Friday, July 21, 2017

அவானி மூவிஸின் இந்த "மீசையினை முறுக்கு" படம் வெற்றி பெற வாழ்த்துவோம்




Image may contain: 1 person, textஇது யார் நடித்த படம்? நடிகர் யார்? நடிகை யார்? இயக்குநர் யார்? என்ன கதை என்பதெல்லாம் தேவையே இல்லை


இதில் ஹிப்காப் தமிழாவோ அல்லது டண் டண் ஆப்ரிக்கனோ நடித்திருந்தாலும் பார்த்தே தீரவேண்டும், கதை யாருக்கு வேண்டும்? அது சிம்பு படத்து கதையோ அல்லது சிங்கி அடிக்கும் கதையோ பிரச்சினையே இல்லை


காரணம் இந்த படம் குஷ்பூவின் கம்பெனியால் தயாரிக்கபட்டிருக்கின்றது, அதனால் எப்படி இருந்தாலும் தலைவிக்காக இந்த படத்தினை பலமுறை பார்த்தே தீரவேண்டும் என சங்கம் முடிவு செய்திருக்கின்றது





தலைவி தயாரித்த படம், 2.30 மணிநேரம் வெற்றுதிரையாக‌ ஓடுகின்றது என்றாலும், ஒரு கல் நடித்திருக்கின்றது என்றாலும் தவமாக தியானம் ஏற்றுகொள்பவர்கள்த்தான் தலைவியின் தொண்டர்கள்

இப்படத்தை மாபெரும் வெற்றிபடமாக்கி தலைவிக்கு வெற்றியளிப்போம் என சங்கம்Babu Rao , Chandran Kannan தலையில் சூடமேற்றி சத்தியம் செய்கின்றது

அவனியில் எந்தபடமும் பெறாத வெற்றியினை அவானி மூவிஸின் இந்த "மீசையினை முறுக்கு" படம்    பெற வாழ்த்துவோம்

சங்கத்தோரே, தலைவி ஆணையிடுகின்றார், அலைகடலென திரள்வீர் தியேட்டருக்கு, அவானியின் குஷ்பூ யார் என அவனிக்கு காட்டும் கடப்பாடு நம் எல்லோருக்கும் உண்டு





 


 

No comments:

Post a Comment