Tuesday, August 22, 2017

தமிழன் தலையில் கோமாளி குல்லா : கமல்ஹாசன்




Image may contain: 1 person, beard, hat and close-up1990களில் பர்னாலா என்றொரு ஆளுநர் இருந்தார், ராமசந்திரன் இறந்து அதிமுக பிளவுபட்டு கலைஞர் முதல்வரான நேரத்தில் அவர்தான் தமிழக ஆளுநர்.


சந்திரசேகர் ஆட்சி ராஜிவ் தயவில் நடந்துகொண்டிருக்க, தமிழகத்தில் கலைஞர் ஆட்சியினை கலைக்கும்படி ஜெயா ராஜிவினை நெருக்க, ராஜிவ் சந்திரசேகரை நெருக்கினார்.


ஒரு ஆட்சி சட்டபடி கலைக்கபட ஆளுநரின் அனுமதி அவசியம்.





தமிழகத்தில் ஒரு அசாதரண நிலையுமில்லை, இங்கு ஆட்சி கலைக்க அவசியமில்லை, அப்படி ஒரு அறிக்கை தரமாட்டேன் என உறுதியாய் நின்றார் பர்னாலா.

அது எப்படி? பத்மநாபா கொல்லபட்டிருக்கின்றார், புலிகள் ஏகபோகமாக சுற்றுகின்றார்கள், திமுக எம்பி வைகோ அனுமதிபெறாமல் ஈழம் சென்றிருக்கின்றார், இந்திய ராணுவத்தை கண்டித்து புலிகளுக்கு ஆதரவாக‌ கலைஞர் பேசிகொண்டிருக்கின்றார், அக அவர் ஆட்சியினை கலைக்க ஆதரவு தாருங்கள் என மிரட்டியது டெல்லி.

என் மனசாட்சிபடி சொல்கின்றேன், இங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது, அந்நிய நாட்டு புலிகள் ஊடுருவினால் தடுக்கவேண்டியது மத்திய அரசின் வேலை என சொல்லி ஆட்சியினை கலைக்க அனுமதிக்க முடியாது என நின்றார் பர்னாலா.

இறுதிவரை மத்திய அரசின் அநீதிக்கு அவர் தலைவணங்கவில்லை.

பின் அவரின் ஒப்புதல் இன்றியே கலைஞர் அரசு கலைக்கபட்டது, பெரும் ஜனநாயக படுகொலை அது. காரணம் ஜெயா, ராஜிவ், சு.சாமி, அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் எல்லோரும் "அவாள்".

அந்நிலையிலும் தன் ஆட்சியின் நியாயத்தை சொன்ன பர்னாலாவினை "மாவீரன் பர்னாலா" என அழைத்தார் கலைஞர்

பின் உடனடியாக தேர்தல் அறிவிக்கபட்டு அத்தேர்தலில் ராஜிவ் கொல்லவும் பட்டார்.

அதாவது கலைஞர் ஆட்சி இருந்தவரை மிக பாதுகாப்பாக தமிழகம் வந்து சென்ற ராஜிவ், ஜனாதிபதி ஆட்சியில்தான் கொல்லபட்டார். ராஜிவ் கொல்லபடும் பொழுது சுப்பிரமணியன் சாமிதான் உள்துறை அமைச்சர், ராஜிவின் பாதுகாப்பிற்கு அவர்கள்தான் பொறுப்பு

ஆக அந்த பர்னாலா சொன்னது, அவரின் நிலைப்பாடு மிக சரியாகத்தான் இருந்திருக்கின்றது.

அப்படிபட்ட மிக சிறந்த கவர்னர்கள் இருந்த ராஜ்பவனிலும் தான், எத்தனை முறை அழைத்தாலும் டீக்கடை பையனாக வந்து நிற்கும் இப்படி ஒரு ஆளுநரும் வந்திருக்கின்றார்.

Image may contain: 3 people, people smiling, people standingஒரு ஆளுநர் என்பவர் கொஞ்சமாவது தன் கருத்தை சொல்ல கூடாதா?

அட ஆளுநர் வித்தியாசாகர் என்ன? அந்த இடத்தில் ஒரு .. வைத்திருந்தால் கூட, "டேய் உங்களுக்கு வேறு வேலையே இல்லையாடா, விட்டால் 122 பேரையும் முதல்வராக்க என்னை அழைப்பீர்களா? ஆளுநர் என்றால் அத்தனை மானம் கெட்டவனா? மொத்தமாய் ஒழிங்கடா." என ஆட்சியினை கலைத்திருக்கும்

அந்த ... விட மோசமானாவராகிவிட்டார் இந்த ஆளுநர்.



















 


 




Image may contain: 1 personதமிழன் தலையில் கோமாளி குல்லா : கமல்ஹாசன் சாடல்


அது "குல்லாக்காரன்" ராமசந்திரன் 1977ல் முதல்வராகும் பொழுதே எல்லோருக்கும் தெரிந்தது, பாவம் கமலஹாசனுக்கு நேற்று பழனிச்சாமி பன்னீர் இணையும் பொழுதுதான் புரிந்தத்தாம்.


"குல்லாக்காரன் ராமசந்திரன்" போட்ட குல்லாவின் தொடர்ச்சிதான் நேற்று நடந்த கோமாளி குல்லா.




மனிதர் சினிமாவினை தவிர மற்ற விஷயங்களில் எல்லாம் லேட்டாகத்தான் புரிந்துகொள்வார் போல‌





 



















No comments:

Post a Comment