Thursday, August 24, 2017

எம்ஜிஆர் மீதும் மது வியாபார ஊழல் புகார் ...

எம்ஜிஆர் மீதும் மதுவியாபார ஊழல் புகார் தொடர்பாக ரே கமிஷன் என்ப அமைக்கபட்டது.


மது வியாபார டெண்டர், பார் அனுமதியில் பயங்கர ஊழல் என்ற பெரும் குற்றசாட்டு அது. பூதாகரமாகத்தான் கிளம்பியது.


அந்த நேரம் வசமாக பிரபாகரன் சிக்க, அவனை வைத்தே அரசியல் செய்து ஒருமாதிரி பரபரப்பினை ஏற்படுத்தி ரே கமிஷன் செய்திகள் வெளிவராமல் பார்த்துகொண்டார் ராமசந்திரன்.




"நான் சொன்னால் மட்டும் தான் பிரபாகரன் கேட்பான்." என சொல்லியே டெல்லிக்கு செக் வைத்து ஒரு தேசதுரோக அரசியல் செய்து கொண்டிருந்தார் ராமசந்திரன். அதில் ரே கமிஷன் செய்திகள் மறைக்கபட்டன.


ரே கமிஷன் விசாரணை நடந்து கொண்டே இருந்தது, முடிவு இறுதிவரை வரவில்லை. ராமசந்திரன் இறந்த பின் அந்த கமிஷனுக்கு பால் ஊற்றபட்டது


இன்று அந்த ரே கமிஷன் அறிக்கையினை எக்ஸ்ரே எடுத்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.


ஜெயா மீது மிக சில மாதங்களிலே முடிந்துவிடும் ஆதார பூர்வமான வலுவான வழக்கு பதியபட்டது, ஆனால் தீர்ப்பு அவர் இறந்தபின்புதான் வந்திருக்கின்றது


ராமசந்திரனையும், ஜெயாவினையும் அவர்கள் இருக்கும்வரை அவர்கள் சிறைக்கு செல்லாமல் காப்பாற்றிய சக்தி எது? ஏன் காப்பாற்றிற்று என்று இன்றுவரை புரியவில்லை.



No comments:

Post a Comment