Friday, August 25, 2017

பேரரிவாளனுக்கு வரிந்து கட்டுகின்றார் ஸ்டாலின்




Image may contain: one or more people, sunglasses and close-upதேசவிரோத கட்சி என அறியபட்டு பின் பிரிவினைவாதத்தை கைவிட்ட பின்புதான் ஆட்சிக்கு வந்தது திமுக‌


அதன் பின் அது மாநில உரிமை பேசிற்றே தவிர, பிரிவினைபற்றி பேசவே இல்லை, மிசா காலத்தில் கூட அது மாநில சுயாட்சிதான் பேசிற்று


பின் புலிகளை ஆதரித்து தடமாறி சென்று, 1991ல் அது தடை செய்யபடும் அளவிற்கு சென்றது.





காந்தி கொலை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு கரும்புள்ளி என்றால் நிச்சயம் ராஜிவ் கொலை திமுகவிற்கு பெரும் கரும்புள்ளி

அதனை எல்லாம் 2009ல் தாண்டித்தான் திமுக தன் தேச அபிமான நிலையினை நிரூபித்தது, கலைஞர் அப்படித்தான் நெருப்பாற்றினை கடந்து கட்சியினை நடத்த்தினார்

இன்று அவரின் மகன் பேரரிவாளனுக்கு வரிந்து கட்டுகின்றார், விடுதலை வேண்டும் என்கின்றார்

பாஜகவிற்கு எதிராக தமிழ்நாட்டு அரசியல் செய்வதாக நினைத்து நெருப்பாற்றில் கப்பல் விடுகின்றார் ஸ்டாலின்

இது வன்மையாக கண்டிக்கதக்கது.

ஸ்டாலின் மாறாவிட்டால் திமுகவினை மக்கள் தூக்கி எறிய தயங்கமாட்டார்கள், பாஜகவிற்கு எதிராக வேறு போராட்டங்களை நடத்தலாம்

இம்மாதிரி விஷயங்களை செய்வது தன் கட்சியினை தானே அழிப்பது போலாகும்

ஸ்டாலின் அதனை செய்ய துணிந்தால் திமுக எனும் ஆலமரம் சாய்வதை காலம் விரைவில் காட்டும்,

தேசாபிமானம் இல்லா திமுக தமிழகத்தில் யாருக்கும் பிடிக்காது என்பது கூட தெரியாத இவரால் அக்கட்சி நிச்சயம் பெரும் சிக்கலில் சிக்கலாம்.









பேரறிவாளனுக்கு பரோல்: மு.க ஸ்டாலின் வரவேற்பு

அடையாளமற்று போயிருக்கவேண்டிய ஜெயாவினை முதல்வராக்கியது ராஜிவ் படுகொலை, அந்த கொலைக்கு உதவியர்தான் இந்த பேரரிவாளன்.

அக்கொலையினை தொடர்ந்து திமுக தடைசெய்யும் அளவிற்கு நெருக்கடியில் தள்ளபட்டது, நெருப்பாற்றினை நீந்தி கடந்த அந்த கட்சி, பின் 2009ல்தான் தன் தவறுக்கு பிராசித்தம் கண்டது.


அந்த பேரரிவாளன் பரோலுக்கு இவர் வரவேற்பு தெரிவிக்கான்றாராம், பாஜகவினை எதிர்க்கின்றேன் பேர்வழி என ஸ்டாலின் இம்மாதிரி காரியங்களில் இறங்கினால் அது மகா ஆபத்தானது.

மகா உறுதியாக சொல்லலாம் திமுகவின் எதிரி வேறு எங்கேயுமில்லை..






 

No comments:

Post a Comment