Monday, August 21, 2017

சூத்திரர மட்டும் புனிதமாக முடியாதா? : பெரியார்



Image may contain: one or more people, beard and sunglasses"பார்ப்பான் எத தொட்டாலும் புனிதமாகுமாம், அவன் காய்கனிய தொட்டால் புனிதமாம், நெருப்பை தொட்டால் புனிதமாம், அவன் தண்ணீரை மந்திரம் சொல்லி தெளித்தால் அதுவும் புனிதமாங்க‌.


கல்சிலையும், மண் கோயிலும் கூட அவனால புனிதமாயிருமாங்க..


அடேய் அப்படியே எங்களையும் புனிதமாக்குண்ணு சொன்னா, உன்ன தொட்டா தீட்டுண்ணு சொல்றாங்க..





ஆமாடா, நான் தீட்டுத்தான் என்ன சுத்தபடுத்தி , தண்ணி தெளிச்சி உன்னோட சேத்துக்கண்ணு சொன்னா பதில் சொல்லாம ஓடுறான்ங்க..

அது எப்படிங்க? எல்லாத்தையும் புனிதமாக்குற பார்பனரால, கோயிலையே புனிதமாக்குற பார்பனரால‌
இந்த சூத்திரர மட்டும் புனிதமாக முடியாதா?

இத சொன்னா ராமசாமி நாத்திகம் பேசுறாண்ணு என்ன திட்டுறாங்க.."

வாசித்த ஒரு கட்டுரையில் மிக ஆணித்தரமாக கேட்கின்றார் பெரியார், இன்றுவரை அதற்கு யாரிடமும் பதில் இல்லை.












No comments:

Post a Comment