Wednesday, July 26, 2017

கார்கில் மீட்பில் பலியான நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்





Image may contain: 5 people, people smiling, outdoor

போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று.


மிக வலுவாக காலூன்றிய பாகிஸ்தானை நாம் போட்டு அடித்த நாள் இது, ஆப்கனை கைபற்றிய தாலிபன்களும் ஐஎஸ்ஐ வழிகாட்டலில் ஊடுருவியிருந்தார்கள்


உண்மையில் அது மிகபெரிய போர், அந்த போரில்தான் இந்திய ராணுவம் பெரும் வெற்றிபெற்றது, மறுபடியும் பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தநாள்





அப்படி அந்த கார்கிலை மீட்க தேவைபடும் ராணுவம் அதன் பின் அப்பக்கம் செல்ல கூடாதாம், செல்லாவிட்டால் என்ன ஆகும் அதேதான் அதே ஊடுருவல் ஆக்கிரமிப்பு, அதே சண்டை.

இப்படி காஷ்மீரை இந்திய ராணுவம் காப்பதன் பெயர்தான் ராணுவ ஆக்கிரமிப்பாம், இதனை சொல்ல கூட்டமும், பேரணிகளும் வேறு

இதனை எல்லாம் இங்குள்ள மனித நேய போராளிகளுக்கு தெரியுமா என்றால் தெரியும், பின்னர் ஏன் சாடுகின்றார்கள் என்றால் அப்படி காஷ்மீரிலிருந்து பின் இந்தியாவிலிருந்தே இந்திய ராணுவத்தை விரட்டிவிட்டால் இத்தேசம் உடையுமாம், ஈழநாடு, திராவிட நாடு, தனி தமிழ்நாடு எல்லாம் கிடைக்குமாம்

அப்படித்தான் ஏதாவது அர்த்தமில்லாமல் பேசுவார்கள்

கார்கில் மீட்பில் பலியான எமது வீரர்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தி, இந்நாளை நினைவு கூர்வோம்

வெள்ளிபனிமலை மேலுலவுவோம்.. என வரிகளுடன் கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்

வந்தே மாதரம்...ஜெய் ஹிந்த்"













 


 

No comments:

Post a Comment