Friday, August 11, 2017

முரசொலி பவள விழா...

"முரசொலி பவள விழா... இந்து N. ராம், தினமலர் ரமேஷ், தினமணி வைத்தியநாதன், ஆனந்த விகடன் சீனிவாசன், கமல்ஹாசன்... நாங்கள் பிராமண எதிர்ப்பை கை விட்டு விட்டோம் என்று பிரகடனப்படுத்திய விழா" :- எஸ்.வி.சேகர்


அடேய் குடுமிக்காரா? அதன் அர்த்தம் பிராமண எதிர்ப்பினை கைவிட்டோம் என்பதல்ல மாறாக இத்தனை பிராமண ஏடுகள் மத்தியில் முரசொலி 75 வருடமாக திராவிடம் பேசி, தமிழரை திரட்டி திராவிடத்தை ஆளவும் வைத்திருக்கின்றது என்பதை காட்ட‌


இத்தனை பிராமண பத்திரிகைகள் இருந்தும் முரசொலியின் தாக்கத்தை தமிழகத்தில் தொட்டு கூட பார்க்க முடியவில்லை என்பதை சொல்லி காட்ட‌




பிராமண எதிர்ப்பு என்பது திமுகவிடம் என்றுமே இல்லை, அது ராஜாஜி முதல் எல்லோரையும் அரவணைத்த கட்சி. திராவிடத்தை காக்கமும் பொறுப்பு அதற்கு உண்டே தவிர, பிராமணர் வெறுப்பு என்பதெல்லாம் அதனிடம் இல்லவே இல்லை.


கமலஹாசன் அப்படித்தான் அழைக்கபட்டார். சோ ராமசாமியினை கூட கலைஞர் நலம் விசாரித்த நிகழ்வு எல்லாம் உண்டு


இப்பொழுது புரிகின்றதா மிஸ்டர் குடுமி?






அ.தி.மு.க.வில் குழப்பங்கள் தீர்ந்து அனைவரும் இணையட்டும்: தமிழிசை பேட்டி


என்னமோ நடந்துவிட்டது, அம்மணி திடீரென சாமியாராகி ஆசிவழங்க ஆரம்பித்துவிட்டார்.


அம்மணி இதே ஆசியினை தமிழக காங்கிரசுக்கும் அருள்வீரா???






"தேசிய கீதம் இருக்கும் வரை திராவிடம் இருக்கும்" : கமலஹாசன்


அது சரிங்க சார், இந்த பிக்பாஸ் இருக்கும்வரை காயத்திரியும் உள்ளேயே இருக்குமா காயத்திரிதாசன்?






தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால், ஆட்சி கவிழப் போவது உறுதி; தங்கதமிழ்செல்வன்


ஆதரவு தெரிவித்தால் டெல்லி கவிழ்க்க போவது உறுதி.








No comments:

Post a Comment