Wednesday, August 16, 2017

தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை




இந்த தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை, சொல்பவன் சொல்லட்டும் பதிவிடுபவர்கள் கொஞ்சம் யோசித்து பத்திரிகையில் பதிவிட கூடாதா? ஒரு பொறுப்பு வேண்டாமா


இந்த வாட்சப் வதந்திதான் காமராஜர் அப்துல் கலாமினை மிதித்தார், தன்னை சந்திக்க தமிழகம் வந்த ஹிட்லரை அவமானபடுத்தினார் என அள்ளிவிடுகின்றன. இன்னும் பல விஷயங்கள் பகீர் ரகம்.


வாட்சப் வாந்திகள் அந்த ரகம், விட்டுவிடலாம் ஆனால் பெரும் பொறுப்பு கொண்ட ஊடகங்கள் அப்படி செய்யலாமா?





இதோ வாஞ்சிநாதனின் பேரன் பேட்டிகொடுத்திருகின்றான், அதாவது வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை சுட்டபின் அவரது கர்பிணி மனைவிக்கு ஆறுதல் இல்லையாம். எல்லோரும் கொலைகாரன் மனைவி என திட்டினார்களாம், வெள்ளையனுக்கு பயந்து அவரை அருகில் யாரும் சேர்க்கவில்லையாம்

அவருகு பிரசவ வலி வந்தபொழுது கண்டுகொள்ள யாருமில்லையாம், பசும்பொன் தேவர்தான் மாட்டுவண்டியில் அழைத்து சென்று பிரசவம் பார்த்து, 25 ஆயிரம் பணமும் கொடுத்தாராம்.

பின் அந்த மகளையும் வெள்ளையன் கொன்றுவிடுவான் என்று அஞ்சி மறைவாக வளர்த்தாராம் தேவர், இவருக்கே அவர் தாத்தா யாரென தெரியாதாம், ஒரு நாள் தேவர் அந்த ரகசியத்தை சொன்னாராம்.

கொஞ்சம் வரலாற்றை புரட்டுங்கள்

ஆஷ்துரையினை கொன்று வாஞ்சிநாதன் தன்னை சுட்டு தற்கொலை செய்தது 17 ஜூன் 1911, தேவர் பிறந்தது அக்டோபர் 30, 1908.

அதாவது வாஞ்சிசாகும் பொழுது தேவர் 2.9 மாத குழந்தை. 3 வயது கூட ஆகவில்லை.

3 வயது தேவர்தான் ஓடிசென்று வாஞ்சி மனைவியினை காப்பாற்றி பிரசவமும் பார்த்து குழந்தையினையும் வளர்த்திருக்கின்றார்

3 வயதிலே தேவர் பெருமகன் செய்த சாதனையினை இனி எந்த குழந்தையாவது செய்ய முடியுமா? முடியாது

தமிழ் இந்து பத்திரிகை சொல்லவரும் விஷயம் அதுதான், தமிழகம் நம்பிகொள்ளட்டும்.

இதுதான் தமிழ் இந்து பத்திரிகை வெளியிட்ட சுதந்திர தின சிறப்பு கட்டுரையாம். உருப்படுமா வருங்காலம்?

எவ்வளவு பெரும் மடத்தனத்தை அப்பத்திரிகை செய்திருக்கின்றது?

ஒரு தமிழ் பத்திரிகையும் உருப்படியில்லை, அதில் எழுதும் ஒரு பயலும் உருப்படியாக எழுதுவதுமில்லை, தமிழக சாபம் அப்படி ஆகிவிட்டது.





















வாஞ்சிநாதனுக்கு ஒரே ஒரு மகள்; பெயர் லட்சுமி. வாஞ்சிநாதனின் உயிர் பிரிகையில் அவரது மனைவி பொன்னம்மாளின் வயிற்றில் லட்சுமி ஏழுமாதக் குழந்தை.



TAMIL.THEHINDU.COM





 






 







No comments:

Post a Comment