Sunday, July 23, 2017

வினோதமாக கவனத்தை ஈர்த்தவர்கள்

"வினோதமாக கவனத்தை ஈர்த்தவர்கள்" என்றொரு நீயா நானா நிகழ்ச்சியினை கோபிநாத் நடத்திகொண்டிருக்கின்றார்


பல விதமான காமெடி கோஷ்டிகள் வந்து, நான் யார் தெரியுமா? என சீறிகொண்டிருக்கின்றன, சிரித்து முடியவில்லை


சில நேரங்களில் சீரியசான நிகழ்ச்சியினை நடத்தும் கோபிநாத்திற்கு என்னாயிற்றோ தெரியவில்லை, தமிழக அமைச்சரவை போல காமெடி நிகழ்ச்சி நடத்த கிளம்பிவிட்டார், சபாநாயகர் தனபாலை விட காமெடியில் கலக்குகின்றார்




இந்த பங்கேற்பாளர் முன்னால் சிரிக்காமல் இந்நிகழ்ச்சியினை நடத்துவது என்பதே பெரும் விஷயம்


எம்ஜிஆருக்கு கட்சி தொடங்கி கொடுத்தவன் நான், கலைஞருக்கு எழுத சொல்லி கொடுத்தவன் நான், என் பாடலை கண்ணதாசனும் வைரமுத்துவும் முத்துகுமாரும் திருடினார்கள் என்பது வரை அசால்ட்டாக சொல்கிறான்றார்கள்.


அணுகுண்டை கண்டு பிடித்தது நான், திருக்குறளை எழுதியது நான், ஹிட்லரை கொன்றது நான் என சிலர் பேசிவிடுவார்களோ என அச்சமாக இருக்கின்றது, அப்படிபட்ட வினோத மனிதர்கள் வந்திருக்கின்றார்கள்


நிகழ்ச்சி நடப்பது கீழ்பாக்கத்திலா என்றால் இல்லை, அதே விஜய் டிவி அரங்கம் தான்..


ஆனாலும் இந்த "வினோதமாக கவனத்தை ஈர்த்தவர்கள்" நிகழ்ச்சியில் ஒரே ஒரு குறைதான்


அங்கிள் சீமானும் இதில் கலந்திருக்க வேண்டும், அவர் இருக்க வேண்டிய வரிசை இதுதான்.






இப்பொழுதெல்லாம் யார் அரசு திட்டத்தை எதிர்த்டு போராடினாலும் கைது செய்கின்றார்களாம், அது பேராசிரியராக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி


போராட கிளம்பினால் உடனே 4 வழக்கினை பாய்த்து தூக்கி உள்ளே வைத்துவிடுகின்றார்கள், இப்பொழுதுள்ள அரசு அவ்வளவு இறுக்கமாயிற்று


கொஞ்சம் யோசித்தால் ஜல்லிகட்டு பிரச்சினைக்கு பன்னீர் அரசு எவ்வளவு நிதானமாக செயல்பட்டிருக்கின்றது என்பது புரிகின்றது, நினைத்தால் தூக்கி போட்டு மிதித்து அடக்க கூடிய போராட்டம்தான்,




ஆனால் பன்னீர் அரசு விரும்பவில்லை


அம்மா சூலி ..ச்ச்சே ஜூலி, அந்த பன்னீர் செல்வத்திற்கு எங்காவது ஒரு கோயில் கட்டவில்லை என்றால் உனக்கு கொஞ்சமேனும் நன்றியில்லை என அர்த்தம்..









No comments:

Post a Comment