Friday, July 21, 2017

கமல் பிரச்சினை வெடித்தாலும் வெடித்தது .....


Image may contain: 1 person, smilingகமல் பிரச்சினை வெடித்தாலும் வெடித்தது ஆளாளுக்கு அபத்தமான கருத்துக்களை சொல்ல தொடங்கியாயிற்று


கமல் நடிகர் என்றார்கள், ராமசந்திரன் என்ன‌ பேராசிரியரா? ஜெயலலிதா என்ன ராணுவ தளபதியா என்றபின் அதனை பேசவில்லை


அதன் பின் கமலுக்கு ஒரு மனைவி அல்ல என்றார்கள், ஏன் ஜாணகி என்பவரின் முதல் கணவர் பெயர் என்ன? ஜெயலலிதா கோயிங் ஸ்டடி சமாச்சாரம் என்றபின் சரி சரி விட்டுவிடலாம் என்றார்கள்


இப்பொழுது அடுத்த பாயிண்டாம், அதாவது ராமசந்திரன் அக்காலத்திலிருந்து அரசியல்வாதியாம், ஜெயலலிதாவும் அப்படியாம் ஆனால் கமலும் ரஜினியும் உடனே குதிக்க ஆசைபடுவது தவறாம்


திமுக தொடங்கும்பொழுது ராமசந்திரன் எங்கிருந்தார்?, திமுக தன் தீரமிக்க போராட்டம் குலகல்வி திட்டத்தை எதிர்த்து நடத்தும்பொழுது அவர் பானுமதியோடு "மாசில்லா உண்மை காதலி" பாடிகொண்டிருந்தார்


திமுக இந்தி எதிர்ப்பினை போர்குணத்தோடு நடத்தியபொழுது அவர் கோவாவில் ஜெயலலிதாவோடு ஆடிகொண்டிருந்தார், ஆம் ஜெயலலிதாவோடு


என்று திமுக அரசியலில் அந்த சனியன் இருந்தது?


பின் அண்ணா முன் கட்சியில் இணைந்ததும் கட்சி அவரை பிரச்சாரத்திற்கு அழைத்ததும்தான் நடந்தது, பிரச்சாரம் செய்துவிட்டு அவர் நடிக்க சென்றுவிடுவார், அவ்வளவுதான்


பின் அவர் சுடபட்டபொழுது திமுக அரசியலாக்கிற்று, சரி அந்த சாத்தானாவது இது அரசியல் சர்ச்சை இல்லை என் தனிபட்ட பிரச்சினை என சொன்னதா? இல்லை இதுதான் சாக்கு என படுத்துகொண்டது


பின் அண்ணா இறந்தபின், இந்திராகாந்தி மிரட்டியபின் கட்சி கணக்கு என்னாயிற்று என கிளம்பியது அந்த சாத்தான், சரி அதிமுக எனும் கட்சியின் கணக்கினை என்றாவது அது காட்டிற்றா என்றால் இல்லை


இதுதான் ராமசந்திரன் அரசியல் கதை


ஜெயா நிலை என்ன?


ராமசந்திரன் கட்சி தொடங்கும்பொழுது ஜெயா அரசியலில் இல்லை, அவர் பல சங்கடங்களை கடந்து வந்தபொழுதும் ஜெயா ஐதரபாத்தில் ஏதோ ஸ்டடி செய்துகொண்டிருந்தார்


பின் சரோஜாதேவி அரசியலுக்கு வரமறுக்க வலுகட்டாயமாக திணிக்கபட்டவர் ஜெயா, பின் என்னவெல்லாமோ நடந்து ராஜிவ் கொலையோடு அவர் அரசியல் வாழ்வு தொடங்கிற்று


ஆக ராமசந்திரனும், ஜெயாவும் பெரும் அரசியல்வாதிகள் அல்ல , கொள்கையாளர்கள் அல்ல, பெரும் போராட்டம் நடத்தியவர்களும் அல்ல பொதுமக்களுக்காக துரும்பும் கிள்ளியவர்கள் அல்ல,


மாறாக சினிமா புகழில் உருவானார்கள்


இவர்கள் மட்டும் திடீரென அரசியலுக்கு வரலாமாம், ஆனால் கமல் ரஜினி வரகூடாதாம்


அந்த விஜயகாந்த் என்ன சுதந்திரபோராட்ட தியாகியா? அவர் கட்சியோடு ஏன் கூட்டணி வைத்தார்கள்?


