Saturday, August 19, 2017

பல முகமுடிகள் கிழியலாம்




Image may contain: 8 peopleஉலகில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அலெக்ஸாண்டர் கால சமாதான பேச்சுக்கள் முதல், ஜெர்மனி இணைப்பு, அமெரிக்க ரஷ்ய அணுகுண்டு பேச்சுவார்த்தை, இப்பொழுது நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன் பேச்சு, இந்திய பாகிஸ்தான் பேச்சுக்கள், மிக சிக்கலான ஈரான் மேற்குலக பேச்சு, அமெரிக்க வடகொரிய பேச்சு, சிரிய அமைதி பேச்சு என ஏராளம்


ஆனால் இந்த பன்னீரும் எடப்பாடியும் பேசுவது போல ஒரு நாடும் பேசவில்லை.


பேசினார்கள், பேசுகின்றார்கள், இன்னும் பேசுவார்கள் எனும் அளவில் பேசிகொண்டே இருக்கின்றாகள், இன்னும் முடிவு பெறவில்லை, இன்னும் பேசுவார்களாம்





அப்படி என்னத்தான் பேசி தொலைகின்றார்களோ தெரியாது.

ஒரு மூழ்கபோகும் கட்சி அது, இவர்கள் அல்ல எம்ஜிஆரும் ஜெயாவும் எழுந்து வந்து இணைந்தாலே இனி அது உருப்படபோவதில்லை, இதில் இவர்கள் இணைந்து கிழிக்க போவதுமில்லை, இவர்கள் இணையாமல் அது காப்பாற்றபட போவதுமில்லை

பாஜக அரசு மத்திய தேர்தலை நோக்கி ஓடுகின்றது, அநேகமாக 2019 நடக்கவேண்டிய தேர்தலை 2018ல் முன் கூட்டியே நடத்த அது திட்டமிடுகின்றது.

தமிழகத்தில் அது தமிழிசையினை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவா முடியும்? அதிமுக மூலம்தான் இறங்கமுடியும், கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான்.

என்ன இருந்தாலும் நடராசன் ஒரு திராவிடபோராளி, சசிகலா குடும்பம் இருக்கும்வரை அதிமுகவில் பாஜக லகானை பிடிக்கமுடியாது, அதற்கு பன்னீரையும் எடப்பாடியினையும் போட்டு அடிக்கின்றார்கள்.

அவர்களும் சசிகலாவினை விரட்டும் நிகழ்வில் இறங்குகின்றார்கள், அவர்களுக்கும் வேறுவழியில்லை முதல்வராக இருந்து பன்னீரும் பழனிச்சாமியும் என்ன சேவை செய்தார்கள் எனும் பட்டியல் மத்திய அரசிடம் இருக்கலாமோ என்னமோ?

தமிழகம் மிக சீரழிந்துகொண்டிருக்கின்றது, இது மகா பலவீனமான அரசு என்பது மேகதாது அணைவிவகாரத்திலே தெரிகின்றது

நிச்சயம் தமிழகம் அதனை அனுமதித்து இருக்கவே கூடாது, ஆனால் மகா அமைதி, கன்னடத்துடன் கருப்புகொடி காட்டி போராடவேண்டிய பழனிச்சாமி , பன்னீருக்கு வெள்ளைகொடி காட்டிகொண்டிருக்கின்றார்.

இன்னும் என்னென்ன இம்சைகளை தமிழகம் காணப்போகின்றதோ தெரியாது.

ஆக பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பல விஷயங்களை பாஜக் செய்ய தொடங்கிவிட்டது என்பதுதான் நிஜம், விஷயங்கள் வேகமெடுக்கின்றன.

பல முகமுடிகள் கிழியலாம்

முதல் முகமூடியாக தீபா முகமூடி கிழிந்திருக்கின்றது, போயஸ் இல்லம் அரசுடமை என்றால், "என் குடும்ப சொத்தை கொடுக்க நீ யார்.." என எகிறுகின்றார்

"சரி அம்மணி, இவ்வளவு நாளும் அது உங்களிடமா போயஸ்வீடு இருந்தது?, உங்களால் ஒரு நாளாவது உள்ளே செல்ல முடிந்ததா? சசிகலா கும்பலில் கட்டுபாட்டில்தானே அது இருந்தது?

அதனை எதிர்த்து என்றாவது நீதிமன்றம் சென்றீரா? இல்லை சட்டபடி நடவடிக்கை ஏடும் எடுத்தீர்களா?" என்றால் அம்மணியிடம் பதில் இல்லை

அம்மணி சொல்லவரும் விஷயம் என்னவென்றால், போயஸ்கார்டன் வீடு சசிகலாவிடம் இருந்தால் சிக்கலே இல்லை, ஆனால் அரசு சொத்து என அறிவிக்கபட்டால் விடமாட்டேன்.

மொத்தத்தில் தான் ஒரு சசிகலாவின் அல்லக்கை என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றார் தீபா, வாழ்த்துக்கள்.

இன்னும் யாரின் முகமூடி எல்லாம் கிழியபோகின்றதோ தெரியவில்லை

மற்றபடி அந்த வரலாற்று சிறப்புமிக்க அந்த பழனி பன்னீர் பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றது, இந்த பழனிசாமியின் அழிச்சாட்டியத்தில் தமிழகம் பஞ்சாமிர்தத்தில் இட்ட பழமாக‌ நசுங்கிகொண்டிருக்கின்றது..













 


 

No comments:

Post a Comment