Thursday, August 24, 2017

சின்னம்மா, நீங்கள் இனி விரைவில் வெளிவர வாய்பில்லை....




Image may contain: 2 people, textஅப்பொழுதே எழுந்த சந்தேகம் தான், அக்காலத்திலே வந்த முணகல்தான்.


அரசியலில் தன் எதிரிகளையும் அவர்களின் பிண்ணணி தூண்களையும் நொறுக்கிபோடுவதில் கைதேர்ந்தவர் கலைஞர், காமராஜருக்கு உதவிய சிலர் பின்னாளில் பட்டபாடு கொஞ்சமல்ல‌


அப்படிபட்ட துடிப்புமிக்க கலைஞர் நடராஜன் கும்பலை மட்டும் விட்டு வைத்திருப்பதேன்? அவர் நினைத்திருந்தால் என்றோ இவர்களை முடக்கியிருக்கலாமே என்ற கேள்விகள் எழுந்தன‌





கலைஞர் அரசியலில் ராஜதந்திரி, ஆனானபட்ட இந்திரா தஞ்சாவூருக்கு போட்டியிட வந்ததை, அதுவும் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது வந்ததையே எப்படியோ தடுத்துவிட்ட சாகசகாரர்.

அதாவது இன்னொரு தேசியகட்சி தமிழகத்தில் எழும்ப அவர் அனுமதிப்பதில்லை, நடராஜன் அதிமுகவினை இயக்குவதில் கலைஞருக்கு மறைமுக விருப்பம் நிரம்ப இருந்தது.

இருவருக்கும் வெளியே தெரியாத இணைப்பு இழை ஒன்று ஓடியது, தேசிய கட்சி எதிர்ப்பு எனும் வெளிதெரியாத இழை அது.

இன்று அதே பாடத்தை அதிமுகவும் தொடர்கின்றது, எப்படி வருகின்றார்கள் பார்த்தீர்களா?

"கழகத்தாரே, 1967க்கு பின் நீங்கள் இருவரும் தான் மாறி மாறி ஆண்டீர்கள்? என்ன சாதித்தீர்கள் என்றால் சில பல வழக்குகளை தவிர பெரிதாக‌ ஒன்றுமில்லை.

இன்னொரு கட்சி ஆண்டால்தான் உங்கள் சாதனை தெரியும் அதே நேரம் உங்கள் ஆட்சி லட்சணமும் தெரிந்துவிட வாய்ப்பு உண்டு

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன்?"

கலைஞரின் தந்திரத்தை அதிமுக கையில் எடுக்கின்றது, இதற்கு நிச்சயம் திமுக தரப்பிலும் பச்சை கொடியே காட்டுவார்கள்

காரணம் இவர்கள் நிலைப்பாடு அப்படித்தான், "ஆள்வது ஒன்று நீ இல்லயென்றால் நான். இனி என் ஆதரவில் நீ அல்லது உன் ஆதரவில் நான்"

அதுதான் அவர்களே சொன்ன, இந்த‌ "திருக்குவளை தீய சக்தி " நடத்தும் போராட்டத்திற்கு "தியாக தலைவி சின்னமாவின்" அதிமுக ஆதரவளிக்கும் மர்மம்

இது கலைஞர் இல்லாத நிலையில் எப்படி பலனளிக்கும் என தெரியவில்லை, இதெல்லாம் வேறுமாதிரி கையாள வேண்டிய விஷயம்

அதாவது எல்லோரும் மொத்தமாக கைகோர்த்தால் தெரியாது, தனியாக திவாகரனும் ஸ்டாலினும் கைகோர்த்தால் கி.வீரம்ணியே வாய்விட்டு சிரிப்பார்

அது இருக்கட்டும்

திமுக பன்னீரை இயக்குகின்றது, சட்டசபையில் ஸ்டாலினும் பன்னீரும் சுப்பிரமணியபுரம் ஜெய் மாதிரி சிரித்தார்கள் என்றெல்லாம் சொன்ன அதிமுகவா இப்படி?

சின்னம்மா, நீங்கள் இனி விரைவில் வெளிவரவாய்பில்லை என்றவுடன் உங்கள் தம்பியே ஸ்டாலினை பார்த்து சிரிக்கின்றார்

இனி சிவகுமாரோ , விவேக்கோ அழகிரியினை பார்த்து சிரிக்கு முன் ஏதாவது செய்யுங்கள்

இல்லையென்றால் தமிழகமே சிரிக்கும்., அதுவும் தமிழிசை எல்லாம் சிரிப்பார்













 




 









No comments:

Post a Comment