Friday, August 25, 2017

பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம்....




Image may contain: 1 person, selfieஇன்றுவரை தான் யாழ்பாணம் சென்று புலிகளோடு பழகியது பற்றியோ, சிவராசனுக்கு வயர்லெஸ் பேட்டரி மற்றும் பைக் வாங்கி கொடுத்தது பற்றியோ பேரரிவாளனும் மூச் விடவில்லை அவன் தயார் அற்புதம்மாளும் சொல்லவில்லை.


சொன்னது எல்லாம் நாங்கள் நிரபராதி என்ற ஒரு சொல் மட்டுமே.


பேரரிவாளனின் நிலைக்கு முதல் காரணம் அவன் தந்தை, திராவிடம் என்பதை வெறியாக அவர் மகனுக்கு போதித்ததே மகன் இன்று வாழ்வு தொலைத்து நிற்பதற்கு காரணம்.





அந்த அதிதீவிர திராவிடரை சந்திக்கத்தான் பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம்.

அவர் தந்தை மீது அவருக்கு அவ்வளவு பாசமாம், கடமையாம்

அப்படியானால் திருப்பெரும் புதூரில் ராஜிவோடு செத்த அந்த 17 உறுப்பினர்களின் குடும்பத்தாரும் யாரை சந்திக்க முடியும்? யாரை தேடி ஆறுதல் அடைய முடியும்?

ராஜிவ் கொலைக்கு உடந்தையான பேரரிவாளனுக்கு போலிஸ் பாதுகாப்பு, அதே ராஜிவ் கொலையில் செத்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பம் இதனை பார்க்கும்பொழுது அவர்கள் மனம் என்ன பாடுபடும்?

தன் மீதான பெரும் நெருக்கடியினை சமாளிக்க பழனிச்சாமி அரசு விபரீத காரியங்களில் இறங்கியிருக்கின்றது.

ஏதோ பேரரிவாளன் என்பவன் இந்தியாவிற்காக 30 வருடம் சிறையில் இருந்துவிட்டு வருவதை போல ஆர்ப்பாட்டங்கள்

வருக ..வருக எனும் அவமான கோஷங்கள்..

பேரரிவாளனை தொடர்ந்து இனி எல்லோருக்கும் பரோல் வழங்கபடலாம், எல்லோரும் சிரித்து கொண்டே ஒலிம்பிக் மெடல் வென்றவர்கள் போல சாகச சிரிப்பு சிரித்துகொண்டே வரலாம்

இது தேசம் முழுக்க எதிரொலித்தால் எல்லா தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் எல்லாம் இதே கோலத்தில் வந்து கையசைப்பார்கள்

இதோ 26 ஆண்டுகாலம் சிறையில் இருந்தும் புலிகள் எம்மை வஞ்சித்தார்கள் என்றோ, சிவராசன் கழுத்தறுத்தான் என்றோ சொல்ல இன்னும் பேரரிவாளனுக்கும், நளினிக்கும் வார்த்தை வரவில்லை என்றால்..

புலிகளையும் பிரபாகரனையும் விமர்சித்து ஒரு வார்த்தை இன்னும் வரவில்லை என்றால்......

இதனால் இவர்கள் சொல்லவருவது என்ன? நாங்கள் புலிகள், ராஜிவினை கொல்ல‌ நாங்கள் தான் உதவினோம் என்பதே.

பேரரிவாளன் ஒன்றும் பெரும் உத்தமர் அல்ல, இன்றுவரை தான் எப்படி புலியானேன் என்று ஒருவார்த்தையும் சொல்லா மவுன குற்றவாளி அவர்.

தமிழக அரசு சில கட்டுபாடுகள் போட்டுத்தான் அனுப்பியிருக்கின்றது.

இந்த அங்கிள் சைமன், வைகோ, கொளத்தூர் மணி, வேல்முருகன் போன்ற தேசவிரோதிகள் எல்லாம் சந்திக்க போகின்றார்களா? இல்லையா என்பது இனிதான் தெரியவரும்.

அவர்களை போன்றோரால் இந்த குற்றவாளிக்கு பெரும் வரவேற்பும், ஊடக கொண்டாட்டமும் இருப்பதாக கருதினால் அரசு பரோலை ரத்து செய்யவேண்டும்.

முகநூல் முதல் முட்டுசந்துவரை நின்றுகொண்டு, "பேரரிவாளனே வருக.." எவனாது சொன்னால் அவர்களை தூக்கி போட வேண்டிய இடத்தில் போட வேண்டும்.

மீறி பழனிச்சாமி அரசு அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை ஊர்வலம் வரச்செய்தால், அன்று கலைஞருக்கு எதிராக பாய்ச்சிய 356ம் சட்ட பிரிவினை பழனிச்சாமிக்கு எதிராக வீசவும் மத்திய அரசு தயங்க கூடாது.













 




 









No comments:

Post a Comment