Friday, August 18, 2017

சசிகலா பிறந்த நாள்




Image may contain: 2 people, people smiling, people sitting, screen, office, table and indoor


சசிகலாவிற்கு இன்று பிறந்தநாள், சட்டம் இடம் கொடுத்தால் சிறையில் பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கபடும் என சசிகலா ஆதரவாளர்கள் பேட்டி


சட்டத்திற்கு இவர்கள் என்று இடம் கொடுத்தார்கள்? கொடுக்க வேண்டியதைத்தான் கொடுத்தார்கள்.


ஒருவேளை அனுமதிகிடைத்தால் சசிகலா சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கி என்ன சொல்வார்?




" உங்களோடு நான், உங்களுக்காக நான், உங்களால் நான்"







என்னசொன்னாலும் ஒரு உண்மையினை ஏற்றுகொள்ளவேண்டும், ராஜாஜிக்கு பின் அப்படியே பிராமணருக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் ஜெயலலிதா.


ஜெயாவின் ஆட்சி , ராஜாஜி ஆட்சியின் தொடர்ச்சியாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால் மிக தந்திரமாக ஆடி அதனை டெல்லிக்கு அடங்காத திராவிட‌ ஆட்சியாகவே வைத்திருந்தவர் சசிகலா.


இன்று சிறையில் இருந்தாலும் டெல்லிக்கு அடங்கும் பன்னீரையும், எடப்பாடிக்கும் அவர் சிம்ம சொப்பணமே.





சசிகலா எனும் பெயர் இப்பொழுதும் பாஜகவிற்கும் அதற்கு ஜால்ரா அடிக்கும் அதிமுகவினருக்கும் உதறலே. ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

அவரை சிறையில் இட்டபின்னும் அஞ்சி சாகின்றார்கள். மறுக்க முடியாது.

பாஜக எனும் ஒரு சக்தி சசிகலா இருக்கும்வரை அதிமுகவினை அபகரிக்கமுடியாது என எண்ணி தன் முழுசக்தியினை பயன்படுத்தினாலும் சசிகலாவினை முழுதும் முடக்க முடியவிலை, பல இடங்களில் சறுக்குகின்றது.

அதிமுகவினை விழுங்கிவிடலாம் எனும் பாஜகவின் நகர்வுகளை மிக சாதுர்யமாக சசிகலா நொறுக்கிவருவதையும் காணமுடிகின்றது.

கண்ணுக்கு தெரியாத அந்த ஆரிய திராவிட‌ யுத்தத்தில் இன்னும் சசிகலாவின் கை ஓங்கித்தான் இருக்கின்றது, கவனித்தால் புரியும்.

அந்த நோக்கில் சசிகலா உண்மையான திராவிட போராளி, ஆச்சரியமான போராளி,

பிரமாணர் சூழ் ஜெயலிதாவினை தன் சாகச நகர்வால் கட்டுபடுத்திய தந்திரம் சாமான்யமானதல்ல.

அந்த சாகசத்திற்கும், அந்த ராஜதந்திரத்திற்கும் ஒரு சல்யூட் அடித்தே தீரவேண்டும்.

சாமர்த்தியமான‌ வேலைக்காரன் எஜமானின் இடத்தில் அமர்வான் என்பது யூதமொழி. நெப்போலியனும், ஐதர் அலியும் அப்படித்தான் ஆட்சியில் அமர்ந்தார்கள்.

சசிகலாவும் அந்த வழியே, அந்த வரிசையே. சந்தேகமே இல்லை.

என்ன இருந்தாலும் கலைஞரின் கையால் தொட்டுகொடுக்கபட்டது அவரின் தாலி, அந்த கைராசி எப்படி வீணாய் போகும்?

அரசியல் என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது.

தமிழக அரசியலில் ஒரு அடையாளம் பெற்றுவிட்ட அந்த சசிகலாவிற்க்கு சிறை கம்பிகளின் இடையே பிறந்தநாள் வாழ்த்துக்களை ரகசியமாக தெரிவிக்கலாம்





 


No comments:

Post a Comment