குண்டுகல்யாணம் முதல் விந்தியா வரை ஒரு கோஷ்டி வைத்திருந்தீர்களே அது எதற்கு? அவர்கள் எல்லாம் பொருளாதார மேதைகளா?


கமல் திடீரென அரசியலுக்கு வருகின்றார் என குதிப்பவர்கள், "சசிகலாவே வா சரண்டைந்தோம் வா" என ஜெயா ஆட்சிக்குபின் அவர் காலில் விழுந்து அழைத்த ரகசியம் என்ன?


சசிகலா என்ன பிரதமராக இருந்தாரா?


அக கமல் திடீரென அரசியலுக்கு எப்படி வரலாம் என்பதெல்லாம் அபத்தமான கேள்விகள் அதுவும் கொஞ்சமும் கொள்கையும், கோட்பாடும் அற்ற அதிமுகவினர் கேட்பதுதான் பெரும் கொடுமை


ஒருவேளை கமலஹாசனை எதிர்க்கவேண்டுமானால் அந்த தகுதி திமுக எனும் ஒரு கட்சிக்குத்தான் இருக்கின்றது, அது நடத்திய போராட்டமும் அது கடந்த பாதையும் அப்படி.


ஆனால் அவர்கள் மிக அமைதியாக கமலஹாசனை வரவேற்கின்றார்கள் ஏன்? அதுதான் திமுக‌


தமிழகத்தின் அநியாயங்களை யார் கேட்டாலும் அவர்களை திமுக ஆதரிக்கும், அதன் அரசியல் அன்றிலிருந்தே அப்படி


சினிமாக்காரரான ராமசந்திரனும் ஜெயாவும் சீரழித்த அரசியலை அதே சினிமாக்காரரான கமல் சரிசெய்தால் நல்ல விஷயம் அல்லவா?


சினிமாவால் கெட்ட தமிழ்நாடு சினிமாவால் சரியாக கூடாதா?


பின் ஏன் எதிர்க்கின்றார்கள்? விஷயம் இதுதான்


மிஞ்சி போனால் கொஞ்சநாள் அதன் பின் அதிமுக கவுன்சிலர் பதவிக்கு வந்தாலே பெரிய விஷயம்,


இருக்கும் வரை சம்பாதிக்க வேண்டும். அறையில் அவசரமாக திருடுபவன் குறுக்கே யார் வந்தாலும் கொல்ல துணிவான் அல்லவா? அதே தான்.


ஆனால் இந்த அதிமுகவினர் இப்படி எல்லாம் சீண்டி ஒன்றும் ஆகாது, அதனால் இப்படி கமலை திட்ட திட்ட அவர்களின் அசிங்க முகம் ஒவ்வொன்றும் வெளிவந்துகொண்டே இருக்கும்


அதனால் அவர்கள் ஒன்று செய்யலாம், ஜெயா, சசி, மோடி என பல கால்களில் விழுந்த அவர்கள் வழக்கம் போல் வெட்கமே இல்லாமல் இப்படி சொல்லிவிட்டு கமலஹாசன் காலிலும் விழலாம்...


"அய்யா கமலஹாசா இன்னும் 4 வருடம் ஆண்டுவிட்டு ஓடிவிடுகின்றோம், அதன் பின் நிச்சயம் வரமாட்டோம் இந்த 4 வருடமும் எங்களை ஆளவிடய்யா, உன் காலில் விழுந்து கேட்கின்றோம்" என தாரளமாக கேட்டுவிடலாம்.












No comments:

Post a Comment