Tuesday, July 25, 2017

இதாம்ல‌ திருநெல்வேலிக்காரன், அவன் கிட்ட முடியுமால...

நெல்லையில் கலெக்டர் அன்புசுவர் எழுப்பியிருக்கின்றார், அதாவது வீணாக எறியும் துணி முதல் உணவு வரை அந்த சுவரின் அறையில் வைத்துவிடலாமாம், தேவைபட்டோர் எடுத்துகொள்வர்


நல்ல திட்டம்தான், குப்பை தொட்டியில் எறியவேண்டியவற்றை இந்த சுவரில் வைக்கின்றோம், தேவையிருப்பவர்கள் பயன்படுத்தலாம்


ஆனால் அதிலும் சில சிக்கல் உண்டு, உணவினை விடுங்கள், பழைய ஆடைகளை எடுத்து சென்று பின் சலவை செய்துவிற்றுவிடும் கூட்டத்திற்கு, பழைய காலணிகளை பழுதுபார்த்து காசாக்கும் கூட்டத்திற்கு இது வாய்ப்பாகிவிட கூடாது




முறையாக பலனளித்தால் அருமையான திட்டம்


இந்த சுவர் திட்டடத்திற்காக கலெக்டரை பாராட்டலாம், ஆனால் முந்தைய கலெக்டர் கருணாகரன் பெரும் நடவடிக்கை எழுத்தவர், எதிர்க்கவே முடியாது வைகுண்டராஜனை எல்லாம் கதற வைத்து, அவரின் பொட்டல்காட்டு மில்லை கூட இடிக்க துணிந்தவர்


வைகுண்டராஜனின் காம்பவுண்ட் சுவர் மீது கைவைத்த ஒரே கலெக்டர் இன்றுவரை அவர்தான், இன்றுவரை என்ன? என்றுமே இனி வரலாற்றில் அவர் ஒருவர்தான்.


பல கால்வாய்களை மீட்டார், பெரும் ஆக்கிரமிப்புகளை எல்லாம் அட்டகாச துணிவோடு விரட்டினார்


அவர் எடுத்த நடவடிக்கையினை இந்த கலெக்டரும் தொடர்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது


நிச்சயமாக அதனை தொடர்ந்திருக்கவேண்டும், ஆனால் என்ன நடந்த்தோ தெரியாது, இந்த கலெக்டர் நிதானமாகிவிட்டார்


ஒருவேளை அந்த கலெக்டர் பட்ட சில மறைமுக அடிகளை கவனித்திருப்பாரோ, சக தொழிலாளியின் வலி இன்னொரு தொழிலாளிக்குத்தான் தெரியும்


ஆதலால் நெல்லையில் கருணாகரன் பாணியில் "வில்லங்க‌ சுவர்" இடிப்பதெல்லாம் சாத்தியமில்லை, நம்மை இடித்துவிடுவார்கள் என "அன்புசுவர்" கட்டிவிட்டார்.


சுவர் இடிக்கவந்த கலெக்டரை விரட்டிவிட்டு சுவர் கட்டும் கலெக்டரை அமர்த்திவிட்டார்கள் அல்லலா?


"இதாம்ல‌ திருநெல்வேலிக்காரன், அவன் கிட்ட முடியுமால..."



No comments:

Post a Comment