Sunday, August 20, 2017

பாகிஸ்தானின் அன்னை தெரசா , ரூத்




Image may contain: 1 personகல்கத்தா போலவே வெள்ளையன் உருவாக்கிய நகரம் கராச்சி, நிச்சயம் மிகபெரும் துறைமுகம் அது, ஆனால் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது.


கல்கத்தா போலவே அங்கும் சுகாதார நெருக்கடி, சாலையோர அனாதைகள், நோயாளிகள் என கராச்சியும் சிக்கிற்று. மிக மிக மோசமான நிலைக்கு சென்றது, தெருவெல்லாம் தொழுநோயாளிகளால் நிரம்பிற்று.


அப்பொழுது ஜெர்மானிய கிறிஸ்தவ தொண்டுநிறுவனர் ரூத் என்பவர் பணியாளாராக வந்தார். கராச்சியின் நிலையினை கண்டு கண்ணீர்விட்டார். 1960ல் தன் வாழ்வினை கராச்சி தொழுநோயாளிகளுக்கு அர்பணிப்பதாக சொல்லி அங்கேயே தங்கினார்.





மேரி ஆடலின் மருத்துவமனை என ஒன்றை தொடங்கி சேவையாறினார், மக்கள் அவரை மதித்து வணங்கினர்.

பாகிஸ்தானின் அன்னை தெரசாவாக அவர் ஏற்றுகொள்ளபட்டார்

இதில் ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், அன்னை தெரசா கல்கத்தாவில் செய்ததைத்தான் அவரும் செய்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் அன்னை தெரசாவிற்கு கொடுத்த இடைஞ்சல் கொஞ்சமல்ல‌

அன்றே பாஜக அரசு அமைந்திருந்தால் தெராசாவினை தூக்கி கடலில் எறிந்திருப்பார்கள், ஆனால் நேருவின் மதச்சார்பற்ற ஆட்சி தெராசா தொடர்ந்து சேவையாற்ற அனுமதித்தது.

ஆனால் பாகிஸ்தான் பெரும் மத அபிமான நாடு, மதத்திற்காகவே நாடு அமைந்து, அந்த மதத்திற்காகவே பல பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நாடு

ஆச்சரியமாக அந்த பாகிஸ்தான், ரூத்தினை தன் மருத்துவ ஆலோசகராக ஏற்றுகொண்டது. அவர் கிறிஸ்தவர் என்றோ மேல்நாட்டுக்காரர் என்றோ கொஞ்சமும் சஞ்சலபடவில்லை

எங்கள்நாட்டுக்கு தொழுநோய் ஒழிப்பிற்காக வந்திருக்கின்றீர்கள், இந்நாட்டில் எந்த மூலையிலும் நீங்கள் பணி செய்ய அனுமதிக்கின்றொம் என வழிவிட்டார்கள்

ரூத்தும் கிட்டதட்ட 57 வருடங்கள் அந்நாட்டில் பணிய்யாற்றினார், ஒரு எதிர்ப்பு இல்லை ஒரு முணுமுணுப்பு இல்லை, மாறாக பாகிஸ்தானே வணங்கி நின்றது

மிக மிக ஆச்சரியமான விஷயம் இது, தெரசாவினை இந்தியா படுத்தியபாட்டிற்கு நேர்மாறாக மதவாத பாகிஸ்தான் அவரை ஒருசேர வணங்கியது

அந்த ரூத் கடந்த 10ம் தேதி காலமானார், அவருக்கு பெரும் அரசு அஞ்சலி செலுத்திய பாகிஸ்தான், இன்று அவருக்கு அந்நாட்டின் மிக உச்சவிருதான "நிஷான் இ பாகிஸ்தான்" அதாவது பாரத ரத்னாவிற்கு இணையான விருதை வழங்கி கவரவத்திருக்கின்றது.

மதர் தெரசாவிற்கு இந்தியா பாரத ரத்னா கொடுத்தது பெரும் விஷயம் அல்ல, ஆனால் மதவாத பாகிஸ்தான் இந்த அளவில் செய்திருப்பதுதான் பெரும் விஷயம்

நாளொரு குண்டுவெடிப்பு நடத்தும் கொடூர பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கூட ரூத்தினை வணங்கியிருக்கின்றார்கள்.

கல்லுக்குள் ஈரம் என்பது போல, பாகிஸ்தானிடமும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

கிறிஸ்தவ தொண்டு என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என சொல்லி சென்றவர்கள் தெரசாவும், இந்த ரூத்தும் இவர்களை கண்டும் தமிழக அழிச்சாட்டிய கிறிஸ்தவர்கள் திருந்துவார்கள் என நினைக்கின்றீர்கள்?

இல்லை, அவர்கள் செய்தது தொண்டு, இவர்கள் செய்வது பிழைப்பு

பிழைப்புவாதியின் சத்தம் எப்பொழுதும் அதிகமாகத்தான் இருக்கும், உண்மை கிறிஸ்தவர்களின் ஒரே நோக்கம் தொண்டு மட்டுமே...

இந்திய, பாகிஸ்தானிய தெரேசாக்கள் அந்த வகை, அது தெய்வங்களின் வரிசை.













 


 

No comments:

Post a Comment