Wednesday, August 16, 2017

வீடு திரும்பினார் கலைஞர் .. மற்றும் சில ...

வீடு திரும்பினார் கலைஞர்


அவர் வீட்டிற்கு திரும்பியதில் பலருக்கு உயிரே போயிருக்கும்






நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு


ஆமாம், கொல்லைபுறமாக எல்லாம் வரவில்லை மாறாக சுரங்கம் தோண்டி திடீரென பொத்துகொண்டு வந்தவர்கள்






சென்னை கிண்டியில் 10 கோடி வாடகை பாக்கியால் ரஜினி மனைவி லதா நடத்திய பள்ளிக்கு பூட்டு : செய்தி


ரஜினி அரசியலுக்கு வந்தால் எவ்வளவு பெரும் ஆபத்து என இப்பொழுதுதான் புரிகின்றது, கணவன் கோடிகளில் புரண்டும் பள்ளி வாடகையினை கூட கொடுக்க விரும்பாத அம்மணி, நாளை முதல்வரின் மனைவி எனும் நிலைக்கு வந்தால் என்னாகும்?


இன்னொரு சசிகலாவினை தமிழகம் தாங்குமா?




ரஜினிக்கு ஏன் திருமணத்திற்கு பின் பக்தி வந்தது என்பதும், ஏன் அடிக்கடி அவர் இமயமலைக்கு செல்கின்றார் என்பதும் இப்பொழுது புரிகின்றது.


அவர் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்பதும் இப்பொழுது நன்றாகவே புரிகின்றது


ஆக ரஜினி வரவேண்டிய இடம் அரசியல் அல்ல, மாறாக இமயமலையே...






சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தன்னை தொடர்பு கொள்ளவசதியாக "Call Your Collector" எனும் திட்டத்தை தொடங்கினார் நெல்லை கலெக்டர், எப்பொழுதும் யாரும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்


எத்தனை பேர் அவரிடம் பேசினார்கள் என தெரியாது, ஆனால் தேவர் மகன் நாசர் போல சில அண்ணாச்சிகள் இப்படி 
பேசியிருக்கலாம்.




"யாரு கலெக்டர் தம்பியா? நல்லா இருக்கியளா?


முன்னால இருந்த கலெக்டர் நமக்கு ரொம்ப வேண்டியவரு, அட நீங்களும் நமக்கு வேண்டபட்டவர்தான். அந்த பக்கம் வரும்போது தம்பிய‌ பாக்குறேன் இல்ல கடற்கரை பக்கம் வந்தா தம்பி அவசியம் நம்ம ஆபிசுக்கு வரணும்"






தேவையில்லாமால் அதிமுக எனும் சிங்கத்துடன் மோதுகிறார் கமல்ஹாசன் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


அது சிங்கமா? இல்லை அசிங்கமா என்பது உலகிற்கே தெரிந்தபின்னும் அமைச்சர் பேசிகொண்டிருக்கின்றார்


ஒரு வேளை அசிங்கத்துடன் மோதுவது கமலுக்கு தேவையில்லை என சொல்லியிருப்பாரா? அ என்பதை மவுனித்து சிங்கம் என்பதை கத்தி சொல்லியிருக்கலாம், செய்தியாளர்கள் கவனிக்க தவறியிருப்பார்கள்.






பெண்களுக்கு சம நீதி, சம உரிமை கிடைக்கவில்லை: கனிமொழி


எங்கே மேடம்? திமுகவில்தானே, ஆமாம் அது ஒப்புகொள்ள கூடியததுதான்.


அதனை நேரடியாக அண்ணனிடமே சொல்ல கூடாதா?




பவளவிழாவில் ஒரு பெண் எழுத்தாளர் கூட வராதது அம்மணிக்கு பெரும் வருத்தமாக இருக்கலாம், பொங்கிவிட்டார்.







 



No comments:

Post a Comment