Saturday, July 22, 2017

அங்கிள் சைமன் மகா நுட்பமாக கமலஹாசனை...





அங்கிள் சைமன் மகா நுட்பமாக கமலஹாசனை கையாள திட்டமிட்டு இருக்கின்றாராம், தன் அடிபொடிகளுக்கு மிக மிக அமைதியாக இருக்க சொல்லி போனில் சொல்லிகொண்டிருக்கின்றார்


அப்படி என்ன நுட்பம் வைத்திருப்பார்? கமலஹாசன் ரஜினியோடு இணைந்து நடித்தவர் அதனால் செல்லாது, செல்லாது என சொல்வாரோ?


அல்லது புன்னகை மன்னன் படத்தில் சிங்கள பெண் வேடத்தில் நடித்த ரேவதியுடன் ஆடியது தவறு அதனால் கமலஹாசனை நம்ப முடியாது என சொல்வாரோ?





அல்லது தெனாலி படத்தில் ஈழதமிழை பேசினார், ஆனால் ஈழதமிழர் பிரச்சினைபற்றி பேசவில்லை என நுட்பமாக ஏதும் சொல்வாரோ??

அங்கிள் அடுத்த போனில் சொல்வார், அதுவரை பொறுத்திருப்போம்




 

 



 

No comments:

Post a Comment