Tuesday, August 22, 2017

எம்ஜிஆரை பற்றி பேசாதே?










எம்ஜிஆரை பற்றி பேசாதே?


ஏன்


அவர் வள்ளல், எல்லோருக்கும் உதவுபவர்?





யாருக்கு உதவினார்?

ஏழைகளுக்கு

அப்படியானால் தமிழகத்தில் ஏழைகளே இல்லையா?

இருக்கின்றார்

பின் யாருக்கு உதவினார்?

ம்ம் அது உதவினார்

அதுதான் யாருக்கு?

இன்றைய ஜேபிஆர், ராமசந்திர உடையார் போன்றோர் சாம்ராஜ்யம் எல்லாம் அமைய அவர்தான் உதவினார்

அதவது அவருக்கு யாரெல்லாம் ஜால்ரா தட்டினார்களோ அவர்களுக்கெல்லாம் உதவியிருகின்றார் அப்படித்தானே?

பத்திரிகையாளருக்கு, சினிமாக்காரர்களுக்கு எல்லாம் அவர் உதவி சொல்லி மாளாது

அதவாது பத்திரிகையாளன் தன்னைபற்றி எழுதுவான் என கொடுத்திருக்கின்றார், சினிமாகாரனுக்கு உதவினால் நாலு பேரிடம் சொல்லுவான் என உதவியிருக்கலாம், இது சுயநலம் அல்லவா?

இல்லை இல்லை அவர் வீட்டிற்கு சென்ற யாரும் சாப்பிடாமல் வரமுடியாது?

யாரெல்லாம்?

அவரை சந்திக்க முடிந்த எல்லோராலும்

அவர் வீட்டுமுன்பு தினமும் ஒரு கூட்டம் காத்து கிடக்குமாமே, அவர்களை எல்லாம் காவல்துறை விரட்டுமாமே அவர்களுமா?

இல்ல்லை இல்லை, அவர் அனுமதி பெற்று அவரை சந்திக்க செல்பவர்களுக்கு?

எத்தனை பேர் செல்வார்கள்?

அது தெரியாது ஆனால் அவரை சந்தித்தால் சாப்பிட சொல்வார்

அதனால் அவர் எல்லோருக்கும் உணவளித்தார் என்பதா?

ம்ம், சந்திப்பவர்கள‌ சாப்பிட சொன்னார் அல்லவா?

ஏன் உன்னை சந்திப்பவர்களை டீ குடிக்க சொல்ல மாட்டீரா?

சொல்வேன்

பின் எம்ஜிஆர் சொன்னதில் என்ன ஆச்சரியம்

இல்லை, அவரை சந்தித்தால் சாப்பிடாமல் போகமுடியாது, அவ்வளவு நல்லவர்.

சரி வேறு யாருக்கெல்லாம் உதவினார்?

எண்ணி சொல்லமுடியாது அப்படி உதவினார்?

யாருக்கெல்லாம்?

நிறைய, ஈழபுலிகளுக்கு கூட உதவினார்

ஓஹோ, காஷ்மீர் முதல்வர் ஆப்கன் தீவிரவாதிக்கு அள்ளிகொடுத்தால் டெல்லி விடுமா?

அது எப்படி விடும்? இது யார்பணம்? எப்படி கொடுத்தீர்கள் என கடுமையாக விசாரிக்கும்

எம்ஜிஆரை மட்டும் ஏன் விசாரிக்கவில்லை?

அது எம்ஜிஆர் அல்லவா? அதனால் விசாரிக்கவில்லை

அதுதான் ஏன்?

தெரியவில்லை, அதனால் விசாரிக்கவில்லை

மத்திய அரசு மறைமுகமாக அனுமதித்ததால் விசாரிக்கவில்லை

இருக்கலாம்

சரி வேறு என்ன எம்ஜிஆர் அள்ளி கொடுத்தார்?

அவர் வள்ளல் நிறைய பேருக்கு கொடுத்தார்

அட சும்மா சொல்லுங்கள், எத்தனை பேருக்கு கொடுத்தார்

நீ திமுகக்காரன் அப்படித்தான் கேட்பாய், அவர் பெரும் வள்ளல் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்

சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கின்றேன்

அவர் வள்ளல், சோறு போட்டவர் அதனால் எல்லோருக்கும் பிடிக்கும்

எல்லோருக்கும் சன்னிலியோனை கூடத்தான் பிடிக்கும், பலருக்கு ஓவியாவினை கூட பிடிக்கும், சரி இவர்அவர் அப்படி வள்ளல் என்பதற்கு என்ன செய்தார்?

தன் வீட்டை கூட , சொத்தை கூட தமிழகத்திற்கு கொடுத்தார்

வாரிசு இல்லாதவன் என்னய்யா செய்வான்? பசும்பொன் தேவர் கொடுக்கவில்லையா, பெரியார் சமூகத்திற்காய் விட்டுசெல்லவில்லையா? அதனை விடவா கொடுத்துவிட்டார்

ம்ம்.ம்ம்..

அண்ணாமலை செட்டியார், அழகப்ப செட்டியார், பச்சையப்பன் போன்றோர் கொடுத்ததில் நூற்றில் ஒருபங்கு கொடுத்தாரா எம்ஜிஆர்? இவர் வள்ளல் என்றால் அவர்கள் எல்லாம் யார்?

ம்ம்.ம்ம்...

என்ன ம்ம்ம்

எம்ஜிஆர் வள்ளல், சோறுபோட்டார்"

திருத்தவே முடியாதவர்கள் எல்லாம் இருக்குமிடம் கீழ்பாக்கம் மட்டும் அல்ல என முடிவு செய்துவிட்டு நபரை விரட்டியாயிற்று




 










 

No comments:

Post a Comment