Wednesday, August 16, 2017

சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி ++

சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி


இந்தியர்களால் முடியும், பெரியார் சொத்துக்களுக்கு காவலர்களாய் இருப்பவர்களால் நிச்சயம் முடியாது.


எங்கே? இந்த சொத்துக்களை எல்லாம் அரசு எடுத்துவிட்டால் என்னாவது எனும் கவலை இருக்கும் வரை இவரால் எப்படி சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்?





மிஸ்டர் வீரமணி, இதுவரை பெரியாரின் சொத்துக்களை நீங்கள் சுதந்திரமாய் ஆண்டுகொண்டுதானே இந்த சுதந்திரநாட்டில் இருக்கின்றீர்கள்? வேறு என்னதான் உங்கள் பிரச்சினை?





இந்த sarahah.com தளத்தில் நுழைந்துவிட்டோம் என சொன்னாலும் சொன்னோம், நிறைய மொட்டை கடிதங்கள்


பாதி குஷ்பூ பதிவு பற்றிய கமெண்டுகள், சிலர் அவரைபற்றி எழுதாதே என பலத்த மிரட்டல் வேறு. எதிர்ப்பு இன்றி சங்கம் எப்படி வளரும்? நன்றி, நன்றி என சொல்லவேண்டியதுதான்.


மீதிபாதி கடிதம்தான் பிரச்சினை. அதாவது "நீ ஒருமுறை ஒன்றை எழுதுகின்றாய் மறுமுறை மாற்றுகின்றாய். நீ அடிக்கடி தடம் மாறும் நிலை இல்லாதவன். உன்னை பின்பற்ற முடியாது, நீ குழப்பவாதி, நீ எந்த சார்பு என உனக்கே தெரியவில்லை




ஆனால் நீ ஏற்றுகொள்ளும்படி எழுதிவிடுகின்றாய், அங்கேதான் நாங்கள் குழம்புகின்றோம், ஏன் இப்படி செய்கின்றாய்?


ஒழுங்காக ஒரே சார்பாக எழுது, இப்படி எழுதி எங்களை குழப்பாதே." என சில கோரிக்கைகள்.


அய்யா ஞாயம்மாரே...


இந்த தேசத்தின் வரலாறுகள், கட்சிகள், நிகழ்வுகள் எல்லாம் பார்த்து நானே குழம்பி இருக்கின்றேன். நீங்கள் மட்டும் ஒரே ஒரு கட்சியினை மட்டும் பார்த்து நிம்மதியாய் இருப்பது எனக்கு எப்படி பொறுக்கும்?


அதனால் நான் குழம்பியது போல நீங்களும் குழம்பி முட்டுங்கள், அதுதான் எனக்கு ஆனந்தம்.


நான் நிச்சயம் குழப்பவாதியே, குழப்புவதுதான் என் வேலை என்பதை மட்டும் உறுதியாக சொல்லிகொள்கின்றேன்


என்ன குழப்பம் அரசியல் கட்சிகளில் இருந்தாலும், உலக நடப்பில் இருந்தாலும் நாம் மிக தெளிவாக உறுதியாக சொல்லும் விஷயம் ஒன்றுதான்..


மகா அபூர்வ குஷ்பூ வாழ்க..






4 எம்.எல்.ஏக்களை ஆசைகாட்டி அழைத்துச் சென்றார் அமைச்சர் உதயகுமார்... புகழேந்தி பரபரப்பு


வழக்கமாக "ஆசை காட்டி" ஏமாற்றிவிட்டார் என பெண்கள் தான் கண்ணை கசக்குவார்கள். இங்கொருவர் வித்தியாசமாக 4 எம்.எல்.ஏக்களை "ஆசை காட்டி" அழைத்து சென்றனர் என புலம்புகின்றார்.


சே.. என்ன கருமாந்திரமோ?






அணுஆயுதம் வெடிக்கவேண்டும் என்பதில்லை, அது கையில் இருந்தாலே எதிரிகள் நெருங்க அஞ்சுவார்கள்.


நீர் களம் வந்து செயலாற்றவேண்டும் என்பதில்லை, அருகிலே இருந்தால் போதும் ஆயிரம் யானை பலத்தை அது கொடுக்கும்


நலமாக வந்துவிடுங்கள் கலைஞரே..







 

No comments:

Post a Comment