Monday, July 24, 2017

ஆறுகுட்டி எம்.எல்.ஏ பழனிச்சாமி அணியில் இணைந்தார்




Image may contain: 1 personபன்னீர்செல்வம் அணியின் ஆறுகுட்டி எம்.எல்.ஏ பழனிச்சாமி அணியில் இணைந்தார்.


திருச்சி அதிமுக மாநாட்டில் ஜெயா முன்னிலையில் கட்சியில் இணைந்தவர் நமீதா, பிரச்சாரம் எல்லாம் செய்தார், அதன் பின் சத்தமே இல்லை


அம்மா ஆதரவு பெற்ற நம்மீதாவினை ஆதரிப்பீர் என அரசியல் செய்யும் ஆசை பன்னீருக்கு இருந்திருக்கலாம், ஆறுகுட்டி குட்டிகரணம் அடித்து ஓடியபின் ஆதரவினை பெருக்க பன்னீரும் நமீதாவினை கொண்டுவந்தால் என்ன என யோசித்திருக்கலாம்





எல்லாம் நேற்றோடு போயிற்று, நமீதா அப்படி பேசிய பின்னும் பன்னீர் சேர்ப்பாரா?

ஒருவேளை பன்னீர் அணிக்கு நமீதா வந்து "திர்ச்சில ஜெலலிதாம்மா சொல்லுச்சு, பன்னீர் கூட இருண்ணு சொல்லுச்சு, நானும் இருந்திச்சு, அப்போவே சிலர் இடையிலே கை விட்டுச்சு.." என அவரின் தமிழில் சொன்னால் நாடு தாங்குமா?

பன்னீரின் மனைவியே பன்னீரை பிடித்து அந்த ராட்சதகிணறில் தள்ளிவிட மாட்டாரா?













 


 

No comments:

Post a Comment