Wednesday, July 26, 2017

வெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரம்



Image may contain: 2 people, people standing and textவெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரத்தில் 53 போராளிகள் கொல்லபட்டிருந்தனர், மிக கொடூரமாக கொல்லபட்டனர்,


அதுவும் குட்டிமணியின் கண்களை தோண்டியெடுத்து கொன்றிருந்தனர் ஏன் அவ்வளவு கோபம்?


குட்டிமணி குழுதான் முதன் முதலில் ஆயுதம் எடுத்து சிங்களனை மிரட்டியது, திருப்பி அடிக்க அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள்


அந்த கும்பலில் 11 வயதில் இணைந்தவர்தான் பிரபாகரன், அன்று அவருக்கு இருந்த வேலை துப்பாக்கியினை துடைத்து வைப்பது


மிகபெரும் துணிச்சலான தாக்குதலை எல்லாம் குட்டிமணி நடத்தினார், பெரும் பெயர் அவருக்கு இருந்தது, இந்த குழு தொடங்கிய இயக்கம்தான் டெலோ


இந்த டெலோவில் இருந்ததுதான் பிரபாகரனும், சபாரத்தினமும்


பிரபாகரனின் அடாவடியான போக்கு அன்றே குட்டிமணிக்கு பிடிக்கவில்லை, விரட்டபட்டார் பின் செட்டி எனும் கொள்ளையனிடம் உறுப்பினரானார் பிரபாகரன்


செட்டியும் போராளி, ஆனால் ஒரே விஷயம் போராட்டத்திற்கு என எடுக்கு பணத்தை எல்லாம் தானே சுருட்டிகொள்வார் செட்டி


இதன்பின் குட்டிமணிக்கு பெயர் அதிகரிக்க, மறுபடியும் வந்து சேர்ந்தார் பிரபாகரன், தன் விசுவாசத்தை காண்பிக்க செட்டியினையே கொன்றார்


Image may contain: 1 personமிக தீவிரமான பிரபாகரனின் போக்கு தங்கதுரைக்கும் பிடிக்கவில்லை, தங்கதுரை நிதானமானவர், நல்லா அறிவாளி


அரசு வங்கிகளை கொள்ளையடிக்கவேண்டும் என தங்கதுரை சொன்னால், தமிழர் அடகுகடையினையும் அடிக்கவேண்டும் என சொல்வார் பிரபாகரன்


அக்குழுவில் பிரபாகரனின் முட்டல் மோதல் தொடர்ந்தது, இந்நிலையில்தான் நீர்வேலி வங்கிகொள்ளையில் சிங்களன் தேட இந்தியாவிற்கு தப்ப மிக ரகசியமான இடத்தில் தங்கியிருந்தனர் குட்டிமணியும், ஜெகனும்


அப்பொழுதுதான் தகவல் கிடைத்து சிங்களன் சுற்றிவளைத்தான்.


இந்த தகவலை தன் கும்பலை சேர்ந்த ஒருவன் தான் சிங்களனுக்கு சொன்னான் என பின்னர் குட்டிமணிக்கு தெரிந்தது


அந்த துரோகி யார் எனும் சர்ச்சையதான் சபாரத்தினத்திற்கும், பிரபாக்ரனுக்கும் வெடித்தது


விஷயம் ஒன்றுமில்லை, இவர்களை தள்ளிவிட்டால் யார் தலைவன் எனும் போட்டியில் நடந்த துரோகம் அது


கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்பொழுது குட்டிமணியினை நாடாளுமன்ற உறுப்பினராக்க தயார் என அறிவித்தார் அமிர்தலிங்கம், அவ்வளவு ஆதரவு பெருகிற்று


இந்த தீவில் இருநாடுகள் சாத்தியம் என கோர்ட் அதிர முழங்கியவர் தங்கதுரை, ஈழவரலாற்றில் கோர்ட்டில் அவர் பேசிய பேச்சு மிக உணர்ச்சிகரமானது


நான் சாகின்றேன், ஆனால் என் கண்களை எடுத்து ஒருவருக்கு பொருத்துங்கள், அவர்கள் மூலம் பின்னாளில் மலரும் ஈழம் காண்பேன் என அதிரடியாக சொன்னான் குட்டிமணி


இந்த மாவீரர்கள்தான் வெலிகடை சிறையில் இருந்தனர் , தூக்கு விதிக்கபட்டாலும் தப்பியோ அல்லது அரசியல் நெருகடியிலோ இவர்கள் வெளிவரும் வாய்ப்பு இருந்தது


அப்படி வந்து குட்டிமணி தன்னை காட்டிகொடுத்தவன் யார் எனும் விசாரணையில் இறங்கினால்...


இந்நிலையில்தான் புலிகளின் ராணுவம் மீதான‌ அதிரடி தாக்குதலும் கொழும்பு கலவரமும் வந்து, வெலிக்கடை சிறையிலும் தொடர்ந்தது


கைதிகள் எனும் பெயரில் சிங்கள ரவுடிகள் உள்ளே அனுமதிக்கபட்டும் அந்த குட்டிமணி கோரகொலை நடந்தது, இந்த கண்கள் பார்க்க ஈழம் வேண்டுமா என்றுதான் அவர் கண்களை பிடுங்கினார்கள்


இந்த கோரத்திற்கு பின்புதான் போராளிகளுக்கு பயிற்சி, அகதிகளுக்கு பாதுகாப்பு என இந்தியா களமிறங்கி பின் புலிகளால் எல்லாம் நாசமாயிற்று


புலி, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் என பொங்குபவர்கள் இந்த மாவீரன் குட்டிமணிக்கு என்றாவது அஞ்சலி செலுத்தியதுண்டா?


ஏன் அந்த பிரபாகரனே எந்த இடத்திலும் தங்கதுரை, குட்டிமணியினை பற்றி சொல்லமாட்டார், ஏன் என்றால் அன்றே பிரபாகரன் தலையில் தட்டியவர்கள் அவர்கள்


தன்னை வளர்த்த அவர்களை பற்றி ஒருநாளும் பிரபாகரன் சொன்னதில்லை, ஈழத்திற்காக உயிரை விட்ட அவர்களை பற்றி மூச் விட்டதுமில்லை, அதனை விடமுக்கியன் இன்னொருவர் பேச அனுமதிப்பதுமில்லை


பாகுபலி மன்னன் போல அவனை திட்டமிட்டு மறைத்தனர் புலிகள், பின் மகுடம் சூடி அதுவும் நாசமாயிற்று


அந்த மாவீரன் குட்டிமணியினை நாம் நினைத்துகொள்ளலாம், இந்த கோரதாண்டவத்தால் செத்த தங்கதுரையின் மனைவிக்கு எம்ஜிஆர் சென்னையில் வீடு எலலாம் அன்றொரு நாள் வழங்கியிருந்தார்


இதனை எல்லாம் தமிழகத்தில் எந்த ஈழ உணர்வாளனும் பேசமாட்டார்கள் மாறாக முள்ளிவாய்க்கால் என வங்ககடலில் மெழுகு பிடிப்பார்கள், சீமானும் வைக்கோவும் பிரபாகரன் என ஒப்பாரி வைப்பார்கள்


இவர்கள் குட்டிமணியினை மறந்த பிரபாகரனை விட மோசமானவர்கள்


அந்த மாவீரர்களான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட 53 பேருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்














 


 

No comments:

Post a Comment