Friday, August 18, 2017

மயிலை பார்த்து வான்கோழி அல்ல, காகம் ஆடினால்....









Image may contain: 1 person, selfieமயிலை பார்த்து வான்கோழி அல்ல, காகம் ஆடினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு பேட்டியினை கொடுத்திருக்கின்றார் தமிழிசை.


ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றார்கள். அங்கு சென்று கட்சி பற்றியோ, மோடி சாதனை பற்றியோ பேசியிருக்கலாம். அப்படி ஏதும் இருந்தால்தானே பேச அதனால் அம்மையார் தடாலடி விஷயங்களில் இறங்கிவிட்டார்


அதாவது குஷ்பூ கொசுதொல்லை போன்றவர் என பேசியிருக்கின்றார்.





Image may contain: 1 person, smiling, selfie and close-upஇதற்கு முதலில் சிரிக்கவேண்டும். அதன் பின் தமிழிசையிடம் சில கேள்விகளை கேட்க வேண்டும்.

எங்கிருந்தோ தமிழகம் வந்து, மக்கள் மனதை வென்று, பின் பல வழக்குகளில் வென்று, இன்று அரசியலிலும் தனி இடம் பிடித்திருப்பவர் குஷ்பூ

கலைஞருக்கு அண்ணா போலவோ, எம்ஜிஆருக்கு கலைஞர் போலவோ, ஜெயலலிதாவிற்கு நடராஜன், சோ போலவோ, அல்லது முக ஸ்டாலினிக்கு கலைஞர் போலவோ ஒருவர் கிடைத்திருந்தால் குஷ்பூ இன்று எங்கோ சென்றிருப்பார்.

ஆனால் அவருக்கு அப்படியாரும் அமையவில்லை. ஆனால் சுயமாக போராடி அகில இந்திய அளவில் காங்கிரசில் 
தனி இடம் பிடித்திருக்கும் குஷ்பூ பாராட்டபட வேண்டியவர்.

ஆனால் தந்தை பெரும் பேச்சாளர், காமராஜரின் வலது கை. இந்திராவின் அல்லக்கை என பெரும் இடத்தில் இருந்த ஒருவரின் மகள், இப்படி கொஞ்சமும் கட்சிமரியாதையோ, சுய மரியாதையோ, தந்தை மரியாதையோ இன்றி எதிரி முகாமில் அமர்ந்துகொண்டு, அதுவும் தந்தையின் பிரபல்யம் ஒன்றை மட்டும் வைத்துகொண்டு குரங்காக எதிர்முகாம் தாவி ஆடிகொண்டு.

அதுவும் தந்தை எந்த காவிகும்பலை எதிர்த்தாரோ அங்கே கோடாரிகாம்பாக அமர்ந்து கொண்டு குஷ்பூவினை தாக்குவது கண்டிக்கதக்கது.

அன்று நேருவினை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டார், கடுமையான விமர்சனங்களை சொல்லிகொண்டிருந்தார். ஏன் நேருவினை இப்படி தாக்குகின்றாய் என கேட்டதற்கு சொன்னார்

"நேருவினை சீண்டினால்தான் என்னை 4 பேர் நோக்குவார்கள்"

அம்மணி தமிழிசையும் அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார். என்னை கவனியுங்கள் என்றால் யார் கவனிக்கபோகின்றார்? இப்படி குஷ்பூவினை சீண்டினால் பிய்ந்த செருப்போடு வருவார்கள் என அவருக்கு தெரியாதா?

அம்மையாருக்கு பதவி ஆட்டத்தில் கிடக்கின்றது, தமிழக பாஜக பதவி நிர்மலா சீத்தாராமனுக்கு செல்லலாம் என்கின்றன செய்திகள்.

இந்த பதைபதைப்பில்தான் அம்மணி உளற ஆரம்பித்துவிட்டார்.

தன்மீது விளையாடும் எலியினை சிங்கம் கண்டுகொள்ளாது, தன் காலடியில் உரசும் சுண்டெலியினை யானை கண்டுகொள்ளாது

தன் முன்னே கத்தும் காகத்தை குயில் கண்டுகொள்ளாது, சிட்டுகுருவி தோகை விரித்தால் மயிலுக்கு கோபம் வராது.

அதனால் குஷ்பூ இதுபற்றி கண்டுகொள்ளவில்லை, கண்டுகொள்ளவும் மாட்டார்.

ஆனால் குஷ்பூவின் கோடான கோடி ரசிகர்கள் தமிழிசையின் இந்த அநாகரிகமான வார்த்தைகளை கண்டிக்கின்றோம்

உண்மையான கொசுதொல்லை யார் என்பது தமிழகத்திற்கு தெரியும், அந்த கொசுவிற்கு எப்படி மருந்தடிப்பது என்பதும் தெரியும்

தமிழிசை தப்பான உளறல்களை இனியாவது நிறுத்திகொள்ளட்டும்.

இதனை கண்டித்து கொடும்பாவி எரிக்கலாம் என சங்கத்தின் சார்பாக திட்டமிடபட்டது, ஆனால் அது கொடும்பாவி உருவத்திற்கே அவமானம் என்பதால் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

(தமிழிசைக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால், தயவு செய்து பேசும்பொழுது சிரிக்கவேண்டாம், பயங்கரமாக இருக்கின்றது

உலகிலே ஒருவர் சிரிப்புக்கு பயப்படவேண்டுமென்றால் சாட்சாத் அவருக்குத்தான்)



















No comments:

Post a Comment