை பட்டதாரிகளை உருவாக்கிவிட்டு அவர்கள் கல்லா நிரப்பிவிட்டு, அந்த கல்லாவிலிருந்து தமிழக கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுக்கும் எவ்வளவு பெரும் அயோக்கியதனம் நடக்கின்றது.


இதுதான் மாநில உரிமை காத்து நிற்கும் கல்வி.


மாநில கல்வி உரிமைகளை முறையாக பயன்படுத்தியிருந்தால் இம்மாநிலம் ஏன் இப்படி சிக்கலில் தவிக்க போகின்றது.


நீட் தேர்வு என மத்திய அரசு சொல்லிகொண்டேதான் இருந்தது, இங்கு ஜெயா மருத்துவமனை காட்சி , நிலையற்ற அரசு போன்ற காரணங்களால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டது அல்லது யாரிடமும் அதிகாரமில்லை.


ஆக மாநில அரசு முன் தயாரிப்பு செய்யாத குற்றசாட்டும் பலமானதா? இல்லையா?


நீட் தேர்வு மட்டுமல்ல, எல்லா படிப்பிற்கும் இப்படி எல்லாம் தரம் நிர்ணயித்து இவர்கள் கொட்டத்தை அடக்க வெண்டும்.


பலர் கொள்ளையடிக்கவும், சிலர் ஆயிரம் கோடிகளில் புரளவும்தான் மாநில உரிமை வேண்டும் என்றால் அது இல்லாமலே போகட்டும்



No comments:

Post a Comment