Image may contain: one or more peopleஇந்த பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால் அவரை ஏன் விசாரிக்கவில்லை, இவரை ஏன் விசாரிக்கவில்லை என தொடங்கி சோனியாவினை ஏன் விசாரிக்கவில்லை என கேட்கின்றார்கள்.


ராஜிவ் கொலையினை வகுத்தது நிச்சயம் வெளிநாட்டு மூளை, பிரபாகரனுக்கு கொல்ல தெரியுமே தவிர வழக்குகளை எப்படி சிக்கலில் விடவேண்டும் எனும் மூளை எல்லாம் சுத்தமாக கிடையாது


காரணம் இலங்கையில் அவர் மீது அப்படிபட்ட விசாரணை எல்லாம் வரவே இல்லை, கொல்வது அவர் என தெரிவதால் எல்லோரும் அவன் அப்படித்தான் என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள், இலங்கையின் சட்டம் ஒழுங்கும் அப்படித்தான் இருந்தது.


ஆனால் ராஜிவ் கொலை அப்படி அல்ல, தடயமில்லாமல் செய்யவேண்டும், செய்யலாம் ஆனால் அதனை மீறி சிக்கும் இடத்தில் குறைந்தது 50 ஆண்டுகாலம் விசாரணை நடக்குமாறு பல இழைகள் இருந்தன‌


அப்படி மகா திட்டமிட்டு செய்யபட்ட கொலை அது, விசாரணை செல்ல தொடங்கினால் காங்கிரசில் செத்துபோன நேரு, இந்திரா தவிர எல்லோரையும் விசாரிக்க வேண்டும்


எதிர்கட்சியில் மொரார்ஜி தேசாய் தவிர எல்லோரையும் விசாரிக்கவேண்டும் என்றளவில் செய்யபட்ட வலை அது.


அதாவது விசாரணை நடந்து, இந்த தேசமே ராஜிவினை புலிகளோடு சேர்ந்து கொன்றது என்ற முடிவு வருமாறு வெளிநாட்டு மூளை அமைத்து கொடுத்திருந்தது.


சந்திரா சாமி சர்ச்சைகுரிய குற்றவாளி, ஆனால் சு.சாமி அப்படி சிக்கவைக்கபட்டார்


மரகதம் சந்திரசேகர் ராஜிவினை தூக்கி வளர்த்தவர், அவர் வற்புறுத்தித்தான் ராஜிவ் திருபெரும்புதூர் வந்தார், அவரையும் சிலர் சந்தித்து சிக்க வைத்தார்கள்.


யாரென்றே தெரியாத சிவராசனிடம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் நிதி வாங்கியிருந்தார், அவரையும் சிக்க வைத்தார்கள்.


விபிசிங் கூட்டத்தில் ஒத்திகை நடத்த பல விபிசிங் கட்சி ஆட்களையே சிவராசன் வளைத்திருந்தான், அப்படியானால் அவர்களும் விசாரிக்கபடவேண்டும்.


பல காங்கிரஸ் பிரமுகர்களை நான் பத்மநாபாவின் ஆள் என சொல்லி சிவராசன் நெருங்கி இருந்தான், இவை எல்லாம் விரிக்கபட்ட வலைகள்,


விபரீதம் தெரியாத காங்கிரசார் சிக்கியிருந்தனர்.


ஆம் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்களோடு படம் எடுத்துவைத்திருந்தான் சிவராசன், காங்கிர்ஸ்காரர்கள் அரசியல்வாதிகள் பன்றியோடு படமெடுக்கவும் அவர்கள் ரெடி, அந்த யுத்தியில்தான் படம் எடுத்து மிரட்ட வைத்திருந்தான் அவன்


அதனால் பலவற்றை மறைக்கவேண்டிய அவசியம் கமிஷனுக்கு இருந்தது, இல்லையென்றால் இன்றுவரை விசாரணை சென்றுகொண்டே இருக்கும், பெரும் குழப்பம் நீடிக்கும்.


விசாரித்த அதிகாரிகளுக்கு இது புரிந்தது, இது பெரும் திட்டம் , விசாரணை நீண்டுகொண்டே போக செய்த பெரும் சதி என தெரிந்து, புலிகள் கொன்றார்கள் என்பதோடு வழக்கை முடித்தார்கள்.


இதை தாண்டி செய்யவேண்டியது பலம்வாய்ந்த வெளிநாடுகளோடு மோதுவது, அதெல்லாம் சாத்தியமில்லை


ஆனானபட்ட கென்னடி கொலையே வெளிதெரியவில்லை, போப்பாண்டவரை சுட்டவன் பின்னால் இருந்தது யார் என தெரியவில்லை, பெரும் வல்லரசுகளின் நிலையே அப்படி.


ஆக ராஜிவினை கொன்றது சாட்சாத் புலிகளே, அதன் வழக்கினை நீட்ட பல சதிகளை செய்திருந்தார்கள். விசாரணை குழு அவற்றை எல்லாம் வெட்டி எறிந்து எது தேவையோ அதனை செய்தது


இதனை விட்டு விட்டு ராஜிவ் கொலையில் சோனியா, ராகுல் எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என சிலர் சொல்லிகொண்டே இருந்தால், சொல்லிகொண்டே இருக்கட்டும்


பொதுவான சந்தேகம் இரண்டுதான்


அன்று திருப்பெரும்புதூரில் நடக்க வேண்டிய திமுக கூட்டம் ரத்து செய்யபட்டது, தன் மனைவி இறந்த நேரத்திலும் தன் தந்தை இறந்த நேரத்திலும் மேடையில் முழங்கிய கருணாநிதி, தன் வாழ்வில் ரத்து செய்த முதல் கூட்டம் அது.


வைகோ அப்பொழுது திமுகவினை இயக்கிகொண்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை, கொலைக்கு பின் வைகோ தூக்கி எறியபட்டார் என்பதும் உலகறிந்தது.


அடுத்த சந்தேகம், அன்று ராஜிவினை விழுந்து விழுந்து வணங்கியது ஜெயா நடராஜன் கோஷ்டி. தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்திற்கு பின்னால் ராஜிவ் வரும்பொழுதெல்லாம் , விமான நிலையம் முதல் ஏன், அவர் பாத்ரூம் முன்னால் வரை இவர்கள்தான் நின்றார்கள்


ஆனால் திருப்பெரும்புதூரில் மட்டும் இவர்கள் மிஸ்ஸிங், ஏன் என்றால் இன்றுவரை பதிலிருக்காது.


கலைஞரையாவது பிடித்து வைத்து 4 கேள்வி கேட்டார்கள், ஜெயாவிடம் அதனை கூட கேட்டதில்லை


அதுதான் மகா மர்மம்.