Wednesday, August 23, 2017

எங்கிட்டயே வந்து அழுது நடிப்பியா ரேஸ்கல்..




Image may contain: 1 person, sitting”கருணாநிதி சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பார்வையில் ஆயிரம் விளக்கங்கள்” - வைகோ


கலைஞர் சிரிப்பின் விளக்கம் இதுதான்


"இன்னும் இவன் சாகலையாண்ணுதான பார்க்க வந்த, உன்ன மாதிரி ஆயிரம் பேரை பார்த்தவன் இந்த கருணாநிதி.




உன் மொகரைய இங்க வந்து காட்டிட்ட, இனி விஜயகாந்த் எப்படிய்யா கூட்டணிக்கு வருவான்? . அத கெடுக்கதான வந்திருக்க நீ? ..உண்மைய சொல்லு கோவாலு..


இந்த அழுகை, டயலாக் எல்லாம் எங்கிருந்து நீ கத்துகிட்டண்ணு எனக்கு தெரியாதா?


எங்கிட்டயே வந்து அழுது நடிப்பியா ரேஸ்கல்..."










கலைஞரை இன்று  (22-08-2017) வைகோ சந்திக்கிறார்


கலைஞரால் பேசமுடியாது, அதனால் நீங்கள் கலைஞருக்கு எதிராக செய்த துரோகங்களை எல்லாம் எழுதிகொடுங்கள், கலைஞரிடம் படித்து பாட்டுகின்றோம் என எழுதி வாங்க வேண்டியது திமுகவினர் கடமை


பல இடங்களில் அது பயன்படும்.




(அப்படி என்ன பேச போகின்றார்? பழனிச்சாமியும் பன்னீருமே இணைந்தாயிற்று, என்னையும் திமுகவில் இணைத்தால் என்ன என கேட்க போகின்றாரோ?))




 







தமிழக தொல்லியல் அமைச்சராக மாபா பாண்டியராஜன் நியமணம்.

அவர் அப்படி என்ன அகழ்வாராய்ச்சி செய்வாரோ தெரியாது, வீட்டு முற்றத்தை வேண்டுமானால் தோண்டுவார் , அம்மா சமாதி எல்லாம் தோண்டுவாரா? நெவர்.


இப்பொழுது எவனாவது கீழடி என்னாயிற்று, மேலடி என்னாயிற்று என பேசுவானா என்றால் பேசமாட்டான்.




அமைச்சரும் கீழடி பற்றி கவலைபட மாட்டார், காரணம் அவருக்கு மேஜையடி சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றது






டிடிவி தினகரனை சந்தித்து தங்கை திருமணத்திற்கு அழைத்தார் விஷால்


ஆக பழனிச்சாமியினையோ பன்னீரையோ விஷால் கூட மதிக்கவில்லை என்பது புரிகின்றது.


இதற்கு பழனிச்சாமி ராஜினாமா செய்துவிடுவது மானமுள்ள விஷயம்.










தலித் தனபாலை முதல்வராக்கும் திட்டத்தை விடுதலை சிறுத்தை வரவேற்கின்றது : திருமாவளவன்


ஆக தலித் ஒருவர் எங்கு தலைவன் ஆனாலும் திருமா வரவேற்பாராம், அது சசிகலா கும்பலுக்கு தலைவர் ஆனாலும் சரி, தாவூத் இப்ராஹிமுக்கு தளபதி ஆனாலும் சரி


இதன் பெயர்தால் தலித் முன்னேற்றம் என நாமெல்லாம் நம்பிகொள்ள வேண்டும்.




மிஸ்டர் திருமா? கலைஞரை விட ஒரு தலித் யார் உண்டு? பின் என்ன மண்ணாங்கட்டிக்கு கடந்த முறை விஜயகாந்த் எனும் நாயுடுவினை முதல்வராக்க உழைத்தீர்கள்?


தனபால் மட்டும்தான் தலித்தா, கலைஞர் இல்லையா?


மிஸ்டர் திருமா, தமிழிசை கூட தாழ்த்தபட்ட சாதிதான், முதல்வர் ஆக்கிவிடுவோமா? ஆதரிப்பீரா?











மிஸ்டர் தமிழருவி மணியன், என்ன செய்கின்றீர்? ஒரு பொறுப்பு வேண்டாமா?


ரஜினி நீட் தேர்விற்காக டெல்லியில் மத்திய அரசோடு வாதம் செய்துகொண்டிருக்கின்றார் என இன்னும் ஏன் நீங்கள் சொல்லவில்லை?


ரஜினி ரசிகர்கள் உங்களின் இன்றைய அறிக்கைக்காக காத்துகொண்டிருக்கின்றார்களாம்.












Image may contain: one or more people, horse and outdoor


 

ஒரு பாடலில் கருப்பு குதிரையில் குஷ்பூ கம்பீரமாக வருகின்றார்.


அலெக்ஸாண்டர் பெண்ணாக இருந்திருந்தால், இந்த காட்சி அப்படியே உண்மையாகும், அப்படி ஒரு கம்பீரம், அலெக்ஸாண்டரை அப்படியே கண்முன் நிறுத்துகின்றார் குஷ்பூ


"லேடி அலெக்ஸாண்டர்" குஷ்பூ என்றால் அது மிகையல்ல.




























 



No comments:

Post a Comment