Thursday, August 24, 2017

122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்?

122 அமைச்சர்கள் கொண்ட பெரும் மந்திரி சபையினை அமைக்காமல் இனி பழனிச்சாமி அரசு நீடிக்க வாய்ப்பில்லை


122 இலாக்களுக்கு எங்கு செல்வார் மனிதர்?


இனி ஏராளமான இலாக்காக்கள் உருவாக்கபடும், செய்தி துறை டிவிட்டர் இலாகா, பேஸ்புக் இலாக்க இலாகா என பிரியலாம்




நிதி துறை 50 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைக்கு ஒரு இலாக்கா, 100 ரூபாய் நோட்டுக்கு இன்னொரு இலாகா, சில்லறைக்கு ஒரு இலாக்கா என பிரியலாம்


பொதுபணிதுறை என்பது சிமெண்ட் இலாகா, செங்கல் இலாகா, கம்பி இலாகா என தனி தனியாக பிரியலாம்


போக்குவரத்து துறை சைக்கிள் இலாகா, பைக் இலாகா, பேருந்து இலாகா , லாரி இலாகா என பிரியலாம்


மீன் வளத்துறையில் ஒவ்வொரு மீனுக்கும் ஒரு அமைச்சர், சுகாதார துறையில் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அமைச்சர்.


சலூன் இலாகா வரை பிரித்து அதில் கட்டிங் தனி இலாகா, ஷேவிங் தனி இலாகா என அமைத்து அமைச்சர்களை நியமித்தாலும் இனி ஆச்சரியபடுவதற்கில்லை


122 அமைச்சர்களை தமிழகம் விரைவில் காண போகின்றது.


காமராஜரின் மிக சிறந்த அமைச்சரவையில் 7 அமைச்சர்கள்தான் இருந்தார்களாம், அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது






நான் எப்போதும் அரசியல் கருத்துகளை சொல்வதில்லை -அமைச்சர் செங்கோட்டையன்


"அம்மா வாழ்க.." தவிர என்ன பேசியிருக்கின்றார்? அதுதான் அவருக்கு தெரிந்த அரசியல்


இப்பொழுது அம்மா இல்லாததால், யாரை பார்த்து வாழ்க என சொல்ல தெரியாமல் நான் அரசியல் பேசுவதில்லை என்கின்றார்.




உண்மையினை ஒப்புகொண்ட நல்ல மனிதர்.











Image may contain: one or more people and suitமுதல்வர் பழனிச்சாமியுடன் எச்.ராசா சந்திப்பு : செய்தி

விக்ரம் படத்தில் தன் உளவாளியான அந்த மதகுருவிடம் அசால்ட்டாக சொல்வார் சத்யராஜ்

"நல்ல டிரெயிங்டா உனக்கு. சொக்கலால் பீடி குடிச்சிட்டு இருந்த நீ. இங்க மதகுருவா? ஹே.. ஹே.. ஹே.. உன்ன கேக்காம எதுவும் இங்க நடக்காதாமே? .. மொட்ட..


என்ன அண்ணே இவங்க முன்னால அடிக்கிறீங்க? ....

ஓ.. உங்களுக்கு மான பிரச்சினையாயிட்டுங்களா?"

அந்த காட்சி நினைவுக்கு வருகின்றது.











Image may contain: 1 person, indoorசபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை : செய்தி

"சபாநாயகரே, காய்ச்சல் அடிக்கின்றதா? எனக்கும் அடிக்கின்றது.

நாம் யாருக்கு என்ன அநியாயம் செய்தோம், ஏன் நம்மையே குறிவைத்து சாத்துகின்றார்கள்"





 









 












 


 












 


 


No comments:

Post a Comment