Sunday, August 27, 2017

இன்றைய தமிழகம்...







நான் நினைத்திருந்தால் சசிகலா என்னை முதல்வராக்கியிருப்பார், ஆனால் நான் தான் ஆகவில்லை : தினகரன்


அதாவது திண்ணையில் கிழவர்கள் அமர்ந்து கொண்டு, அந்த காலத்திலே நான் கட்ட வேண்டிய பெண் அது என எங்கோ இருக்கும் கிழவினையினை பார்த்து சொல்வது போல அன்னார் சொல்லிகொண்டிருக்கின்றார்.


சசிகலாவே முதல்வராக ஆசைபட்டு, விழா பந்தல் எல்லாம் போடபட்டு, பன்னீரை கழுத்தைபிடித்து விரட்டி, கூவத்தூரில் பாசறை அமைத்து என்னவெல்லாம் செய்தார், பின் வழக்கு வாள் வீசபட்டு அம்மையார் சிறைக்கு சென்றார்





பின் ஆர்.கே நகரில் வென்று முதல்வராகலாம் என திட்டமிட்ட தினகரன் திகாருக்குத்தான் செல்ல விதி இருந்தது.

நடந்த சம்பவம் அப்படி இருக்க, இவர் ஏதோ விட்டுகொடுத்தது போல பேசிகொண்டிருக்கின்றார்.




 






விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசித்தவர் மீது நடவடிக்கை எடுக்க ராகவா லாரன்ஸ் கோரிக்கை


அதாவது இந்த விவேகத்தை விட ஏதோ ஒரு மொக்கை படத்தை லாரன்ஸ் எடுத்திருப்பார் போல, அதனை பிரித்து மேய்ந்துவிடுவார்கள் எனும் அச்சம் வந்திருக்கலாம்


வரும் முன் காக்க நினைக்கின்றாராம்..






ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகர்: தமிழகக் காவல்துறையை புகழ்ந்த முதல்வர் பழனிசாமி


இந்த ராமஜெயம் கொலைவழக்கு என்னாயிற்று என முதல்வரிடம் கேட்டாலும் பதிலிருக்காது. ஒருவேளை அது ஸ்காட்லாந்து யார்டாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமோ என்னமோ?


இப்பொழுது திடீரென தமிழக காவல்துறையினை பழனிச்சாமி கொண்டாடும் மர்மம் என்ன?





சசிகலாவினை கட்சியினை விட்டு நீக்கினால் கலவரம் வெடிக்கும் என சசிலலா ஆதரவாளர் மிரட்டும் நிலையில், எப்பொழுதும் அதிமுகவில் குத்துசண்டை நடக்கும் எனும் நிலையில் ஏன் பழனிச்சாமி இப்படி சொல்ல வேண்டும்?

ஆக ஏதோ நடக்க போகின்றது, எது நடந்தாலும் காவல்துறை கண்டுபிடித்து தடுத்துவிடும் என அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்குமோ??





 




பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன்


இனி நாகர்கோவிலை தொடர்ந்து, நெல்லையும் பாஜகவிற்கு என்பது முடிவாயிற்று.


ஆனால் இப்பொழுது அதிமுகவில் இருந்தால் என்ன? பாஜகவில் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்றுதானே?





பின்னர் ஏன் இவர் தனியாக இணைந்தார்?





எங்களை கடவுளை தவிர யாரும் மிரட்ட முடியாது, பணம் பாதாளம் வரை பாயாது : தினகரன்


அதாவது கடவுளை தவிர எல்லோரையும் மிரட்டுவோம் என்பது அதன் மறைமுக பொருள், அது பழனிச்சாமிக்கானது, நமக்கென்ன?


ஆனால் பணம் பாதாளம் வரை பாயாது என சொல்கின்றார் அல்லவா? ஆயிரம் இருந்தாலும் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தாலும் மீட்க முடியாத சோகத்திற்கு எடுத்துகாட்டாய் சிறை சென்றவர்.




அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.







 

No comments:

Post a Comment