Monday, August 28, 2017

அஜித்தின் விவேகம்...




Image may contain: one or more people, people standing and textஅஜித் பட விமர்சனத்திற்கு லாரன்ஸ் , பிரகாஷ் , விஜய் மில்டன் உட்பட பலர் கண்டனம்


ஓஹோ..அதாவது காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் ஒன்றுமே சொல்ல கூடாதா?


காசு கொடுத்து வாங்கும் இட்லி சரியில்லை என்றால் உண்பவன் துப்பத்தான் செய்வான், காசு கொடுத்து வாங்கும் ஆடை கிழிந்திருதால் அவன் கத்தத்தான் செய்வான்





ஏதோ இவர்கள் இலவச கலைச்சேவை செய்வது போலவும், அதனை எல்லோரும் குறை சொல்வது போலவும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

அஜித்குமாரின் ஸ்பெஷாலிட்டியே புதுமுக இயக்குநர்களுக்கு அவர் கைகொடுத்தார் என்பதுதான். அவரால் வாழ்வுபெற்ற இயக்குநர்கள் உண்டு

அவர்களுக்காக அஜித் சவால் எடுத்தார், அந்த அஜித்குமார் வாழ்த்தபடவேண்டியவர்

ஆனால் இப்பொழுது தன் ஜால்ராபாடும் , தனக்கு சிங்கி அடிக்கும் விஷ்ணுவர்தன், சிவா போன்றோரின் புகழ்ச்சிபுகையில் சிக்கி ஒரு மாதிரி அலைகின்றார்

இந்த அஜித்தினைத்தான் சாடுகின்றோம்

இந்த சிவா, விஷ்ணுவர்த்தன் போன்ற ஒரு மாதிரியான இம்சைகளிடம் இருந்து அஜித்தை மீட்டெடுங்கள், அதன் பின் விவேகம் படத்தினை விமர்சிப்பவனை பற்றி சொல்லுங்கள்.

மொக்கை படத்தை விமர்சிப்பது தவறென்றால், அதுவும் காசு கொடுத்து பார்த்த படத்தினை விமர்சிப்பது தவறேன்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்துகொண்டே இருப்பான் காசு கொடுத்து படம் பார்த்தவன்.

இனி காசு கொடுத்து நாங்கள் பார்க்கமாட்டோம், நீங்களே நடித்து நீங்களே பார்த்துகொள்ளுங்கள் போங்கடா... என எல்லோரும் கிளம்பிவிட்டால் இந்த கலைகூட்டம் என்ன செய்யும்?

ஆனாலும் படத்தில் இம்மாதிரி வசனம் சூப்பர்..

"நான் யார்னு என் முன்னால நிக்கிறவங்கதான் முடிவு பண்ணனும்" இதெல்லாம் வசனமா?

ஒருவேளை அஜித் முன்னால் சன்னிலியோன் நின்றால் இதற்கு அர்த்தம் என்ன?

தன் படம் எல்லோருக்குமான படம் என்று அஜித்குமார் மாறினால் அவருக்கு நல்லது

இது என் ரசிகர்களுக்கான படம் என மட்டும் சொல்வார் என்றால் அவர் இன்னொரு சிம்பு ஆவதை காலத்தால் தடுக்க முடியாது.










Image may contain: 2 people, people standing and beardஒரு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கூடியிருந்த பொழுது "எங்களை மிரட்டுராங்கய்யா.. என பொது இடத்தில் கலைஞரிடம் சொன்ன அஜித்தை நோக்கி (ஏன் அதனை கலைஞரிடம் தனியாக சொல்ல கூடாதா?) இப்பொழுது பல கேள்விகள்


சாரு உட்பட பலர் " எங்களை மிரட்டுராயங்கய்யா" உங்கள் ரசிகர்கள் என சொல்லும் பொழுது அஜித்திடம் சத்தமே இல்லை.


எப்பொழுதோ ஒருமுறை என் ரசிகர்கள் அத்துமீறினால் மன்றத்தை கலைப்பேன் என அவர் சீறியதகா நினைவு


இப்பொழுது ஆளாளுக்கு "எங்களை மிரட்டுறாங்கய்யா" என அஜித்திடம் புலம்பினாலும் மனிதர் மகா அமைதி.


ஆக அரசியல்வாதி ஆகிகொண்டிருக்கின்றார் அவர், விரைவில் இது எதிர்கோஷ்டி விஜய் ரசிகர்களின் சதி என மட்டும் சொல்ல்விட்டால் உறுதி செய்து கொள்ளலாம்.























 




 


No comments:

Post a Comment