Monday, August 21, 2017

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு ‘கேலிக்கூத்து’: குஷ்பு




Image may contain: 1 personஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு ‘கேலிக்கூத்து’: குஷ்பு கருத்து


இது முழுக்க சுயநலம் , இவர்கள் இணைந்தாலும் மக்களுக்கு நன்மை ஒன்றுமில்லை, ஆட்சியினை தக்கவைக்க நடத்தும் பேரம், சசிகலா அவ்வளவு எளிதில் வெளிசெல்லமாட்டார், இது எல்லாம் நாடகம் என மிக துணிச்சலாக பேசியிருக்கின்றார் குஷ்பூ


அதோடு மட்டுமல்ல, இது தமிழகத்தில் நுழைய வேறு வழி தெரியாத பாஜகவின் சித்துவிளையாட்டு எனவும், ஒரு காலமும் அதன் திட்டம் வெற்றிபெறாது எனவும் சொல்லியிருக்கின்றார்.





காங்கிரசில் எல்லோரும் வாய்மூடி மவுனித்து நிற்கும் பொழுது, திமுகவே பட்டும் படாமலும் பேசிகொண்டிருக்கும் பொழுது மிக துணிச்சலாக தன் கருத்தினை பதிவு செய்கின்றார் குஷ்பூ.

இன்று இவரைப்போல மகா துணிச்சலாக பேசும் ஒரு மாற்றுகட்சி பிரமுகரை காட்டுங்கள் பார்க்கலாம்.

எத்தனை கட்சிகளும் அதன் தலைவர்களும் உள்ள தமிழகம் இது, அதிமுக பற்றி பேச யாருக்காவது துணிவு இருக்கின்றதா? கவனியுங்கள் எல்லோரும் கப்சிப்

நாங்கள் எல்லாம் ஏன் இந்த மாபெரும் தைரியநாயகியின் ரசிகர்களாக தொண்டர்களாக இருக்கின்றோம் என்றால் அவரது இந்த அதிரடி கருத்துக்களுக்காகத்தான்.

மிக அசால்ட்டாக பாஜகவின் உண்மை முகத்தை , தமிழக நிலவரத்தை சொல்லிவிட்டார் குஷ்பூ.

சும்மாவே அமித்ஷா வராத அதிர்ச்சியில் இருக்கும் தமிழிசைக்கு, குஷ்பூவின் இந்த அறிக்கை பெரும் உளறலை கொடுக்கும், அதில் "ஜெயலலிதா சாவுக்கு பாஜக காரணம் அல்ல.." என்பது வரை உச்சகட்டமாக அவர் உளர வாய்ப்பு உண்டு

மிக தைரியமாக அரசியலில் அதிரடியாக தன் கருத்துக்களை வைக்கும் குஷ்பூவிற்கு, சங்கம் தன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

குஷ்பூ ரசிகர்களாக இருப்பதில் சங்கம் பெருமையும், மகிழ்வும் கொள்கின்றது.












12 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் அவசர ஆலோசனை


ஆக இவரின் பலம் வெறும் 12 எம்.எல்.ஏக்கள்தான், இப்படியா தன் பலவீனத்தை வெளிகாட்டுவார் தினகரன்?


இனி ஏன் பழனிச்சாமி பயப்படபோகின்றார்?












 


 அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் மீண்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அந்த ஜெயலலிதாவினை ராமசந்திரன் கூட‌ இப்படி அலங்கரித்திருக்கமாட்டார்.

ஆனால் அவர் சமாதிக்கு இவர்களால் ஓயாத அலங்கரிப்பு, என்னமோ போங்கடா...




 

No comments:

Post a Comment