Monday, August 28, 2017

அக்கரை இக்கரை செய்திகள்

டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற இந்தியா-சீனா ஒப்புதல்


இதனைத்தான் அன்றே சொன்னோம் இரண்டு பயலுமே சண்டைக்கு தயார் இல்லை, சும்மா வீம்புக்கு நிற்கின்றார்கள் தானாக விலகிவிடுவார்கள் என சொல்லியிருந்தோம்


அப்படியே விலகிவிட்டார்கள், ஆனாலும் பாருங்கள் அடிக்கடி உரசுவார்கள்.





ஏன் என்றால் சவுண்டு விடாமல் அரசியல் இல்லை..





இந்த தினகரனுக்கும், எடப்பாடி கும்பலுக்கும் ஒரு பொறுப்பே இல்லை


பின் என்ன?


மணி 9 ஆகின்றது, இன்னும் இருவரும் இன்று யார் யார் நீக்கம் என்றும், யார் புதிய பொறுப்பாளர்கள் என்றும் இன்னும் அறிவிக்க தொடங்கவில்லை.




இன்றைய நீக்கம் செய்தி இன்னும் வரவில்லை என்றால், இராணுவ கட்டுகோப்பு கொண்ட கட்சி என்பதற்கு என்ன அர்த்தம்.


மேட்டூர் அணை நீர்மட்டம் போல தன் பக்கம் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையினை இருவரும் இன்னும் வாசித்துகாட்டவில்லை என்றால் ஒரு சாமான்யனுக்கு கோபம் வராதா?


இப்படியே எல்லோரையும் நீக்கிவிட்டால் அடுத்து யாரை நீக்குவார்கள்?


அதன் பின் அதிமுகவில் இருந்துகொண்டு திமுகவினைரை நீக்குவார்களோ?


ஆர்வ கோளாறில் திமுக உறுப்பினர்களை இவர்கள் நீக்காத வரை சிக்கல் இல்லை.






தினகரனையும், சசிகலாவினையும் கட்சியினை விட்டு விலக்க தீர்மானமே போட போகின்றார்களாம் எடப்பாடி கோஷ்டி


அப்படியே நமது எம்ஜிஆர், ஜெயா டிவியினை இவர்களே நடத்தபோகின்றார்களாம், அந்த குப்பைகள் இருந்தால் என்ன நடந்தால் என்ன?


மொத்தமாக மூடினால் இன்னும் நல்லது.




விரைவில் பொதுகுழு, செயற்குழு எல்லாம் கூட போகின்றதாம், ஆக சசிகலாவிற்கு கட்டம் கட்டுகின்றார்கள்.


இவர்கள் இவ்வளவு தூரம் சென்றால் அவர்கள் நிச்சயம் ஆட்சி கவிழ்ப்பு வரை செல்லலாம், ஆனால் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பது இருவருக்கும் எளிதானதல்ல, அதன் பின் இருவரும் தலைசொரிந்துதான் நிற்கவேண்டும்


இப்போதைக்கு டெல்லி மிரட்டல்படி சசிகலா வெளியேற்றபட போகின்றார்.


இதற்குத்தான் அன்று அம்மா சமாதியில் அந்த அடி அடித்துவிட்டு சென்றிருப்பாரோ?


சரி இனி இவர்கள் கூடி யாரை பொதுசெயலாளாரக தேர்ந்தெடுப்பர்? யாரை கட்சி தலைவராக்குவார்கள்?


இப்பொழுதெல்லாம் சட்டசபையில் கொறடா, சபாநாயகர் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என இந்த எச்.ராசா சொல்வதை எல்லாம் கேட்கும் பொழுது பகீர் என்கின்றது


ஒருவேளை அவரை பொதுசெயலாளர் ஆக்குவார்களோ?






இந்தியாவிலிருந்து கடத்தப்படவிருந்த 150 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது


சமீபத்தில் தூத்துகுடியில் இருந்து இலங்கைக்கு கடத்தபட இருந்த பலகோடி ரூபாய் போதைபொருள் கைபற்றபட்ட செய்தியும் வந்திருந்தது


இலங்கை இந்தியா இடையே இம்மாதிரியான கடத்தல்கள் நடப்பதும் வாடிக்கையான ஒன்று, இதனை தடுக்கத்தான் சிங்கள கடற்படை அடிக்கடி அத்துமீறும் காரியங்களும் உண்டு




தமிழக மீணவர்களின் மிக பெரும் இன்னலுக்கு இந்த கும்பல்தான் காரணம்,


மீணவர் போர்வையில் ஒளிந்து இவர்கள் செய்யும் கடத்தல்தான் பெரும் சிக்கல்களுக்கு முதல் காரணம்


நல்லவேளையாக கரையினில் பிடித்தார்கள். கடலில் பிடித்திருந்தால் என்னாகும்?


அப்பாவி மீணவனை இந்திய கடற்படையே போட்டு அடித்தது, அல்லது சிங்களன் பிடித்திருந்தால் சிங்கள கடற்படை அப்பாவி மீணவனை பிடித்து சென்றது, கேட்க நாதியில்லா இனம் தமிழினம்...







Image may contain: 1 person, close-up

 

 

 

தோகை விரித்த இந்த மயிலை கண்டபின் சென்னையில் எப்படி மழை இல்லாமல் போகும்?

மயில் அழகினை கண்டால் மேகம் மழை கொட்டியே தீரும்.

சென்னையில் மழைகொட்ட காரணமே இந்த மயில்தான்.




 



No comments:

Post a Comment