Thursday, August 17, 2017

அக்கட.. இக்கட.. எக்கட...

தெலுங்கில் திரைப்படமாகிறது பிரபாகரன் தலைமையிலான ஈழப்போர்


அங்கிள் சைமன், உங்களுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது ..


என்ன தைரியமிருந்தால் தமிழரை தமிழ்நாட்டில் ஒடுக்கிய தெலுங்கன், இலங்கையில் சிங்களனோடு சேர்ந்த தெலுங்கன் உங்கள் அண்ணன் கதையினை படமாக எடுப்பான்?




திருப்பதிக்கு சிங்கள அதிபரை வரவேற்கும் தெலுங்கனுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்?


ம்ம். உங்கள் வீர தமிழ் எளிய பிள்ளைகளை கூட்டிகொண்டு கிளம்புங்கள்






தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் சிக்கல் இல்லையென்றால் கன்னடம் அணைகட்டலாம் : உச்ச நீதிமன்றம் யோசனை


சிக்கலே தண்ணீர் கொடுக்கவில்லை என்பதில்தான், இதில் எத்தனை அணையும் கட்டிகொள்ளுங்கள் என்றால் எப்படி?


கூடுதல் அணைகட்டினால் கன்னடம் நீரை தேக்குமா அல்லது கொடுக்குமா?




இதே நீதிமன்றத்தில்தான் பலமுறை தமிழகம் நீருக்காக வழக்காடியிருக்கின்றது, இன்னும் சிக்கல் தீரவில்லை


அதனை எல்லாம் மறந்துவிட்டு இப்படி யோசனை சொன்னால் அது நீதிமன்றம் அல்ல மாறாக உச்ச அநீதி மன்றம்.


எடப்பாடி அரசு இதில் என்ன செய்யபோகின்றது என பார்த்தால், அது "யார் காலில் யார் விழுந்தார்கள்?" எனும் பட்டிமன்றம் நடத்திகொண்டிருக்கின்றது.






ஆக. 20 ரஜினி அரசியல் வருகைக்கு அடித்தளம்,ஆட்சி கவிழ்வதற்கான தொடங்கம்: தமிழருவி மணியன்


ஏம்பா அமைச்சர்களா? இந்த கமலஹாசனை பார்த்தால் பொங்குகின்றீர்கள்? இவரை கண்டுகொள்ளமாட்டீர்களா?


ரஜினி மகா அமைதி, மணியன் சீறுவதை கண்டால் இவர் அந்த லதா ரஜினிகாந்தின் கைகூலியோ எனும் சந்தேகம் வலுக்கின்றது.




அந்த அம்மணி வாடகைபாக்கியில் சிக்கியிருக்கும் பொழுது ரஜினி ஆகஸ்டு 20ல் அரசியலுக்கு வருகின்றார் என இவர் கத்தினால் வேறு அர்த்தம் என்ன?






குஷ்பூ ரசிகர் மன்றத்தின் தூணும், சங்க‌ பொதுசெயலளராகவும் இருந்த Sadhu Sadhath என்பவரை காணவில்லை


Babu Rao , Chandran Kannan மீது சந்தேகம் வலுக்கின்றது, அவர்கள் இவரை கடத்திகொண்டு போய் நயந்தாரா சங்கத்தில் சேர்த்திருக்கலாம்


அல்லது "வேலைக்காரன்" படம் முதல் ஷோ டிக்கெட் என ஆசைகாட்டி கடத்தியிருக்கலாம்.




அன்னாரை விடுவிக்காவிட்டால் நாடு தாங்காது என அந்த எல்.கே,ஜி பாய்ஸை எச்சரிக்கின்றோம்







 




No comments:

Post a Comment