Wednesday, July 26, 2017

நமது விசுவாசத்தை சோதிக்கின்றார்களாம்...

குஷ்பூ சில நாட்களாக அமைதியாக இருக்கின்றார், எந்த பிரச்சினையிலும் அவர் கருத்து சொல்லவில்லை, இது எதற்காக என பல அரசியல் நிபுணர்களும், முதிர்ந்த பத்திரிகை வித்தகர்களும் குழம்பி ஒரு சில கருத்துக்களை சொல்கின்றனர்


அதில் ஒன்று, இந்த கோஷ்டி சண்டை மிக்க, ஒரு அதிமுக உளவாளியினை தலைவராக வைத்திருக்கும் காங்கிரசிலிருந்து வெளியேறி அவர் பாஜக பக்கம் செல்லலாம் என சிலர் சொல்கின்றனர்


உடனே நம்மை நோக்கி கேள்விகள் பாய்கின்றன, "குஷ்பூ பாஜகவிற்கு வந்தால் நீர் பாஜக கட்சியினை ஆதரிப்பீரா?"





நமது விசுவாசத்தை சோதிக்கின்றார்களாம்...

அப்படி நடந்தால், நமது சங்கம் அதன் பொதுசெயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், சங்க சட்ட ஆலோசகர் என அனைவருமே பிஜேபியினை ஆதரிக்க தயார்

அது பிஜேபிதான் என்றல்ல, குஷ்பூ ஐ.எஸ் இயக்கம், தாலிபான் இயக்கம், அல்கய்தா என எதனை ஆதரித்தாலும் அதனை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.





எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல்: ஓ.பி.எஸ்


(அடுத்து ஜெயலலிதாவிற்கு கரன்சி அடிப்பார்களா? )


காசு, பணம், துட்டு மணி என்றே அலையும் கட்சியினர் இப்படித்தான் கோரிக்கை வைத்துகொண்டிருப்பார்கள், வேறு என்ன எதிர்பார்க்க முடியும்






ஜி.எஸ்.டி. பிரச்னை: தமிழகம் முழுவதும் ஆக.8-இல் கடையடைப்பு


ஆகஸ்டு 8ல் கடையினை அடைத்துவிட்டு ஆகஸ்டு 9ல் திறந்துவிடுவார்கள், நிரந்தரமாகவா அடைத்துவிடுவார்கள்?


இந்த ஒருநாள் ஓய்வின் பெயர் எதிர்ப்பு போராட்டம்.







 

No comments:

Post a Comment