Tuesday, August 22, 2017

பன்னீர் செல்வத்திற்கு கூடுதல் இலாகா ஒதுக்கபட்டது

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கு பயணம்


ஓஹோ. ஆட்சி அமைக்க கூவத்தூர் பயணம், ஆட்சி கவிழ்க்க புதுச்சேரி பயணமா?


டெல்லியினை பகைத்துகொண்டு எவனாவது புதுச்சேரி போவனா? இவர்கள் எல்லாம் பாரதியார் காலத்திலே இருப்பார்கள் போலிருக்கின்றது




புதுச்சேரி கவர்ணர் கிரண்பேடி, கிட்டதட்ட அங்கு அவர்தான் இப்பொழுது ராணி. பிஜேபிக்கு நெருக்கமானவர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை


19 பேரையும் பிடித்து தமிழக ஆளுநரிடமே பட்டாபட்டி அண்டராயரோடு கொடுத்துவிடுவார் ஜாக்கிரதை.


இவர்களுக்கு மிக பாதுகாப்பான இடம் பெங்களூர்தான், அதுவும் அதோ அந்த‌ சிறையில்தான் சின்னம்மா இருக்கின்றார் என சுட்டி காட்டி சொன்னால் இவர்களை அடைத்து வைப்பது மகா சுலபம்.


ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், யாரும் கேட்டால் "காவேரி விவகாரம் தொடர்பாக சித்தராமய்யாவினை பார்க்க வந்தோம்.." என சிரிக்காமல் சொல்லவேண்டும்


சிரிக்காமல் சீரியசாக சொல்வதில்தான் உங்கள் சமார்த்தியமே அடங்கியிருக்கின்றது பார்ட்டிஸ்..






சீக்கிரம் அந்த நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்துங்கள் அய்யா


படு பயங்கர திரில் சஸ்பென்ஸாக இருக்கின்றது






பன்னீர் செல்வத்திற்கு கூடுதல் இலாகா ஒதுக்கபட்டது


அப்படி என்ன இலாகா கொடுத்தார்களோ முழுமையாக சொல்லவில்லை


"சசிகலா ஒழிப்பு இலாகா.." என்ற ஒன்றை ரகசியமாக கொடுத்திருக்கலாம் என்பது மட்டும் புரிந்துகொள்ள கூடியது.






முத்தலாக் முறையை 6 மாதத்துக்கு நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு


நாடு பொதுசிவில் சட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.


உலகின் மிக அறிவார்ந்த இனம் என யூத இனத்தை ஏன் சொல்கின்றோம் என்றால், அவர்கள் எல்லா நாட்டிலும் உண்டு ஆனால் அங்கெல்லாம் அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடப்பார்கள்.




சமூக மாற்றங்களுக்கும்,கால மாற்றங்களுக்கும் ஏற்ப சட்டங்களும் மாறியே ஆகவேண்டும்.


பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வரவேண்டிய சட்டங்களில் ஒன்று என்பதில் மாற்றுகருத்து இல்லை






 




No comments:

Post a Comment