தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
அரசின் கடன் 4 லட்சம் கோடியாக இருக்கும் பொழுது இது அவசியமா?
இவர்கள் கிழிக்கும் கிழிக்கி இந்த சம்பளம் எதற்காக?
கூவத்தூரில் இருந்தற்கும், சின்னம்மா வாழ்க, தினகரன் வாழ்க என சொல்வதற்கும் அரசு சம்பளமா?
நிச்சயம் எதிர்கட்சியும் இதனைபற்றி பேசமுடியாது அவர்களிடமும் 80 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள், பேச விடமாட்டார்கள்.
ஆக கூவத்தூரில் கொடுப்பதாக சொன்னதை சம்பளத்தை ஏற்றி கொடுத்து சரிசெய்கின்றார்கள், நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் புசிவது போல எதிகட்சி எம்.எல்.ஏல்களுக்கும் லாபம்
தமிழ்நாடு நாசமாகிகொண்டிருக்க, விவசாயி கடன்களோடு தத்தளித்துகொண்டிருக்க ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கஜானாவினை பங்கு வைத்துகொண்டிருக்கின்றன
அரசியல் என்பது ட்விட்டரில் இல்லை- தமிழிசை
பின் என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்கள், மோடி, அமித்ஷா எல்லாம் டிவிட்டி கொண்டிருக்கின்றீர்கள்???
No comments:
Post a Comment