Thursday, August 31, 2017

மிக மிக தடுமாறுகின்றார்

download-1.jpg


வருகின்ற பல செய்திகள்படி சொல்வதென்றால், நாடு மோசமான நிலையினை எட்டிகொண்டிருக்கின்றது.


ரூபாய் நோட்டு ஒழிப்பு இன்னபிற நடவடிக்கை எல்லாம் ஒரு விளைவினையும் ஏற்படுத்தவில்லை, மாறாக பல முன் தயாரிப்பில்லா பல திட்டங்கள் நாட்டை பல சிக்கல்களில் ஆழ்த்தியிருக்கின்றது


தொழில் முடக்கம் ஏற்படுகின்றது, வேலை வாய்பில்லா சிக்கல் பெருகுகின்றது, பொருளாதாரம் சரிகின்றது.




இது முன்பே சொல்லபட்ட விஷயங்கள்தான். இந்தியா மிகபெரிய நாடு, பெரும் மக்கள் தொகை உள்ள நாடு.


எல்லா மாற்றங்களும் தேவைதான், ஆனால் அவையெல்லாம் ஒரே நாளில் மாறிவிடும் விஷயம் அல்ல. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவைகளை மாற்றமுடியும்


மாறாக மிக அவசரமாக மாற்றினால் அதன் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும், இதன் கூட மாட்டுகறி இன்னபிற மதவாத கொடுமைகள் சேர்ந்தால் தேசம் நாசமாகத்தான் போகும்.


வருகின்ற தகவல்கள் அதனை உண்மையாக்குகின்றன.


சோவியத் யூனியனை சீர்திருத்துவேன் என கார்பசேவ் செய்த சில அதிரடி நடவடிக்கைகள்தான் அந்த நாடே சிதற காரணமானது, சில கசப்பு மருந்துகளை ஓவராக கொடுத்தால் அப்படித்தான்


உலகநாடுகள் இங்கு வந்து தொழில் தொடங்கவும், பல விஷயங்கள் கொண்டுவரவும் இங்கு அமைதியான சூழல் மகா முக்கியம்


அங்கே ரூபாய் நோட்டை ஒளித்துவைத்து விளையாடுவார்களாம், மாட்டுகறிக்காக அடிப்பார்களாம். ஒரு வித பதற்ற சூழல் எங்கும் நிலவுமாம். அரசு எப்பொழுது என்ன செய்யும் என யாருக்கும் தெரியாதாம் என்றெல்லாம் உலகில் செய்திகள் வந்தால் யார் இங்கு வருவார்கள்?


பெட்ரோல் விலை அதிகரிக்கின்றது, முன்பே சொன்னதுதான் இஸ்ரேலோடு நெருங்கினால் மறைமுகமாக இப்படி பல சிக்கல்கள் வரத்தான் செய்யும்


மோடி அரசு மிகபெரும் தோல்வியினை சந்தித்திருக்கின்றது என்பதே உண்மை.


இனியாவது இந்நாட்டின் யதார்த்திற்கு எது பொருந்துமோ அதனை செய்வது நல்லது.


சுருக்கமாக சொன்னால் இப்படி சொல்லலாம்.


மோடி இந்நாட்டிற்கு ஏதாவது செய்ய விரும்புகின்றார் என்பது உண்மை, ஆனால் எதனை செய்யவேண்டும் எதனை செய்ய கூடாது என்பதில் அவர் மிக மிக தடுமாறுகின்றார்.



No comments:

Post a Comment